அவருடைய உயிர்த்தெழுதலின் நிரூபணம் 55-0410M 1. சகோதரன் நெவில், உங்களுக்கு நன்றி, காலை வணக்கம், நண்பர்களே. கர்த்தராகிய இயேசுவை ஆராதிக்கும்படி மீண்டும் இக்காலையில் இங்கே கூடாரத்தில் இருப்பது நன்மையானதாய் உள்ளது. இன்றைக்கு நம்மில் அநேகருக்கு இது நம்முடைய இரண்டாவது ஆராதனையாக உள்ளது. நாம் இங்கே அதிகாலையில் இருந்தபோது, கர்த்தர் ஓர் ஆச்சரியமான வழியில் நம்மை சந்தித்தார். நான் ஒரு சில நிமிடங்கள் சபையோரிடத்தில் பேசும்படியாக வந்தபோது, இன்னபடி பேச வேண்டும் என்று ஒரு பாடப்பொருளைக்கூட ஆயத்தப்படுத்தவில்லை. முதலாவது காரியம் உங்களுக்குத் தெரியும், நான் பிரசங்கிக்க வேண்டியதாயிருந்தது. நமக்கோ மிக நல்ல ஒரு—ஒரு நேரம் அங்கே உண்டாயிருந்தது. நாம் இதற்காக கர்த்தருக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். 2 இப்பொழுது இந்தச் சிறு கூடாரத்தில் இங்கே நமக்கு உட்காருவதற்குப் போதுமான இடமில்லாததற்கு நாம் வருந்துகிறோம், ஏனென்றால் ஜனங்கள் அந்தவிதமாக இங்கே நிற்க வேண்டியதாய் உள்ளது. எனவே நான் இதற்காக மிகவும் வருந்துகிறேன். ஆனாலும் இந்த நேரத்தில் நம்மால் செய்ய முடிந்ததெல்லாம் அவ்வளவுதான். ஆகையால் நாங்கள் உங்களை நீண்ட நேரம் பிடித்துவைக்க முயற்சிக்கமாட்டோம்; உங்கள் யாவருக்கும் ஒரு சிறு ஈஸ்டர் வாழ்த்துக்கள். இந்தக் காலையில் சுகவீனமுள்ள ஜனங்களுக்கு ஜெப அட்டைகள் கொடுக்கப்பட்டுவிட்டபடியால், நாங்கள் அவர்களுக்காக ஜெபிக்கப்போகிறோம். தேவன் நம்மை சந்தித்து, நம்மை ஆசீர்வதிப்பார் என்ற அந்த நோக்கத்திற்காகவே நாம் இங்கே இருக்கின்றபடியால், நாம் செய்கின்ற ஒவ்வொரு காரியத்திற்கும் கர்த்தர் தம்முடைய ஆசீர்வாதங்களை கூட்டுவாராக. 3 இப்பொழுது இன்றிரவு ஆராதனை ஞானஸ்நான ஆராதனையாய் உள்ளது. இதுவரை தண்ணீரில் முழுக்கு ஞானஸ்நானம் பெற்றிராத நீங்கள் அவ்வாறு ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ள வாஞ்சைக் கொண்டிருந்தால், ஏன், நாங்கள் உங்களை இங்கே இன்றிரவே அழைக்கிறோம். வந்து, ஆயத்தமாகுங்கள், உங்களுடைய ஞானஸ்நான வஸ்திரங்களையும் கொண்டு வாருங்கள், ஏனென்றால் நாங்கள் இன்றிரவே இங்கே ஞானஸ்நானம் என்ற விதத்தில் ஒரு மகத்தான ஆராதனையை எதிர்ப்பார்க்கிறோம். 4 இப்பொழுது இன்றைக்கு இது ஈஸ்டராயிருக்கின்றபடியால், ஒருவேளை உங்களில் அநேகர் ஏற்கனவே உங்களுடைய சொந்த ஆராதனைகளில் அல்லது இங்கே நடைபெற்ற சூரியோதய ஆராதனையில் இருந்திருக்கலாம். ஆயினும் நீங்கள் இந்த…எங்களுடைய இன்றைய ஆராதனையின் பாகத்தில் இருப்பதற்காக நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். 5 ஆனால் இக்காலையில் ஒரு ஈஸ்டர் பிரசங்கத்தைத் தொடரும்படியாக, நாங்கள் உங்களுடைய கவனத்தைப் பரிசுத்த யோவான் எழுதின சுவிசேஷம் 21-ம் அதிகாரம், 3-வது மற்றும் 4-வது வசனங்களின்மேல் வைக்குமாறு வேண்டுகிறோம். அதன் பின்னர் பரிசுத்த மாற்குவில்…இல்லை சரியாகக் கூறினால், பரிசுத்த லூக்கா, இருபது…இல்லை 49-வது அதிகாரம். ஒரு சில நிமிடங்கள் அதை வாசிக்க விரும்புகிறேன். முதலில் பரிசுத்த யோவான் 21-ம் அதிகாரம். சீமோன்பேதுரு மற்றவர்களை நோக்கி: மீன்பிடிக்கப்போகிறேன் என்றான். அதற்கு அவர்கள்: நாங்களும் உம்முடனேகூட வருகிறோம் என்றார்கள். அவர்கள் புறப்பட்டுப்போய், உடனே படவேறினார்கள். அந்த இராத்திரியிலே அவர்கள் ஒன்றும் பிடிக்கவில்லை. விடியற்காலமானபோது, இயேசு கரையிலே நின்றார்; அவரை இயேசு என்று சீஷர்கள் அறியாதிருந்தார்கள். 6 கர்த்தர்தாமே அந்த வார்த்தையின் பாகத்திற்கு தம்முடைய ஆசீர்வாதங்களைக் கூட்டுவாராக. பின்னர் லூக்கா 49-ம் அதிகாரத்தில்…27-ம் வசனத்திலிருந்து துவங்குவோம். மோசே முதலிய சகல தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்களெல்லாவற்றிலும் தம்மைக்குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார். அத்தருணத்தில் தாங்கள் போகிற கிராமத்துக்குச் சமீபமானார்கள். அப்பொழுது அவர் அப்புறம் போகிறவர்போலக் காண்பித்தார். அவர்கள் அவரை நோக்கி: நீர் எங்களுடனே தங்கியிரும், சாயங்காலமாயிற்று, பொழுதும் போயிற்று, என்று அவரை வருந்திக் கேட்டுக்கொண்டார்கள். அப்பொழுது அவர் அவர்களுடனே தங்கும்படி உள்ளே போனார். அவர்களோடே அவர் பந்தியிருக்கையில், அவர் அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப்பிட்டு, அவர்களுக்குக் கொடுத்தார். அப்பொழுது அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டு, அவரை அறிந்தார்கள்… 7 என்னே ஒரு முரண்பாடு! ஓர் இடத்தில் அவர்கள் அவரை அறிந்துகொள்ளவில்லை. ஆனால் இந்த இடத்திலோ அவர் செய்த ஒரு காரியத்தினால் அவர்கள் அவரை அறிந்துகொண்டனர். …உடனே அவர் அவர்களுக்கு மறைந்துபோனார். அப்பொழுது அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி: வழியிலே அவர் நம்முடனே பேசி, வேதவாக்கியங்களை நமக்கு விளங்கக்காட்டினபொழுது, நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லையா என்று சொல்லிக்கொண்டு, 8 இப்பொழுது நாம் ஜெபத்திற்காக சற்று நேரம் நம்முடையத் தலைகளை வணங்குவோம். 9 எங்கள் தயவுள்ள பரலோகப் பிதாவே, இந்தத் தெய்வீக ஐக்கியத்தின் உறுதிமொழியை உடையவர்களாயிருக்கும்படிக்கு, அவருடைய சிலுவையேற்றத்தின் பங்காளிகளாகவும், உலகத்தின் காரியங்களுக்கு அவரோடு சிலுவையிலறையப்பட்டு, நித்திய ஜீவனுக்கென்று மீண்டு புதியதாய் எழுப்பப்பட்டவர்களாய் இக்காலையில் இந்த உயிர்த்தெழுதலிலே கிறிஸ்துவின் பிரசன்னத்திற்குள்ளாக நாங்கள் ஒன்று சேர்ந்து கூடியிருக்கிற இந்த மகத்தான சந்தர்ப்பத்திற்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். இப்பொழுது இந்த நம்பிக்கை எங்களுக்குள் இருக்கிறது. 10 பண்டையத் தீர்க்கதரிசி கூறினது போன்றே, நாங்களும், “எங்களுடைய மீட்பர் உயிரோடிருக்கிறார் என்பதை நாங்கள் அறிவோம்” என்றே கூறுகிறோம். “சதாகாலங்களிலும் ஜீவிக்கிறவராய், உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய வலதுபாரிசத்திலே ஒரு பிரதான ஆசாரியராய், உபத்திரவத்தை ருசிபார்த்திருக்கிறவராய், எங்களுடைய அறிக்கையின்பேரில் வேண்டுதல் செய்யக் கூடியவராய் வீற்றிருக்கிறீரே.” நாங்கள் இதற்காக எவ்வளவாய் உமக்கு நன்றி செலுத்துகிறோம். மகத்தான சர்வவல்லமையுள்ள தேவனின் பிரசன்னத்தில் இன்றைக்கு எங்களைச் சுட்டிக்காட்டுகிற ஒருவர் எங்களுக்கு உண்டு என்பதை நாங்கள் நினைக்கும்பொழுது, எங்களுடைய இருதயங்கள் எங்களுக்குள்ளே கொழுந்துவிட்டு எரிகிறது. அவர் மரித்துவிடவில்லை, ஆனால் அவருடைய பிரசன்னத்தில் உயிரோடே வீற்றிருக்கிறார். அவர் எங்கும் எல்லாவிடத்திலும் பிரசன்னராய், எல்லாக் காரியங்களையும் அறிந்தவராய், சர்வ வல்லமைப் பொருந்தினவராய், எல்லாக் காரியங்களையும் செய்யக் கூடியவராய், எல்லாவற்றையும் அறிந்தவராய், என்றென்றைக்கும் பிரசன்னராயிருக்கிறார். இன்றைக்கு எங்களுடைய இருதயத்தில் நாங்கள் பற்றிக்கொண்டிருக்கிற இந்த மேன்மையான, மகிமையான சத்தியத்திற்காக நாங்கள் உமக்கு எவ்வளவு நன்றி செலுத்துகிறோம், அதை அவ்வளவு அருமையாய்ப் பற்றிக் கொண்டிருக்கிறோமே! 11 அவரோ அங்கே எங்களுடைய பலவீனங்களினால் பரிதபிக்கக்கூடியவராய் இருக்கிறார், ஏனென்றால் அவர் எங்களுக்காகப் பாடுபட்டு, எங்களுடைய நோய்களைக் கல்வாரியிலே சுமந்தார். நாங்கள் அதற்காகவும், இப்பொழுது நாங்கள் பெற்றுள்ள அந்த நேரடியான உறுதியை அறிந்துகொள்வதற்காகவும், இன்றைக்கு அதை அறிந்திருப்பதற்காகவும் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். அவர் உயிரோடிருந்துகொண்டு எங்களுக்காகப் பரிந்துபேசி, எங்களை நேசிக்கிறார். இது ஓர் உண்மையான ஈஸ்டராகும்படியாக இன்றைக்கு அவருடையப் பிரசன்னம் எங்களோடு தொடர்ந்து நீடித்திருக்கும்படி அனுமதிக்கமாட்டீரோ? 12 தேவனே, இந்தக் காலையில் உம்மை அறியாதிருக்கிறவர்களிடத்தில், அந்நியராயிருக்கிறவர்களிடத்தில் உயிர்த்தெழுதலில் கிறிஸ்துவை அறியாதிருக்கிறவர்களிடத்தில் அவர்தாமே மகத்தான முழு வல்லமையில் வந்து, அவர்களுடைய ஜீவியத்தின் பாவங்களை எடுத்துப்போட்டு, அதற்குப் பதிலாக தேவனுடைய நன்மையான காரியங்களை அவர்களுக்கு தந்தருள வேண்டுமென்று நாங்கள் ஜெபிக்கிறோம். கர்த்தாவே இதை அருளும். இந்த நாள் ஒவ்வொரு அவிசுவாசியையும் தெய்வீகப் பிரசன்னத்திற்குள்ளாக கொண்டுவருவதாக. 13 இன்றைக்கு இந்த மகத்தான ஞாபகச் சின்னத்தின் நினைவு விழாவாகத் தேசங்களினூடாக நடத்தப்பட்டுக்கொண்டிருக்கிற எல்லா ஆராதனைகளையும் ஆசீர்வதியும். 14 இப்பொழுதும் கர்த்தாவே நாங்கள் எங்களை உம்மிடத்தில் சமர்ப்பிக்கையில், உம்முடைய அப்பிரயோஜனமான ஊழியக்காரனான எனக்கு உதவி செய்யும். இங்குள்ள ஒவ்வொருவரையும் ஆசீர்வதியும். இந்த ஆராதனை முடிவுறும்போது, நாங்கள் “வழியிலே அவர் நம்முடனே பேசினபோது, நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லையா?” என்று அந்நாளில் அவர்கள் எம்மாவுவிலே கூறினதுபோல நாங்களும் கூறுவோமாக. கர்த்தாவே, இதை அருளும், ஏனென்றால் நாங்கள் இதை அவருடைய நாமத்திலே வேண்டிக்கொள்கிறோம். ஆமென். 15 தேவனுடைய மகத்தான நித்திய இரட்சிப்பின் திட்டத்தின் முன்னறிதலில், கடந்த காலத்தில் எப்படியாய், தேவன் மனிதனை தன்னை ஆராதிப்பவனாக இருக்கும்படி உண்டாக்கினபோது, அவர் அவனை அந்தவிதமாகவே இருக்கும்படி உண்டாக்கினார். எனவே அவனுக்கு ஆராதிக்கும்படியான ஒரு வாஞ்சை உண்டாயிருந்திருக்கும். எல்லா காலங்களினூடாகவுமே மனிதன் தனக்கும், தான் எங்கே போய்க்கொண்டிருக்கிறான் என்பதற்கும் இடையே தொங்குகிற காலத்தின் திரைக்கு அப்பால் உள்ளதை நோக்கிப் பார்க்க வாஞ்சித்து வந்துள்ளான். 16 கி.பி. 603-ம் ஆண்டு இங்கிலாந்து மன்னன், பரிசுத்த அகஸ்டீன் என்பவர் மூலம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப்பட்டான். அப்பொழுது அவன் ஒரு பெரிய கணப்படுப்பண்டையிலே (Fire place) ஒரு இரவு அமர்ந்து, இவனிடத்தில் கிறிஸ்துவைக் குறித்து பேசிக்கொண்டி௫க்கையில், ஒரு சிறு குருவி அந்த வெளிச்சத்தண்டைக்கு பறந்து வந்து, சற்று நேரம் சிறகடித்துப் பறந்து வட்டமிட்டு, பின்னர் மீண்டும் பறந்து போய்விட்டது. அப்பொழுது பரிசுத்த அகஸ்டீன் ராஜாவினிடத்தில் கூறினதென்னவென்றால், “அது எங்கிருந்து பறந்து வந்தது, எங்கே சென்றுவிட்டது?” என்று கேட்டார். மேலும், அவர், “அந்தவிதமாகவே ஒவ்வொரு மனிதனும் இந்த உலகத்திற்குள் வருகிறான். அவன் இங்கு வந்து சிறிந்து மனசாட்சியின் புலன்களில் நடந்தும், சரியாக, அவன் எங்கிருந்து வருகிறான் என்பதை அறியாமலிருக்கிறான். ஆனால் அவன் எங்கே போய்க்கொண்டிருக்கிறான் என்பதை அவனுக்கு கூறக்கூடிய புத்தகம் ஒன்று மாத்திரமே உண்டு, அதுதான் வேதாகமமாகும்” என்றார். அதன் மூலமாகவே ராஜா மனமாற்றமடைந்து தன்னுடைய ஜீவியத்தைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுத்தான். அதற்கு அடுத்தநாள் காலையில் அவரும், அவருடைய வீட்டாரெல்லாரும் கர்த்தரின் நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப்பட்டார்கள். 17 மனிதன் தன்னுடைய ஜென்ம சுபாவமான நிலையில், ஆவிக்குரிய காரியங்களைப் புரிந்துகொள்ள முடியாது—அவனால் புரிந்துகொள்ளவே முடியாது. அவைகள் ஆவிக்குரியப் பிரகாரமாய் நிதானிக்கப்படுகின்றன. 18 இப்பொழுது உங்களால் முடிந்தளவு நீங்கள் கவனமாய்க்கூர்ந்து கவனிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். இது கடினமாயுள்ளதையும், நீங்கள் நின்றுகொண்டிருப்பதையும், ஜனக்கூட்டம் மிகவும் நெருக்கமாயுள்ளதையும் நான் அறிவேன். ஆனாலும் வார்த்தைக்கு செவிகொடுக்க முயற்சியுங்கள், ஏனென்றால் வியாதியுள்ளவர்கள், பாவ வியாதியிலிருப்பவர்கள், முக்கியமாக இக்காலையில் பாவ வியாதியிலிருப்பவர்கள் சமாதானத்தைக் கண்டறிய விரும்புகின்றனர். 19 விடுதலையின் அறிக்கை கையெழுத்திடப்பட்டுள்ளது. நீங்கள் விடுதலையாயிருக்கிறீர்கள், ஆனால் நீங்களோ அதை அறிந்திருக்கவில்லை. ஆனாலும் விசுவாசம் ஒரு தெய்வீக இளைப்பாறும் ஸ்தலத்தை முன்னதாகவே பெற்றிருக்க வேண்டும். நீங்கள் தேவனில் விசுவாசங்கொண்டிருந்தால், அதை வைக்கும்படிக்கு ஒரு தெய்வீக இளைப்பாறும் ஸ்தலத்தைப் பெற்றிருக்க வேண்டும். அதற்கு தேவனுடையப் பரிசுத்த வார்த்தையைத் தவிர வேறு மேலான ஸ்தலமே கிடையாது. வேறு மற்ற தெய்வீக வழியும் கிடையாது. நாம் நம்முடைய விசுவாசத்தை நேரடியாக எழுதப்பட்ட தேவனுடைய வார்த்தையின் பேரில் இளைப்பாறும்படிச் செய்ய வேண்டும். 20 இப்பொழுது, மனிதன் தன்னுடைய மாம்சப்பிரகாரமான நிலையில் மற்றும் தன்னுடைய மனோரீதியான கருத்துக்களினால் எப்பொழுதுமே தேவனிடத்திலிருந்து பிரித்துக்கொள்கிறான். ஆதிமுதற்கொண்டே மனிதன் மற்றொரு புறத்தை காண வாஞ்சித்து வருகிறான். ஆனால் அவன் ஒரு சிறை வீட்டில் கட்டப்பட்டிருக்கிறான். சில சமயங்களில் மனிதனுடையப் பாரம்பரியம் அங்கே அவனை வைத்துவிடுகிறது, அதாவது அவர்கள் வித்தியாசமான பாரம்பரிய முறைமைகளையும், எப்படி ஆராதிக்க வேண்டும் என்கிற சொந்த எண்ணங்களையும் கற்பிக்கின்றனர். மனிதன் தன்னை அடிமைத்தனத்தின் கீழேயுள்ள தன்னுடையப் பாரம்பரியத்தின் கீழ் வைத்துக்கொள்கிறான். அது உலகத் துவக்கமுதற்கொண்டே இருந்து வருகிறது. அது அந்தவிதமாகவே இருந்துவருகிறது. அவன் ஒரு சிறை வீட்டிற்குள் அடைக்கப்பட்டிருக்கிறான். 21 ஆனால் மனிதன் எப்பொழுதுமே அந்த மற்றொரு புறத்தைக் காண வாஞ்சித்து வருகிறான். இயற்கைக்கு மேம்பட்ட எந்த ஒரு சிறு காரியம் காணப்பட்டாலும் மானிட வர்க்கத்தினர் அதனைத் தேடி ஆராய்ச்சி செய்வர். ஏனென்றால் அது எல்லைக்கோட்டிற்கு அப்பால் உள்ள மறுகரையைக் குறித்த ஒரு வாக்குத்தத்தமாயுள்ளது. அவன் சர்வவல்லமையுள்ள தேவனாகியத் தன்னுடைய சிருஷ்டிகரின் சாயலில் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறபடியால், அவரே அவனை அவ்வாறு நோக்கிப் பார்க்கும்படிக்குச் செய்கிறார். அவன் தேவனை ஆராதிக்கும் ஒருவனாக இருக்கும்படிக்கு சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறான். எனவே அவன் அந்த உணர்வை வெளிப்படுத்த ஓர் இடத்தைக் கண்டறிய வேண்டும். 22 இன்றைக்கு அதுவே இங்கே எங்களுடைய நோக்கமாக உள்ளது. இந்த ஈஸ்டர் காலையில் உங்களுக்கு உண்மையான சுவிசேஷ சத்தியத்தை அளிக்க வேண்டும் என்பதே இங்கே இன்றைக்கு எங்களுடைய நோக்கமாய் உள்ளது. எவரிடத்திலும் ஒன்றுமில்லை, எந்த ஸ்தாபனத்தின் பேரிலும் ஒன்றுமில்லை, எந்த அஸ்திபாரத்தின் பேரிலும் ஒன்றுமில்லை; அது சுவிசேஷத்தின் பேரிலான, எளிமையான வேதாகம சத்தியங்களின் பேரில் மாத்திரமே உள்ளது. அது எழுதப்பட்ட தேவனுடைய வார்த்தையாய் உள்ளது என்றே நான் விசுவாசிக்கிறேன். நான் அதை என் முழு ஆத்துமாவோடும், முழு இருதயத்தோடும், முழு சிந்தையோடும், முழு பலத்தோடும் விசுவாசிக்கிறேன். அதைத்தான் நான் இந்த நம்முடைய இங்குள்ள சிறு பட்டிணத்திற்கு இன்று கூற விரும்புகிறேன். அதாவது கடந்த பத்து வருடங்களாக உலகத்தைச் சுற்றிலும் சம்பவித்துள்ளதாக நான் கண்டிருக்கிற இந்த மகத்தான நம்பமுடியாத காரியத்தையேக் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன். 23 நாங்கள் இந்தப் பட்டிணத்தில் அநேகமுறை ஆராதனைகளை நடத்த, சுகமளிக்கும் ஆராதனைகளை நடத்த முயன்றோம். இங்கே எனக்கு நண்பர்கள் இல்லை என்று நான் கருதுகிற காரணத்தினால் அல்ல. காரணம் எனக்கு நண்பர்கள் உண்டு. நீங்கள்தான் என்னுடைய நண்பர்கள், நான் உங்களை நேசிக்கிறேன். ஆனால் இது நான் வளர்க்கப்பட்ட சொந்த ஊராயிருக்கிறது என்பதே என் கருத்து. எனவே இது என்னுடைய இடமாயிருக்கிறபடியால், இங்குள்ள எல்லோருமே என்னை அறிந்திருக்கிறார்கள். ஆகையால் இது ஒருவிதமான கடினத்தை ஏற்படுத்துகிறது. காரணம் வேதமும் அதேக் காரியத்தைக் கூறியுள்ளது, அதாவது, “உன்னுடைய சொந்த பட்டிணத்தில் அல்லது உன்னுடைய சொந்த ஜனங்கள் மத்தியில்” என்று கூறப்பட்டுள்ளபடியால், சுவிசேஷத்தை எடுத்துரைப்பது கடினமானதாயுள்ளது. எனவே எல்லாக் காலங்களிலுமே அவ்வாறு இருந்து வருகிறது, எனவே இதற்கும் இப்பொழுது எவ்விதமான விதிவிலக்கும் இருக்காது. 24 நாம் இந்த ஆராதனையை இந்தக் காலையில் நடத்தித்தரும்படி தேவனிடத்தில் கேட்டுக்கொண்டபடியால், அவரே இதை நமக்கு நடத்தித்தரப் போகிறார் என்று நான் என் முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறேன். இப்பொழுது அவர் இதைச் செய்வார் என்று நான் விசுவாசிக்கிறேன். ஆகையால் அவர் தம்முடைய மகத்தான பிரசன்னத்தினாலும், தம்முடைய சர்வ வல்லமையினாலும் அதைச் செய்வாரேயானால், அப்பொழுது அவர் நம் மத்தியில் இருக்கிறார் என்பதையே அது பொருட்படுத்துகிறதாயிருக்கும். இந்த ஈஸ்டர் காலையில், கர்த்தராகிய இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார் என்ற பிழையற்றதும், அழிக்க முடியாததுமான நிரூபணமாக உயிர்த்தெழுந்த அவர் ஜனங்களுக்கு மத்தியில் சஞ்சரிப்பதையும், இங்கு உலாவுவதையும் கண்டறிவது என்ன ஓர் அற்புதமான நேரமாயிருக்கும். 25 இயேசு மரித்தவராயிருக்கவில்லை என்று நான் போராடிக்கொண்டு வருவதே என்னுடைய வாதமாயுள்ளது. அவர் உயிரோடிருக்கிறார், மெய்யாகவே உயிரோடிருக்கிறார், சதாகாலங்களிலும் உயிரோடிருப்பார். தேவன் தம்முடையக் கிருபையினால் அதை இக்காலையில் நம்மை அறிந்துகொள்ளச் செய்வாரேயானால், அப்பொழுது பரிசுத்த ஆவியின் உதவியினால், இயேசு நிச்சயமாகவே மரித்தோரிலிருந்து எழுந்து இன்றைக்குக் கட்டிடத்தில் ஜீவிக்கிறார் என்பதை சந்தேகத்தின் நிழலிற்கும் இடமின்றி எங்களால் உங்களுக்கு நிரூபிக்க முடியும் என்றும் நான் நம்புகிறேன். “உலகத்தின் முடிவுபரியந்தம் உங்களோடிருப்பேன்.” அவரே அதை வாக்களித்தார். 26 இப்பொழுது மனிதன் தன்னுடைய மாம்சப்பிரகாரமான சிந்தையில் அவன் முதலில்…இதை உருவாக்கிக்கொண்டான்…ஜனங்கள் நல்ல நோக்கத்தோடு கோட்பாட்டண்டைக்கு சுவிசேஷத்தைக் கொண்டுவர முயற்சித்து, “நல்லது நாம் சபைக்குச் செல்வோம்” என்று கூற முற்படுகிறதை நாம் கவனிக்கிறோம். அது நல்லது தான். ஆனால் நல்ல நோக்கங்களோடு, “நாம் இந்தக் கோட்பாட்டு அறிக்கை முறைமையை உடையவர்களாயிருப்போம். நாம் இந்த ஜெபங்களைக் கூறுவோம். நாம் ஒரு குறிப்பிட்டக் காரியத்தைச் செய்வோம்” என்று கூறுகிறார்கள். ஆனால் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலோ கோட்பாடுகளைக் காட்டிலும், ஒரு ஸ்தாபனத்தைக் காட்டிலும் மகத்தானவைகளாக உள்ளடக்கியதாயிருக்கிறது. அவைகள் எவ்வளவு நன்மையானவைகளாக இருந்தாலும், அதன் நோக்கங்களும் நன்மையானவைகளாக இருந்தாலும், அது உயிர்த்தெழுந்த கிறிஸ்து அல்லவே. 27 நாம் இந்தக் காலையில் குறிப்பிடுகின்ற முக்கியமானக் காரியம் இயேசு மரித்தோரிலிருந்து எழுந்துவிட்டார் என்பது பிழையற்ற நிரூபணமாயிருக்கிறது என்பதேயாகும். 28 இப்பொழுது நம்முடையப் பாடப்பகுதியோ, “அவர்கள் அவரை அறியாதிருந்தனர்” என்று கூறுகிறது. அது இன்றைக்கும் அதேக் காரியமாகவே உள்ளது. 29 ஆனால் மனிதன் அவரை அறிந்துகொள்ள வாஞ்சித்திருக்கிறான். காலங்களினூடாகவே அவர்கள் அவரை அறிந்துகொள்ள வாஞ்சித்துள்ளனர். இக்காலையில் நம்முடையப் பாடப்பொருளோ, நம்முடைய…என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்ற பொருள்கொண்ட அதிகாலை ஞாயிறு ஆராதனையில் யோபு, அவன் பண்டையக் கால ஆரம்பத்தில், துவக்கத்தில் இருந்தபோதே, அவன் தன்னுடைய சிருஷடிகரை அறிந்துகொள்ள வாஞ்சித்தான். வேறுவிதமாகக் கூறினால், அவன், “நான் போய் வாசலைத் தட்டி, அவரண்டை பேசக்கூடுமானால் நலமாயிருக்குமே” என்றான். அப்படிப்பட்டக் காரியங்களுக்காக மானிட இருதயம் எப்படி வாஞ்சித்துள்ளது. இன்றைக்கு நான்காயிரம் வருடங்களுக்குப் பிறகும், கிட்டத்தட்ட ஐந்தாயிரம் வருடங்களுக்கு மேலானப் பிறகும் மானிட இருதயமானது அவருடைய வாசலண்டைச் சென்று, அவருடைய வாசலைத்தட்டி, அவரோடு பழகி அறிமுகப்படுத்திக்கொள்ள இன்னும் எவ்வளவு அதிகமாக வாஞ்சிக்கிறது. 30 ஆகையால் ஜனங்கள் பாரம்பரியங்களினூடாக மக்களை வேதாகம சத்தியங்களின் மகத்தான அடிப்படையிலிருந்து குருடாக்கியிருக்கின்றனர். 31 இப்பொழுது, இயேசுவானவரும் பூமியில் இருந்தபோது, அதேக் காரியத்தையே அவர் பேசினார். அவர், “நீங்கள் குருடருக்கு வழிகாட்டுகிற குருடராயிருக்கிறீர்கள்” என்றார். மேலும் அவர், “குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் இருவரும் குழியிலே விழுவார்களே” என்றார். 32 இப்பொழுது, கிறிஸ்தவன் என்று கூறிக்கொள்பவன் அல்லது மத போதகர்கள் “குருடரே.” புரிகிறதா? தேவன் ஜனங்களுக்குத் தம்மை வெளிப்படுத்துவதற்குரிய ஒரு வழியை உடையவராயிருக்கிறார், ஜனங்களுக்கு தம்மைத் தெரியப்படுத்துகிறார். ஆனால் அநேக சமயங்களில் தேவன் தம்மை வெளிப்படுத்தும்படியான ஒரு தருணத்தை அவர்களுக்கு அளிப்பதற்கு முன்னமே பாரம்பரியமானது ஜனங்களை பிரித்து வைத்துவிடுகிறது. புரிகிறதா? உங்களுக்கு இது புரிகிறதா? பார்த்தீர்களா? பாரம்பரியங்களே! ஓ, இன்றைக்கும் அப்படித்தான் உள்ளதே! 33 இப்பொழுது கர்த்தராகிய இயேசு பேசிக்கொண்டிருந்த அந்த போதகர்கள் மிகவும் சம்பிரதாய கொள்கைகளில் மாறாதவர்களாய் இருந்தனர். ஆயினும் அவர்கள் உண்மையாகவே மேதைகளாக இருந்தனர். அவர்கள் வார்த்தையின் எழுத்தையும், நியாயப்பிரமாணத்தையும், அதன் ஒவ்வொரு எழுத்தையும் பின்பற்றினர்; அதாவது நியாயப் பிரமாணத்தின் ஒரு சிறு எழுத்தையாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பையாகிலும் அல்லது எந்த ஒரு காரியத்தையாகிலும் கைக்கொள்ளாமலிருக்கவில்லை. அவர்கள் அதை பரிபூரணமாகக் கைக்கொண்டிருக்க வேண்டும். 34 ஆகையால் நாம் முழுமையாக காட்சியிலிருந்து கிறிஸ்துவை விட்டுவிலகிச் செல்லும்வரையில், நாம் நம்முடையக் கல்வியில் மிகவும் பரிபூரணமாயும், நம்முடையக் கோட்பாடுகளில் பரிபூரணமாயும் இருக்கக்கூடும். ஆனால் நாம் உண்மையான காரியங்களிலிருந்து விலகிச் செல்கிறோம். 35 இப்பொழுது, தேவன் மனிதனுக்கு சத்தியத்தைக் கொண்டுவரும்படியாக, “தேவன் தம்முடைய சொந்த குமாரனை பாவ மாம்ச சாயலில் உண்டுபண்ணி அனுப்பினார்.” எனவே அவர் பூமியின் மேல் இங்கே பிறந்தார். அவர் நம்முடையப் பாவங்களுக்கான கிருபாதாரபலியாயிருந்து, நம்முடையப் பாவங்களைப் போக்கும்படியாக, நமக்கு விடுதலையளிக்கும்படியாக, நாம் இருந்துவருகிற சிறைவீட்டிலிருந்து நம்மை விடுவிக்க கல்வாரி நாளிலே பலியானார். 36 இப்பொழுது மனிதனோ ஒரு சிறைவாசியாயிருக்கிறான். ஏதோ ஒரு காரியம் மனிதனுக்கு சம்பவித்திருக்கும் வரையில் அவன் ஒரு சிறைவாசியாகத்தான் இருக்கிறான் என்று தேவன் கூறினார். நீங்கள் இப்பொழுது இதைப் புரிந்துகொள்ள வேண்டுமென்று நான் விரும்புகிறேன். அதாவது புதிய பிறப்பு என்றழைக்கப்படுகின்ற இந்தக் குறிப்பிட்ட காரியம் மனிதனுக்கு சம்பவிப்பதற்கு முன்பு, அவனால் புரிந்துகொள்ள முடியாது, (புரிந்துகொள்ள வழியே கிடையாது) அல்லது தேவனை எப்போதும் புரிந்து கொள்ள முடியாது, அல்லது தேவனைக் குறித்த எந்த அறிவுமே அவனுக்கு இருக்காது. வார்த்தையானது அதை உரைத்தாலும், அவனுடைய சிந்தை அதைப் புரிந்துகொள்ள முடியாது. ஏனென்றால் அது ஒரு மானிட சிந்தையாயிருக்கிறது. தேவ பக்திக்குரியக் காரியங்களைப் புரிந்துகொள்ள அவனுக்குள் தேவனுடைய சிந்தையை அவன் பெற்றிருக்க வேண்டும். புரிகிறதா? ஆகையால் வாசிக்கும் எல்லா ஆற்றலும், எல்லாப் பள்ளிகளும், எல்லா போதனைகளுமே அவ்வளவு நல்லவைகளாக இருக்கலாம். ஆனால் அதேசமயத்தில் அது உண்மையான அடிப்படை மெய்மையாய் இருக்காது. 37 தேவன் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கத் தன்னுடையக் குமாரனை அனுப்பினார். அது உண்மை. சுவிசேஷம் நற்செய்தியாய் இருக்கிறது. வேதவாக்கியங்களைக் குறித்துக் கொண்டிருக்கிற நீங்கள் ஏசாயா 61-ம் அதிகாரத்தில், அங்கே தேவன் கூறியுள்ளதைக் குறித்துக்கொள்ளுங்கள். சரியாகக் கூறினால் கிறிஸ்துவின் வருகையைக் குறித்து அவர் ஏசாயாவில் பேசுகிறார். அவர், “சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம்பண்ணினார். சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், கட்டுண்டவர்களுக்குக் கட்டவிழ்த்தலையும் கூறவும் என்னை அனுப்பினார்” என்றார். தேவன் அந்தகாரத்தில் அமர்ந்துகொண்டிருக்கிற மனுஷரின் சிறைக்கதவுகளைத் திறக்கவே கிறிஸ்துவை அனுப்பினார். அவர் கூறின அந்த மாதிரியை நீங்கள் கவனிப்பீர்களேயானால், “அவர்களை விடுதலையாக்க” என்று கூறியுள்ளார். அது எழுத்தறிவற்றவர்களாய் இருந்தவர்கள் அல்ல. அவர்கள் மேதைகளும், கல்வி பயின்றவர்களுமாயிருந்தனர், கிறிஸ்து அவர்களை விடுதலையாக்கவே வந்தார். 38 இப்பொழுது இது சிறு குழந்தைகளையும் கூட புரிந்துகொள்ளச் செய்யும். கிறிஸ்து வந்தபோது…இன்றைக்கு உதாரணமாகக் கூறினால், அதாவது நீங்கள் ஒவ்வொருவருமே மரணத்திற்கேதுவாகத் தண்டிக்கப்பட்டிருந்தீர்கள். நீங்கள் ஒரு சிறைவீட்டில் உட்கார்ந்துகொண்டிருந்ததையும், நாளைய சூரியோதய நேரத்தில் நீங்கள் மரிக்க வேண்டியதாயிருந்ததையும் அறிந்திருக்கிறீர்கள். 39 தேவனிடத்திலிருந்து விலகி பாவமுள்ளவர்களாய் இருக்கிற அநேகர் இக்காலையில் அந்த ஸ்தானத்திற்குள்ளாகவே அமர்ந்துகொண்டிருக்கிறீர்கள். அநேக ஜனங்கள், உண்மையான நல்ல ஜனங்களாயிருக்கிறவர்கள் இந்தக் காலையில் அந்த நிலைமைக்குள்ளாகவே அமர்ந்து கொண்டிருக்கிறார்கள். 40 உங்களில் அநேகர் இங்கே புற்றுநோயோடும், கட்டியோடும், குருட்டுத்தனத்தோடும் அமர்ந்துகொண்டிருக்கிறீர்கள். உங்களில் சிலர் எல்லாவிதமான நிலைமைகளுக்குள்ளாகவுமே அமர்ந்துள்ளீர்கள். அதே சமயத்தில் தேவன் சிறைக் கதவுகளைத் திறந்து, உங்களை விடுவிக்கும்படியாக கிறிஸ்துவை அனுப்பினார். நீங்களோ, “சுகவீனம் ஒரு அடிமைத்தனமா?” என்று கேட்கலாம். ஆம். 41 இயேசுவானவர் நிமிரக்கூடாத கூனியாயிருந்த ஸ்திரீயினிடத்தில் அதைத் தெளிவாக விளக்கிக் கூறினார். அவர் தன்னுடையக் கரங்களை அவள் மீது வைத்து அவளை குணப்படுத்தினார். அவள் நிமிர்ந்து நின்றாள். அவர்கள் குற்றம் கண்டுபிடிக்கத் துவங்கினர், போதகர்கள் குற்றம் கண்டுபிடித்தனர். அப்பொழுது அவர், “இதோ சாத்தான் கட்டியிருந்த ஆபிரகாமின் குமாரத்தியாகிய இவளை இந்த அடிமைத்தனக் கட்டிலிருந்து அவிழ்த்துவிட வேண்டியதில்லையா?” என்று கேட்டார். 42 ஆகையால் நம்முடைய மகத்தான மீட்பராகிய கிறிஸ்து புருஷர்களையும், ஸ்திரீகளையும் பாவத்திலிருந்து விடுவிக்கவும், வியாதியிலிருந்து விடுவிக்கவுமே வந்திருக்கிறார். அவர், அவர் கல்வாரியிலே மரித்தபோது, “நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டார்; அவருடையத் தழும்புகளால் குணமாகிறோம்.” 43 இப்பொழுது அதுவே நற்செய்தியாயுள்ளது. அதுதான் சுவிசேஷம். கிறிஸ்து பாவியினுடைய ஸ்தானத்தில் மரித்தார் என்பதும், கிறிஸ்து சுகவீனமுள்ள மனிதனுடைய ஸ்தானத்தை எடுத்துக்கொண்டார் என்பதுமே சுவிசேஷமாயிருக்கிறது. கிறிஸ்து பாவியினுடைய ஸ்தானத்தை எடுத்துக் கொண்டார். கிறிஸ்து கவலையுற்ற மனிதனுடைய ஸ்தானத்தை எடுத்துக் கொண்டார். கிறிஸ்து பிசாசினால் பீடிக்கப்பட்டவனுடைய ஸ்தானத்தை எடுத்துக்கொண்டார். கிறிஸ்து ஒவ்வொரு ஸ்தானத்தையும் ஏற்றுக்கொண்டு, ஒவ்வொரு துயரத்திலிருந்தும், பிசாசு நம்மை சிறைவீட்டில் வைத்துள்ளதற்கு காரணமான ஒவ்வொரு பாவத்திலிருந்தும் நம்மை விடுதலையாக்கினார். கிறிஸ்து இலவசமாய் நம்மை மன்னிக்கும்படிக்கு வந்தார். ஒவ்வொரு காரியமும் இலவசமாகவே நடைபெறுகிறது. 44 அமெரிக்க ஐக்கிய நாடுகளில் அவர்கள் அடிமைகளாய் அந்நாட்களில் இருந்தனர், அவர்கள் இங்கே அடிமைத்தனத்தின் கீழே அடிமைகளாயிருந்தனர். ஆபிரகாம் லிங்கன் கருப்புநிற மனிதரை விடுதலையாக்கவும், அவர்கள் இனி ஒருபோதும் அடிமைகளாய் இராமலிருக்கும்படியான உரிமைகளை வழங்கவுமே மரித்தார். அவர்களும்கூட சூரியோதய வேளையிலேயே விடுதலையாக்கப்பட்டனர். அவர்கள் அதைக் குறித்து மிகவும் மகிழ்ச்சியாயி௫ந்தனர்.அவர்கள் சூரியன் உதயமானவுடனே தாங்கள் விடுதலையாகப் போவதை அறிந்திருந்தனர். அப்பொழுது அவர்களில் சிலர் திடகாத்திரமானவர்களாயும், சிறந்த தேக அமைப்புடையவர்களாயும் இருந்தபடியால், அவர்கள் மலையின் மேலே ஏறிச்சென்றனர். மேலும் சிலரால் மலையின் உச்சிக்கே ஏற முடிந்தது. சிலர் பாதி மலைவரை மாத்திரமே ஏறியிருந்தனர். இன்னும் சிலர் மலையின் கீழேயே இருந்தனர். சூரியன் உதயமாகத் துவங்கும்போதே மிகுந்த பலமுள்ளவர்களாயிருந்தவர்கள் மலையின் உச்சியில் இருந்தனர். 45 இன்றைக்கு நான் அதைப் பரிசுத்த ஆவியின் செயலெல்லைக்குள்ளாக எழும்பியுள்ள மகத்தான பலமுள்ள கிறிஸ்தவர்களுக்கே ஒப்பிட விரும்புகிறேன். அதாவது நீதிமானாக்கப்படுதலின் கீழாக வந்துள்ளவர்களையும் குழப்பத்தின் பள்ளத்தாக்கில் இருக்கிறவர்களையும் ஒப்பிட்டுக் கூற விரும்புகிறேன். 46 அவர்கள் உயரே ஏறிச்சென்றிருந்தனர். முதலாவது உயரத்தில் இருந்தவர்களால் அதைத் தூரத்திலிருந்தேப் பார்க்க முடிந்தது. எனவே அவர்கள் சூரியோதயத்தைக் கண்டவுடனே, அவர்கள் தங்களுக்குக் கீழே இருந்தவர்களை நோக்கி, “நாம் விடுதலையடைந்துவிட்டோம்” என்று தங்களுடைய உச்சக்கட்டக் குரலில் கூச்சலிட்டனர். 47 அப்பொழுது அதைக் கேட்ட மற்றவர்கள் தங்களுக்கு கீழேயிருந்தவர்களிடத்தில் சத்தமிட்டு “நாம் விடுதலையாகிவிட்டோம்” என்று கூறினர். 48 அப்பொழுது அவர்களுக்கும் கீழே இருந்தவர்கள் மற்றவர்களிடத்தில், “நாம் விடுதலையாகிவிட்டோம்” என்று அதை விளக்கிக் கூறினர். 49 இப்பொழுது பாருங்கள். குன்றின் மேலே இருந்தவர்களால் சூரியனைப் பார்க்க முடிந்தது, ஆகையால் அவர்கள் விடுதலையாயிருந்தனர். ஆனால் அந்தச் செய்தியானது பள்ளத்தாக்கில் இருந்த அந்த நபருக்கு வந்தவுடனே, சூரியன் மேலே எழும்பினதோ அல்லது இல்லையோ, அவன் எப்பொழுதும் சுதந்திரமாய் இருக்கப்போவது போன்று அப்பொழுதே அவன் சுதந்திரமாயிருந்தான். உங்களுக்கு அது புரிகிறதா? 50 கிறிஸ்து சிறைப்பட்டவர்களை விடுவிக்க வந்தார். எனவே நீங்கள் உங்கள் பழக்க வழக்கங்களில் கட்டுண்டு, அரைவழி கிறிஸ்தவ வாழ்க்கையை உடையவர்களாய் இருக்க வேண்டியதில்லை. நீங்கள் அந்தவிதமாயி௫க்க வேண்டும் என்று தேவன் வி௫ம்புகிறதில்லை. நீங்கள் சுயாதீனமாயிருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். விடுதலையைப் பிரசங்கிக்கவும், சிறைக்கதவுகளைத் திறக்கவுமே தேவன் கிறிஸ்துவை அபிஷேகம் பண்ணினார். நீங்கள் ஒவ்வொரு முறையும்… 51 நீங்கள் அங்கே உட்கார்ந்துகொண்டிருக்கிறீர்கள் என்று கூறினாலும், உங்களுடைய மரண தண்டனை உங்கள் மீது உள்ளது. நீங்கள் அறிந்துகொள்ளவேண்டிய முதலாவது காரியமென்னவென்றால், அவர்கள் உங்களைத் தூக்கிலிடும்படியாக அல்லது ஏதோ ஒரு வழியில் உங்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றும்படி உங்களைக் கொண்டு செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார்கள். முதலாவது காரியம் என்னவெனில் நீங்கள் யாரோ ஒருவர் வீதியில் நடந்துவந்து, “அதை உறுதியாய் பற்றிக்கொள்ளுங்கள், நான் உங்களுடைய மன்னிப்பைப் பெற்றுவிட்டேன். நீங்கள் மரிக்க வேண்டியதில்லை.” என்று கூறுவதைக் கேட்கிறீர்கள். எனவே இப்பொழுது நீங்கள் சிறையிலிருந்து வெளியே வரும் வரைக்கும் நீங்கள் காத்திருக்க வேண்டியதில்லை. நீங்கள் சிறையிலிருந்து வெளியே வரும்போது, நீங்கள் சுதந்தரமாயிருக்கப் போவது போல இப்பொழுதோ நீங்கள் சுதந்தரமாயிருக்கிறீர்கள். எனவே ஒரு மனிதன் தன்னுடைய மன்னிப்பு கையெழுத்திடப்பட்டுள்ளது என்று அவன் அறிந்துள்ளவரையில், அவன் சிறையில் இருந்து வெளியேவரும்போது மகிழ்ச்சியாயிருப்பது போன்றே, சிறைக்குள் உட்கார்ந்து கொண்டிருக்கும்போதும் மகிழ்ச்சியாயிருக்க முடியும். 52 அந்தவிதமாகவே இது இக்காலையில் உள்ளது. இதோ அது உள்ளதே! இக்காலையில் உட்காவலறைகளிலிருந்து வெளியே வரும்படியான ஓர் இருதயப் பசிகொண்டு ஒவ்வொரு மனிதனுக்கும் ஸ்திரீக்கும் சுவிசேஷ நற்செய்தி பிரசங்கிக்கப்படுகிறது. நீங்கள் இன்னமும் சுகவீனமாய் உட்கார்ந்து கொண்டிருந்தாலும், நீங்கள் கட்டப்பட்டவர்களாய் உட்கார்ந்துகொண்டிருந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை, ஏனென்றால், “நீங்கள் மன்னிக்கப்பட்டிருக்கிறீர்கள்” என்ற செய்தி வந்துள்ளபடியால், உங்களால் அவ்வளவு சுதந்திரமாய் இருக்க முடியும். இக்காலையில் ஒவ்வொரு சிறைவாசியையும் விடுவிக்க, சிறைக்கதவுகளைத் திறந்து, அவர்களை வெளியேக் கொண்டுவரும்படியாக ஆயிரத்து தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே கிறிஸ்து உயிர்த்தெழுந்தார். ஓ, என்னே ஓர் ஆச்சரியமான காரியமாயுள்ளதே! 53 புலவனோ அதைக் கேட்டபோது, அவன் மெய்சிலிர்ப்படைந்ததில் வியப்பொன்றுமில்லையே! அப்பொழுது அவனுக்கு ஆவியின் ஏவுதல் உண்டானது. எனவே அவன் இவ்வாறு எழுதினான்:- ஜீவிக்கும்போது, அவர் என்னை நேசித்தார்; மரிக்கும்போது, அவர் என்னை இரட்சித்தார்; அடக்கம்பண்ணப்பட்டபோது, அவர் என்னுடைய பாவங்களை தொலைதூரம் கொண்டுபோய்விட்டார்; [ஒலிநாடாவில் காலியிடம்—ஆசி.]…என்றென்றைக்கும் இலவசமாய்… என்றோ ஒருநாள் அவர் வருகிறார், ஓ அது மகிமையான நாளாயிற்றே! 54 சிறைக்கதவுகளைத் திறந்து, நம்மை விடுதலையாக்கின இந்த மகத்தான பிரபுவின் இரண்டாம் வருகைக்காகக் காத்திருப்பதே விசுவாசியின் நம்பிக்கையாயுள்ளது. கடனானது தீர்க்கப்பட்டாயிற்று. அது முழுவதுமாய் செலுத்தப்பட்டுவிட்டது. இயேசுவானவர் மரித்தபோதே, தேவனும் பாவிகளும் கல்வாரியிலே ஒன்றாக ஒப்புரவாக்கப்பட்டனர். நம்முடைய நீதிமானாக்கப்படுதலுக்காகவே தேவன் அவரை மூன்றாம் நாளில் எழுப்பினார். அதாவது நாம் அதை நோக்கிப் பார்த்து, அதை விசுவாசித்து, நம்முடைய முழு இருதயத்தோடு அதை ஏற்றுக்கொள்ளும்போது, நாம் ஜீவனுள்ள தேவனுடையப் பார்வையில் நீதிமான்களாக்கப்படுகின்றோம். நிச்சயமாகவே அது உங்களை உணர்ச்சிவசப்படச் செய்கிறதே! நிச்சயமாகவே அது உங்களை மகிழ்ச்சியாக்குகிறதே! நீங்கள் எப்படி அமைதியாயிருக்க முடியும்? ஒரு மனிதன் தனக்கு முன்னே அங்கே மரணம் தொங்கிக் கொண்டிருக்கிறதை அறிந்திருக்கும்போது, இங்கே மன்னிப்பு உண்டாகிறதை எப்படி அவனால் தடுக்க முடியும்? அது உண்மை. 55 அந்தப் பெரிய…நீண்ட சிறைக்கூட வாசலிலிருந்து அந்த ரோம சேவகன் வருவதைக் கண்ட பரபாஸ் அக்காலையில் எப்படி உணர்ந்திருப்பான் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? அவன் பெரிய இரும்பு காலணிகளின் மிதியோசையோடும், சங்கிலிகள் சலசலக்க, ஓர் ஈட்டியானது வீதியிலே இழுத்துக்கொண்டே வர, அந்தச் சேவகன் சிறைவாசலைத் திறந்தபோது…தான் கொல்லப்படப்போவதை அறிந்திருந்தான். எனவே பரபாஸ் நடுங்கி, கதறி, வெளியே ஓட ஆயத்தமாகி, “ஓ, இது என்னுடைய முடிவாயிற்றே!” என்று கூறினான். அப்பொழுது அவனோ, “பரபாஸே, ‘நீ மன்னிக்கப்பட்டு, விடுதலையாகியிருக்கிறாய்’ என்பதை நான் வாசித்துக் காண்பிக்கிறேன்” என்றான். அப்பொழுது பரபாஸ், “ஏன்”? என்று கேட்டு, “நான் மரிக்கப்போவதில்லையா?” என்று கேட்டான். அதற்கு சேவகனோ, “இல்லை. நீ மரிக்க வேண்டியதில்லை” என்றான். அப்பொழுது பரபாஸ், “நான் அதற்காக என்ன செய்திருக்கிறேன்?” என்று கேட்டான். அதற்கு இவனோ, “ஒன்றும் செய்யவில்லையே” என்றான். அப்பொழுது பரபாஸ், “அப்படியானால், இந்த மன்னிப்பு எப்படி உண்டானது?” என்று கேட்டான். 56 அப்பொழுது அந்த நூற்றுக்கு அதிபதி அவனைச் சுற்றி அழைத்து வந்து உயரே நிறுத்தி, “அதோ தொலைவிலே அந்தச் சிலுவையிலே தொங்கிக்கொண்டிருக்கிற அந்த மனிதரைப் பார்க்கிறாயா? ஏளனமாய் வழிந்த எச்சில்கள் அவருடைய முகத்திலிருந்து வழிகிறதைக் காண்கிறாயா? அவருடையக் கரத்தில் உள்ள காயங்களைக் காண்கிறாயா? அவைகள் உன்னுடையவைகளுக்கானதாய் இருந்தன. ஆனால் அவர் உன்னுடைய ஸ்தானத்தை ஏற்றுக்கொண்டார்” என்று கூறியிருந்திருப்பான். 57 அவர் உனக்காக சிறைவாசலைத் திறந்தார். அதாவது நீ மரிக்கும்படியாய் ஆக்கினைக்குட்படுத்தப்பட்டிருந்தாய், ஆனால் அவரோ உன்னுடைய ஸ்தானத்தை ஏற்றுக்கொண்டாரே. ஈஸ்டர் காலையிலே தேவன் அவரை நம்முடைய நீதிமானாக்கப்படுதலுக்காகவே எழுப்பினார். ஏன், நாம் நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறோம். நாம் அந்த நிகழ்ச்சியை விசுவாசித்து, ஏற்றுக்கொள்கின்ற காரணத்தால், எப்படியாய் அவருடைய ஜீவனுள்ள அலைகள் ஆழங்காணமுடியாத பெரிய அலைகளைப்போல நம்முடைய இருதயத்திற்குள் நீதிமானாக்கப்படுதலின் சமாதானமாய் பாய்ந்து புரளுகிறது. 58 தேவன் நம்மை திக்கற்றவர்களாக விட்டுவிடவில்லை. வரப்போகின்ற நாட்களில் போதகர்கள் மற்றுமுள்ளவர்களின் மூலமாக வார்த்தையைக் குறித்த யாவும் குழப்பமடைந்திருக்கும் என்றும், எப்படி அவர்கள் வார்த்தையைக் குழப்புவார்கள் என்பதையும் அவர் அறிந்திருந்தார். ஆனால் அவர் வார்த்தையோடு செய்தியாளரை, பரிசுத்த ஆவியை நேரடியாக அனுப்பினார். அது உயிர்த்தெழுதலின் ரூபகாரப்படுத்துதலாய் உள்ளது. 59 வார்தையை ரூபகாரப்படுத்த பரிசுத்த ஆவியே இல்லாதிருந்தால், அப்பொழுது என்னால் உயிர்த்தெழுதலை விசுவாசித்திருக்க முடியாது. நான் அப்பொழுது இறைமையியலைத் தவிர வேறொன்றையும் பெற்றிருந்திருக்கமாட்டேன். அல்லது நான் மனோரீதியான கருத்தினைத்தவிர வேறொன்றையும் பெற்றிருந்திருக்க மாட்டேன். ஆனால், இன்றைக்கு, நாம் பெற்றிருக்கவில்லை…மனோரீதியான கருத்து சரிதான்; இறைமையியல் சரிதான். ஆனால் நாமோ ஒரு நேரடியான சாட்சியைப் பெற்றிருக்கிறோம். பரிசுத்த ஆவியே கர்த்தராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலைக் குறித்த ஒரு சாட்சியாய் இருக்கிறது. ஆகையால் இன்றைக்கு நம்முடைய நாளில் அது ஜனங்களால் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளதே! மிகவும் தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது, ஆனால் அது நம்பிக்கையாயுள்ளதே! 60 அவர் அங்கே கடைசிக் கட்டளையை அளித்தபோது, அவர், “நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான். விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள்; சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றையுக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது, வியாதியஸ்தர்மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்” என்றார். “நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப்ப்பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்” என்று கூறினார். 61 யாராவது ஒருவர், “சகோதரன் பிரான்ஹாம் அவர்களே, அந்த மகத்தான கட்டளையானது இந்நாள்வரை நீடித்திருந்ததா?” என்று கேட்கலாம். 62 நிச்சயமாக. எதுவரைக்கும்? “உலகமெங்கும்.” எத்தனை பேருக்கு? “சர்வ சிருஷ்டிக்கும்.” அங்குதான் காரியம். அதை விசுவாசித்து, ஏற்றுக்கொள்வதே நித்திய ஜீவனாயிருக்கிறது. நீங்களோ, “நான் ஏன் அதை விசுவாசிக்க வேண்டும்?” என்று கேட்கலாம். 63 காரணம் அது தேவனுடைய வார்த்தையாயுள்ளது. அது உண்மையே. தேவன் தம்முடைய சொந்த வார்த்தையைத் திரும்பவும் மாற்றிக்கொள்ளமாட்டார். தேவன் ஒருமுறை ஒரு வார்த்தையைப் பேசுகிறபோது, அவர் அதனோடு தரித்திருக்க வேண்டும். நான் ஒரு வார்த்தையைக் கூறி, பின்னர் அதை மாற்றிக்கொள்ள முடியும்; நீங்களும் அதேவிதமாகச் செய்யக் கூடும். ஆனால் தேவனால் அவ்வாறு செய்ய முடியாது. அவர் ஒரு வார்த்தையைக் கூறும்போது, அவர் அதனோடு தரித்திருக்க வேண்டும். அவர் அந்த வார்த்தைகளைக் கூறினார். எனவே தேவன் அவருடைய வார்த்தையைக் கனப்படுத்துகிறார். 64 உயிர்த்தெழுதல் இன்றைக்கு உயிர்த்துடிப்பூட்டுகிறதாய் இருக்கிறது. அது மகதலேனா மரியாளுக்கும், அந்தக் காலை கல்லறையில் நின்று அவரைக் கண்டு, இதோ அவர் இருக்கிறார் என்று கூறினவர்களுக்கும் அது உண்மையாய் இருந்ததுபோன்றே, அதை விசுவாசிக்கின்ற ஒவ்வொரு மானிட இருதயத்திற்கும் அது உண்மையானதாய் இருக்கிறது. இதோ அவர் இருக்கிறார், அங்கே அவளுடைய பெயர் “மரியாள்” என்றே அழைக்கப்பட்டது. அப்பொழுது அவள் அங்கே சுற்றும் முற்றும் பார்த்து, ‘ரபூனி’ அல்லது ‘போதகரே’ என்று அவரைக் கூப்பிட்டாள். இது அந்தக் காலை அந்தக் கல்லறையண்டை நின்றுகொண்டிருந்த அந்த ஸ்திரீக்கு உண்மையானதாயிருந்தது போலவே, இந்தக் காலையில் உயிர்த்தெழுதலின் வல்லமையினால், தேவனுடைய ஆவியினால் மீண்டும் பிறந்துள்ள ஒவ்வொரு இருதயத்திற்கும் அவ்வளவு உண்மையானதாயுள்ளது. 65 இப்பொழுது நீங்கள் அதை உங்களுடைய சொந்த சிந்தையில் செய்ய முடியாது. உங்களால் அதைச் செய்யமுடியாது. ஒரு கட்டிடத்தின் நிலைமைகள் மிகவும் மோசமாக இருக்கும்போது, அதன் அஸ்திபாரம் ஆக்கினைக்குட்படுத்தப்பட்டிருக்கும்போது, நீங்கள் அந்தக் கட்டிடத்தின்மேல் ஒரு காகிதத்தை ஒட்டவோ, அல்லது அதனை வண்ணந்தீட்டவோ முயற்சிப்பது போன்று இருக்கும். 66 அரசாங்கமானது ஒரு வீட்டிற்கு குற்றத் தீர்ப்பளித்து அதன் அஸ்திபாரம் இற்றுப்போயிருந்தால், உங்களால் எப்படி அந்த வீட்டை கட்ட முடியும்? நீங்கள் அது விழுந்துபோவதற்காக மட்டும்தான் கட்டிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் அதன் உட்புறத்தில் எவ்வளவுதான் வண்ணந்தீட்டினாலும், நீங்கள் அதன்மேல் எவ்வளவு நல்ல காகிதத்தை ஒட்டினாலும், நீங்கள் அதன் உச்சியில் எத்தனை மரப்பாவோடுகளை பொருத்தினாலும், நீங்கள் எத்தனை புனித நினைவுச் சின்னங்களை எழுப்பினாலும், நீங்கள் எத்தனைத்தான் அதற்குச் சிலுவையில் அறையப்பட்ட இயேசுநாதரின் உருவங்களை வைத்தாலும், அது ஒரு பொருட்டல்ல, ஏனெனென்றால் அதன் அஸ்திபாரம் தவறான நிலைமையில் இருக்கின்றபடியால், அது விழத்தான் வேண்டும். அந்த அஸ்திபாரம் இற்றுப் போய்விட்டது. 67 மனிதன் துவக்கத்திலிருந்தே தன்னுடைய சொந்த மனரீதியான சிந்தனையின் வழியில் தவறாயிருக்கிறான். அவன் தேவனுக்கு ஓர் அந்நியனாயிருக்கிறான். அவன் நம்பிக்கையில்லாமல், தேவனில்லாமல், இரக்கமில்லாமல் துண்டிக்கப்பட்டிருக்கிறான். 68 அவன் கிறிஸ்துவண்டை வந்து, அவரை ஏற்றுக்கொள்வதே அவன் செய்யக்கூடிய ஒரே காரியமாய் உள்ளது. அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் உள்ளே வருகிறார், கிறிஸ்துவுக்குள்ளிருந்த சிந்தை உங்களுக்குள் இருக்கிறது. 69 இயேசு, “என்னை அனுப்பின பிதா என்னோடு இருக்கிறார்” என்றார். ஓ, என்னே! என்னே ஓர் உறுதிமொழி! என்னே ஒரு வார்த்தை! “என்னை அனுப்பின பிதா என்னோடே வருகிறார்.” 70 கவனியுங்கள்! “பிதா என்னை அனுப்பினதுபோல, நானும் உங்களை அனுப்புகிறேன்.” அவர் உங்களை மாத்திரம் அனுப்பவில்லை, ஆனால் அவர் உங்களோடு செல்லுகிறார். “நான் உலகத்தின் முடிவுபரியந்தம் உங்களோடும், உங்களுக்குள்ளும் இருப்பேன்.” தேவனுக்குள்ளாக இருந்த யாவும் கிறிஸ்துவுக்குள்ளாக ஊற்றப்பட்டது. கிறிஸ்துள்ளிருந்த யாவும் விசுவாசிக்குள்ளாக, சபைக்குள்ளாக மாற்றப்பட்டது. தேவன் உங்களோடு இருக்கிறார். “இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன்.” அது தேவனுடைய வார்த்தையின் உறுதிமொழியாய் உள்ளது. அதைத்தான் வேதம் கூறுகிறது. அதைத்தான் நான் விசுவாசிக்கிறேன். 71 நாம் அதற்காக தனியாக நிற்க வேண்டியதாயிருந்தாலும், அதற்காக நிற்க வேண்டும், ஏனென்றால் அது தேவனுடைய வார்த்தையாயிருக்கிறது. ஒவ்வொரு மனிதனும் தன்னுடையத் திடநம்பிக்கைகளின்பேரில் மாத்திரமே எப்போதும் எங்கும் நிற்க வேண்டியதாயிருக்கிறது. அதாவது கூட்டுப்பங்காண்மையில் அல்ல. அதில் ஒருவர் மாத்திரமே உங்களோடு நடப்பார், அது வாக்குமூலம் அளித்த அவரேயாகும். கர்த்தராகிய இயேசு, அவர் ஒருவரே உங்களோடு பள்ளத்தாக்கில் நடப்பார். அவர் உங்களுடைய பக்கத்திலிருந்து ஒவ்வொரு முட்புதர் நிலத்தினூடாகவும் சென்று, ஒவ்வொரு மலையிலும் ஏறிச்செல்வார். 72 உங்களை அவரோடு நுகத்தில் பிணைத்துக்கொள்ளுங்கள். “என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது.” உலகத்தின் காரியங்களோடு நுகத்தில் பிணைக்கப்படாதிருங்கள். பல்வேறு சங்கங்களிலும், ஸ்தாபனங்களிலும் உள்ள நுகத்தில் பிணக்கப்படாதிருங்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோடு தனியாக உங்களை நுகத்தில் பிணைத்துக்கொள்ளுங்கள், அதுவே நீங்கள் செய்யக்கூடிய ஒழுங்குமுறையாயுள்ளது. விசுவாசியுங்கள், உயிர்த்தெழுதலைப் புரிந்துகொள்ளுங்கள். 73 இப்பொழுது இந்த அப்போஸ்தலர்கள், மனிதர்களாயிருந்த அதே சமயத்தில் இயேசுவோடு நடந்தனர், அவரோடு ஐக்கியங்கொண்டிருந்தனர். இன்றைய மனிதர்களைப் போலவே இயல்பான முறையில் நடந்தனர். ஆனால் அவர்கள் அவர் யாராயிருந்தார் என்பதை அடையாளங்கொள்ளத் தவறினர். 74 இயேசு, “குருடரான பரிசேயரே” என்றார். அவர், “ஓ, நீங்கள் உங்கள் பாரம்பரியத்தினால் தேவனுடையக் கற்பனைகளை அவமாக்கியிருக்கிறீர்கள்” என்றார். கவனியுங்கள். புரிகிறதா? 75 அவர்கள் போதகர்களாய், பண்டிதர்களாய், வேதபாடசாலை மாணாக்கர்களாயிருந்தனரே! இயேசுவானவர் வருவதாகக் கூறப்பட்டிருந்த வார்த்தையின்படியே அவர் வந்தார் என்றும், ஆனால் அவர்களுடையப் பாரம்பரியங்கள் அதை அந்தவிதமாகப் போதிக்கவில்லை என்றும் வேதம் தெளிவாகக் கூறியுள்ளது. எனவே அவர்கள் அவை எல்லாவற்றையும் துடைத்தழிக்க முயற்சித்து, “அது மற்றொரு காலத்திற்குரியதாயிருந்தது. இது மற்ற ஏதோ ஒரு நேரத்தில் இருக்கும்” என்று கூறினர். ஆனால் தேவனோ கூறப்பட்டிருந்த விதமாகவே வந்தார். 76 அப்பொழுது அது இருந்தவிதமாகவே, இன்றைக்கும் அது அவ்வண்ணமாகவே இப்பொழுதும் இருக்கிறது. அவர்கள் இந்தப் பாகத்தை ஒருபக்கமாகவே ஒதுக்கி வைக்கின்றனர், இந்த பாகத்தை ஒருபுறமாக ஒதுக்கித்தள்ளிவிட்டு, “தேவன் அப்பொழுது செய்தார்; அவர் இப்பொழுது செய்யமாட்டார். அது இந்நாளுக்கானதல்ல” என்று கூறுகின்றனர். 77 “அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.” அதுதான் வேதவாக்கியம். அதுதான் சத்தியமாயிருக்க வேண்டும் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். அதுதான் சத்தியமாயிருக்க வேண்டும் என்று நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அவர் அடிப்படைத் தத்துவத்தில் மாறாதவராயிருக்கிறார். அவர் வல்லமையில் மாறாதவராயிருக்கிறார். அவர் அன்பில் மாறாதவராயிருக்கிறார். அவர் அப்பொழுது இருந்த ஒவ்வொரு வழியிலும் மாறாதவராகவே இருக்கிறார். தேவன் அவரை அனுப்பி, அவரோடு சென்றதுபோன்றே, இப்பொழுது அவர் சபையோடு வந்திருக்கிறார். ஆகையால்… 78 தேவன் அவரை எழுப்பினார். தேவன் அவரோடு இல்லாதிருந்திருந்தால், அவர் இயேசுவை மூன்றாம் நாளில் ஒருபோதும் எழுப்பியிருந்திருக்கமாட்டார். ஆகையால் அவரை அனுப்பின பிதா எப்பொழுதும் அவரோடிருந்து, அவரோடு கல்லறைக்குச் சென்று, மூன்றாம் நாளில் அவரை எழுப்பினார். 79 இப்பொழுது, “தேவன் என்னை அனுப்பினதுபோல,” “நான் உங்களை அனுப்புகிறேன். நான் உலகத்தின் முடிவுபரியந்தம் எப்பொழுதும் உங்களோடும், உங்களுக்குள்ளும் இருப்பேன்” என்று கூறினார். உயிர்த்தெழுதலிலே, நம்முடைய ஈஸ்டர் வரும்பொழுது, அந்த ஈஸ்டர் காலையிலே, தேவன் அவரை மரித்தோரிலிருந்து உயிரோடெழுப்பியிருந்ததுபோல, அதேவிதமாகவே அவரும் அங்கே இருப்பாரே! 80 இப்பொழுது அதனுடைய ஓர் அடையாளத்திலே அவர் இதைக் கொண்டுவந்திருக்கிறார். ஓர் உயிர்த்தெழுதல் உண்டாயிருப்பதற்கு முன்னர், ஒரு மரணம் உண்டாக வேண்டியதாயிருக்கிறது. ஏனென்றால் அது ஒரு காரியமாய் இருக்க வேண்டியதாயுள்ளது, அப்பொழுது தூரமாய் போய், ஓர் உயிர்த்தெழுதலாயிருக்கும்படிக்கு திரும்பி வருகிறது. அதன் பொருள் “திரும்ப கொண்டுவரப்படுதல்” என்பதாய் உள்ளது. 81 மனிதன் உயிர்த்தெழுதலில் கிறிஸ்துவோடு உயிரோடு எழுப்பப்படுவதற்கு முன்னர், அவன் தனக்குத் தானே மரிக்க வேண்டியவனாயிருக்கிறான்; அவனுடைய எல்லா உலகப்பிரகாரமான கூட்டாளிகளுக்கும் மரிக்க வேண்டியவனாயிருக்கிறான்; அவனுடைய உலகப்பிரகாரமான எல்லாப் பழக்கவழக்கங்களுக்கும் மரிக்க வேண்டியவனாயிருக்கிறான்; தேவ பக்தியற்ற ஒவ்வொரு காரியத்திற்கும் மரிக்க வரவேண்டியவனாயிருக்கிறான்; அப்பொழுதே புதியதாக உயிர்த்தெழுப்பப்படுவான். 82 அப்பொழுது அவன் தம்மை வெறுமையாக்கும்போது, பரிசுத்த ஆவியானவர் அதை நிரப்புகிறார், அதாவது சரியாகக் கூறினால் பரிசுத்த ஆவியானவர் உள்ளே வந்து அந்த இடத்தை நிரப்புகிறார். அப்பொழுது அவன் தேவனை விசுவாசிக்கும்படியான ஒரு பிரஜையாகிறான். அப்பொழுது தேவன் காண்கிறதுபோலவே அவன் காண்கிறான். போதகர்கள் காண்கிறதுபோல அவன் காண்கிறதில்லை. சபை அங்கத்தினர்கள் காண்கிறதுபோல அவன் காண்கிறதில்லை. தேவன் காண்கிறதுபோன்று அவன் காண்கிறான். அப்பொழுது கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்பதையே அவன் காண்கிறான். அப்பொழுது தேவனுடைய வல்லமை மிகவும் மகத்தானதாயிருந்தவிதமாகவே இன்றைக்கும் இருப்பதையே அவன் காண்கிறான். 83 அவனுடையப் பழைய மாம்சப்பிரகாரமான நிலைமையில், நீங்கள் அவனுக்கு கல்விபுகட்டலாம், அவனை மெருகேற்றச் செய்யலாம், அவனுக்கு உதவிச் சம்பளம் அளிக்கலாம், அவனை மிகச்சிறந்த சபையில் அமர்த்தலாம், அவனுக்கு சபையில் அருமையான சாய்மானமுடைய இருக்கைகளை வைக்கலாம், சிறந்த அங்கத்தினர்களை அளிக்கலாம். ஆனால் அவன் முதலில் மரிக்கும் வரையில் அவனிடத்தில் எந்தவிதமான வித்தியாசமும் இருக்காது, மரித்தப் பின்னரே புதிதாக எழுப்பப்படுகிறான். அப்பொழுது அவனை அழைத்த பரிசுத்த ஆவியானவர், அவனை அனுப்பினவர், காலத்தின் முடிவுபரியந்தமும் அவனோடு இருக்கிறார். ஆமென். ஓ, அது அதிர்ச்சியானதாயிருக்கிறது என்பதை நான் அறிவேன், ஆனால் அது சத்தியமாயிருக்கிறது. 84 அப்படியானால், இன்றைக்கு கிறிஸ்து நமக்குள் இருப்பாரேயானால், அவர் இங்கே பூமியின்மேல் இருந்தபோது அவர் செய்த அதேக் காரியங்களையேச் செய்வார். கர்த்தராகிய இயேசு இன்றைக்கு மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டு, நமக்கு மத்தியில் ஜீவிப்பாரானால், “நான் செய்கிற கிரியைகளை நீங்களும் கூட செய்வீர்கள். ஏனென்றால் நான் உலகத்தின் முடிவுபரியந்தம் உங்களுடனே கூட இருப்பேன்” என்று கூறியுள்ளாரே. அப்படியானால் அவர் மரித்தோரிலிருந்து எழுந்தவராயிருக்கிறாரா என்பதை நிரூபிக்க ஒரே ஒரு வழி மாத்திரமே உண்டு. அதை விசுவாசிக்கின்ற சபைக்கு கிறிஸ்து தம்முடைய மாறாத தம்முடைய உயிர்த்தெழுதலின் வல்லமையினால் அந்த சபைக்கு தம்மைத் தெரியப்படுத்துவார். நண்பர்களே, அது அவ்வாறு இருக்கத்தான் வேண்டும். 85 இது ஒன்று தேவனுடைய வார்த்தையாய் இருக்க வேண்டும் அல்லது ஒரு வஞ்சிக்கிற புத்தகமாய் இருக்க வேண்டும். அது உண்மை. இது சரியாயிருக்க வேண்டும் அல்லது தவறாயிருக்க வேண்டும். இது முழுவதும் சரியாயிருக்க வேண்டும் அல்லது முழுவதும் தவறாயிருக்க வேண்டும். ஒவ்வொரு வார்த்தையும் ஆவியினால் ஏவப்பட்டதாயிருக்க வேண்டும் அல்லது அவைகளில் ஒன்றுகூட ஆவியில் ஏவப்படாததாய் இருக்க வேண்டும். நான் அதை விசுவாசிக்க விரும்புகிறேன். 86 பவுல், “நான் உங்களிடத்தில் வந்தபோது, தேவனைப் பற்றிய சாட்சியைச் சிறந்த வசனிப்போடாவது ஞானத்தோடாவது அறிவிக்கிறவனாக வரவில்லை. உங்கள் விசுவாசம் மனுஷருடைய ஞானத்திலல்ல, தேவனுடைய பெலத்தில் நிற்கும்படிக்கு, என் பேச்சும் என் பிரசங்கமும் மனுஷ ஞானத்திற்குரிய நயவசனமுள்ளதாயிராமல், ஆவியினாலும் பெலத்தினாலும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது” என்றான். பவுல் ஏதோ ஒரு வேத சாஸ்திர பள்ளி அனுபவத்தைக் கொண்டு மெருகேற்றும்படியாய் கூட்டவோ அல்லது குறைக்கவோ ஒருபோதும் வரவில்லை. 87 அவன், “சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்து என்ற ஒரேக் காரியத்தைத் தெரியப்படுத்த மாத்திரமே வந்தேன். உயிர்த்தெழுதலின் வல்லமையை உங்களுக்குப் பிரசங்கிக்கவும், கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்ற ஒரு காரியத்தைத் தெரியப்படுத்தவும் மாத்திரமே வந்தேன்” என்றான். கலாத்தியர் 1:8-ல், அவன், “வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்” என்றான். அது உண்மை. 88 இப்பொழுது, அவர் உயிர்த்தெழுந்துவிட்டாரா? இந்தக் கேள்வியை நாம் கேட்கும்படியாகவே இந்தக் காலை இங்கே இருக்கிறோம். அவர் உயிர்த்தெழுந்துவிட்டாராரா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] 89 இப்பொழுது, இன்றைக்கு சமய சடங்காச்சாரங்கள் உலகம் முழுவதும் கூறப்பட்டுள்ளன. அவர்கள் மகத்தான…சுற்றித்திரிகிறார்கள்…அவர்களில் சிலர் ஜெபமாலைகளோடு சென்று ஒரு ஜெபத்தைத் திரும்பத் திரும்பக் கூறுகிறார்கள். அது அவர்களைப் பொறுத்ததாயுள்ளது. இன்றும் மற்றவர்கள் தாங்கள் சார்ந்துள்ள பெரிய ஸ்தாபனங்களின் பேரில் தற்பெருமையடித்துக் கொண்டு செல்லுகிறார்கள். அதுவும் அவர்களைப் பொறுத்ததாயுள்ளது. இன்னும் மற்றவர்கள் பெரிய சிலுவைகளை அருமையான சபைக் கட்டிடங்களின் மேலே வைத்து, இசைப் பேழைகளையும், சுரமண்டலங்களையும் வைத்துக் கொண்டு, “நாங்கள் என்ன வைத்துள்ளோம் என்பதைப் பாருங்களேன்! நகரத்தில் மிகச் சிறந்தவர்கள் எங்களுடைய சபைக்கு வருகிறார்கள்” என்று கூறுகிறார்கள். அது சரிதான். அதுவும் அவர்களைப் பொறுத்தது. 90 ஆனால் அது ஒரு தானியக் களஞ்சியத்திலிருந்தாலும் அல்லது அது ஒரு தொழுவத்தில் இருந்தாலும், அது எங்கேயிருந்தாலும் சரி, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைத் தவிர வேறொன்றையும் நான் அறிந்துகொள்ள விரும்பவில்லை. உங்களுக்குள்ளே உயிர்த்தெழுதலைத்தவிர வேறொன்றையும் அறிந்துகொள்ள நான் விரும்பவில்லை. நீங்கள் எவ்வளவு நல்லவர்களாயிருக்கிறீர்கள் என்பதைக் குறித்து கேள்விப்பட நான் விரும்பவில்லை, ஏனென்றால் நீங்கள் துவக்கத்திலேயே நல்லவர்கள் அல்ல. நாம் துவக்கத்திலிருந்தே நல்லவர்களாயிருக்கவில்லை. மானிட இருதயத்திற்குள்ளாக இருந்துவருகிற கர்த்தராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலைக் குறித்த ஒரு காரியத்தை மாத்திரமே நான் அறிந்துகொள்ள விரும்புகிறேன். அப்படியானால், கிறிஸ்து மரித்திருப்பாரேயானால், ஆம், மரித்துப்போய்விடவில்லை, ஆனால் மீண்டும் உயிரோடெழும்பிவிட்டார், ஆகையால் அவர் நம்மோடு இருக்கிறார். அப்படியானால் அவர் இங்கே பூமியின்மேல் இருந்தபோது செய்த அதேக் காரியங்களை, அவர் மீண்டும் தம்முடைய வார்த்தையின்படியே அவைகளைத் தோற்றுவிக்க கடமைப்பட்டவராய் இருக்கிறார். அவர் அதைச் செய்யக் கட்டுப்பட்டவராயிருக்கிறார். அதேக் காரியத்தை. அந்தக் காரியம் மீண்டும் பூமியின்மேல் தோற்றுவிக்கப்படுகின்றபோது… 91 இப்பொழுது, அவர் இங்கே இருந்தபோது, அவர் தம்மை ஒரு மகத்தான சுகமளிப்பவராக உரிமை கோரவில்லை. அவர் அவ்வாறு உரிமை கோரினாரா? அவர் ஒரு சுகமளிப்பவராயிருக்கவில்லை என்றே அவர் கூறினார். எனவே அவர், “பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்; அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார்” என்றார். 92 அவர் பெதஸ்தா குளத்தினூடாகக் கடந்து சென்றார். அங்கே பெருந்திரளான ஜனக்கூட்டம் படுத்துக்கிடந்தது, அதாவது முடமானவர்களும், குருடரும், நொண்டியானவர்களும், சப்பாணிகளும், கைகால் திருகிவாறு இருப்பவர்களும், சூம்பின உறுப்புடையவர்களும் தண்ணீர் கலக்கப்படுவதற்காகக் காத்துக் கொண்டிருந்தனர். இதோ இம்மானுவேல் வருகிறார், இதோ இயேசுவானவர் வஸ்திரம் முழுவதும் வல்லமையுடையவராய் வருகிறார். 93 அதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்னர் ஒரு ஸ்திரீ அவருடைய வஸ்திரத்தைத் தொட்டு பூரண சுகமடைந்தாள். அவள் அவரைத் தொட்டுவிட்டு, கூட்டத்திற்குள்ளே ஓடி உட்கார்ந்து கொண்டாள் அல்லது வேறெந்தவிதமாகவோ அது இருந்தது. அப்பொழுது இயேசு நின்று சுற்றும் முற்றும் பார்த்தார். பின்னர், “என்னைத் தொட்டது யார்?” என்று கேட்டார். 94 “ஏன்” என்றும், “போதகரே, திரளான கூட்டத்தைப் பாரும். எல்லோருமே உம்மைத் தொட்டுக்கொண்டிருக்கிறார்களே” என்றும் கூறினர். 95 அப்பொழுது அவரோ, “ஆம், ஆனால் நான்—நான் பலவீனமடைந்தேன்” என்றார். மேலும் அவர், “ஏதோக் காரியம் சம்பவித்தது” என்றார். 96 பின்பு அந்த ஸ்திரீயைக் கண்டுபிடிக்கும் வரைக்கும் கூட்டத்தாரை நோக்கி சுற்றும் முற்றும் பார்த்தார். அப்பொழுது அவர், “இப்பொழுது உன்னுடைய விசுவாசம் அந்தப் பெரும்பாட்டிலிருந்து உன்னைக் குணமாக்கிற்று” என்றார். புரிகிறதா? அவளுடைய விசுவாசம் அவரைத் தொட்டது. 97 அது நேற்றைய இயேசுவாய் இருந்தது. அது இன்றைய இயேசுவாயும் உள்ளது. அது என்றென்றைக்குமான இயேசுவாய் இருக்கும். சுகமளித்தலின் தேவன் என்ற ஒன்று இருக்கும்வரையில், சுகப்படுத்த இயேசு இருப்பார். இரட்சிக்கப்படும்படியான பாவி ஒருவன் இருக்கும்வரையில், அவனை இரட்சிக்க இயேசு இருப்பார். அது அவராகவே உள்ளது. 98 அவர் பெருந்திரளான கூட்டத்தினூடாகக் கடந்து அங்கு சென்று, ஒரு மரச்சட்டத்தின்மேல் படுத்துக்கிடந்த ஒரு மனிதனை குணப்படுத்தி, அங்கேயே அவனை விட்டுவிட்டு நடந்து சென்றுவிட்டார். ஏன், சீஷர்களும் மற்றும் யூதர்களும் அவரை நோக்கி, “ஏன்? அங்கே நோக்கிப்பாரும், அந்தக் கூட்டத்தாரை நோக்கிப்பாரும். அவர் ஏன் அங்கேப் போய் இந்த ஒருவரை சுகப்படுத்தவில்லை? அப்படி செய்திருந்தால் நான் அதை விசுவாசிப்பேன்” என்று கூறினர். அந்தவிதமாகவே அவர்கள் அவரிடத்தில் கேள்வி கேட்டனர். இந்த மனிதன் ஓய்வுநாளில் தன்னுடையப் படுக்கையை எடுத்துக்கொண்டு செல்வதை அவர்கள் கண்டனர். 99 அப்பொழுது அவர், “மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்” என்றார். 100 அவர் அங்கே எல்லாத் துதியையும் செலுத்துகிறார் என்று பார்த்தீர்களா? எந்த உண்மையான தேவனுடைய ஆவியும் அதேக் காரியத்தையே செய்யும். அது ஒவ்வொரு முறையும் தேவனுக்கே துதியை செலுத்தும். 101 அவர், “குமாரன் தாமாகவே ஒன்றையும் செய்யமாட்டார். ஆனால் பிதாவானவர் செய்ய நான் காண்கிறதெதுவோ, அந்தக் காரியங்களையே நான் செய்கிறேன். பிதாவானவர் ஒரு காரியத்தைச் செய்யும்போது, அவர் எனக்குக் காண்பிக்கிறார். அப்பொழுது நான் அதைச் செய்கிறேன்.” என்றார். 102 அப்பொழுது அது இயேசுவாய் இருந்திருந்தால், அது இன்றைக்கும் இயேசுவாய் இருக்க வேண்டும். அது உண்மை. 103 அவரால் ஜனக் கூட்டத்தில் நின்று, அவர்களுடைய சிந்தனைகளை அவரால் அறிந்துகொள்ள முடிந்தது. அவர் அவர்களோடிருந்தத் தவறு என்ன என்பதை அறிந்திருந்தார். அவர் அநேக முறை தம்முடையக் கூட்டத்தாரை நோக்கிப்பார்த்து, “நீங்கள் உங்கள் இருதயங்களில் சிந்திக்கிறதென்ன என்றும், வித்தியாசமான காரியங்களை ஏன் கூறுகிறீர்கள்?” என்றும் கேட்டார். 104 ஒரு சமயம் கிணற்றண்டையிலே ஒரு ஸ்திரீ அவரிடத்திற்கு வந்தாள். அப்பொழுது அவர், “தாகத்துக்குத்தா” என்றார். 105 அதற்கு அவளோ, “ஏன், யூதர்களாகிய நீங்கள் சமாரியர்களிடத்தில் இப்படிக் கேட்பது வழக்கமல்லவே” என்று கூறினாள். மேலும், “நாங்கள் யூதர்களோடு சம்பந்தகலப்பதில்லை” என்றும் கூறினாள். 106 அப்பொழுது அவர், “ஆனால் உன்னிடத்தில் பேசிக்கொண்டிருக்கிறவர் யார் என்பதை நீ அறிந்திருந்தாயானால், நீயே என்னிடத்தில் தாகத்துக்கு தா என்று கேட்டிருப்பாய்” என்றார். “ஓ, இப்பொழுது,” அதற்கு அவளோ, “அது எப்படி கேட்கமுடியும்?” என்று கேட்டாள். அதற்கு அவர், “போய் உன்னுடைய புருஷனை இங்கே அழைத்துக் கொண்டு வா” என்றார். அப்பொழுது அவள், “எனக்கு புருஷன் இல்லையே” என்றாள். 107 அதற்கு அவர், “அது உண்மை. உனக்கு ஐந்து புருஷர் இருந்தார்கள்” என்றார். மேலும், “இப்பொழுது உன்னோடு வாழ்ந்துகொண்டிருக்கிறவனும் உனக்குப் புருஷனல்ல,” என்றார். 108 அப்பொழுது அவள், “ஆண்டவரே, நீர் தீர்க்கதரிசி என்று காண்கிறேன்” என்றாள். மேலும் அவள், “இப்பொழுது இது மேசியாவின் அடையாளமாயிருக்கப்போகிறது என்பதை நான் அறிவேன்” என்றும் கூறினாள். பின்னும் அவள், “மேசியா வரும்போது, அவர் இந்தக் காரியங்களை எங்களுக்குச் சொல்லுவார் என்பதை நான் அறிவேன், ஆனால் நீர் யார்?” என்று கேட்டாள். அதற்கு அவரோ, “உன்னுடனே பேசுகிற நானே அவர்” என்றார். 109 அங்குதான் காரியம். அது என்னவாயிருந்தது? மேசியாவின் ஓர் அடையாளம். ஆமென். கவனியுங்கள். அவர்கள் அங்கே அதைத் தவறாகப் புரிந்துகொண்டனர். அது எதனைப் பொருட்படுத்தினது என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. அது அவர்களுடையக் கண்களைக் குருடாக்கியிருந்தது. அவருடைய அற்புதங்களும் மற்றக் காரியங்களும் அவர்களுடைய கண்களைக் குருடாக்கினது. 110 எனவே அது இன்றைக்கும் அவ்வண்ணமே உள்ளது. அதேக் காரியங்கள் மாம்ச் சிந்தைகொண்ட கண்களைக் குருடாக்கும், ஏனென்றால் அதனால் தேவனுடையக் காரியங்களைப் புரிந்துகொள்ள முடியாது. அது தேவனுக்கு விரோதமானதாயுள்ளது. அது தேவனுக்கு விரோதமானப் பகையாய் இருக்கிறது. மாம்ச சிந்தைத் தேவனுக்கு விரோதமானப் பகையாய் உள்ளது. நீங்கள் பரிசுத்த ஆவியினால் புதியதாய்ப் பிறந்து, தேவனுடைய சிந்தையை உங்களுக்குள்ளே பெற்றுக்கொள்ள, உங்களுடைய சொந்த மாம்ச சிந்தையை வெளியேற்ற வேண்டும். அப்பொழுதே உங்களால் அந்தக் காரியங்களை விசுவாசிக்க முடியும். அதன்பின்னர் அது உயிர்த்தோற்றமாகிவிடுகிறது. ஆமென். 111 அதன்பின்னர் இப்பொழுது கவனியுங்கள், அவர் இங்கிருந்தபோது, அவர் கிரியைகளைச் செய்தார். அவர் போகும்போது, அவர் தம்முடைய உயிர்த்தெழுதலுக்குப் பிறகு, தம்முடைய சபைக்கு அவர் இதைக் கூறினார், அதாவது அவர், “இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்” என்றார். அப்பொழுது அவர்களுடையக் கண்கள் திறக்கப்பட்டன. அவர்கள் அதைப் புரிந்து கொண்டனர். 112 பேதுருவும் மற்றவர்களும் அதற்கு முன்பு, அவரோடு நடந்து, அவரோடு பேசி, அவரோடேயிருந்த ஒரு நெருங்கின நண்பராய் இருந்தனர். ஆயினும் பேதுரு, “ஓ, நான் மிகவும் திடனற்றுப்போய் விட்டேனே! அங்கே இந்த மரணத்திற்குப் பிறகு, அவர்கள் அவரை அடக்கம் செய்துவிட்டனரே. எனவே நான்—நான் மிகவும் மனத்தளர்வடைந்துவிட்டேன். எனவே நான் மீன் பிடிக்கச் செல்லலாம் என்று நினைக்கிறேன்” என்று கூறினான். 113 அப்பொழுது அங்கே சீஷர்கள் சுற்றிலும் நின்று கொண்டிருந்தனர். எனவே அவர்களும், “நாங்களும் உம்முடனே வருகிறோம்” என்று கூறினார். ஆகவே அவர்கள் தங்களுடைய வலையை எடுத்துக்கொண்டுச் சென்றனர். திடனற்றுப் போயிருந்தனரே! விசுவாசிகள், ஒரு காலத்தில் மனோரீதியான வேதசாஸ்திரத்தில் நம்பிக்கை வைத்திருந்தனர். அவர்கள் ஒரு காலத்தில் மாம்சபிரகாரமாக விசுவாசங்கொண்டிருந்தனர். ஆனால் ஒரு சோதனை உண்டானபோது, அவர்கள் யாவரும் சுக்குநூறாக சிதறிப் போய்விட்டனர். 114 இப்பொழுது, இங்கே நான் உங்களுக்கு வருத்தமுண்டாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இல்லை, ஆனால் நான் உங்களைத் திருத்த விரும்புகிறேன். புரிகிறதா? ஒரு மனிதன், “ஆம், அது தேவனுடைய வார்த்தையாயிருக்கிறது. ஆம், தேவன் இயேசுவை உயிரோடெழுப்பினார் என்று இன்றைக்கு நான் விசுவாசிக்கிறேன்.” என்று கூறுவதன் மூலம் அவன் அறிவுப்பிரகாரமான விசுவாசத்தை மட்டுமே உடையவனாயிருக்கிறான் என்பதையே அது காண்பிக்கிறது. அப்படியானால் நீங்கள் பெற்றுள்ளது அவ்வளவுதான். முதலில் ஒரு சிறு திடநம்பிக்கையின்மை உங்களுடைய சபையில் உண்டாகிறபோது, நீங்கள் தூரமாய் போகிறீர்கள், வெளியேப் போய்விடுகிறீர்கள். புரிகிறதா? நீங்கள் அவருக்கு ஒரு சிநேகிதனாக இருக்கலாம், ஆனாலும் நீங்கள் அவரை அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையில் அறியவில்லை. 115 ஒருமுறைகூட அறியவில்லை, பெந்தேகோஸ்தேவுக்குப் பிறகு அந்தப் பிரசங்கியார், பேதுரு இதைப் போன்ற இப்படிப்பட்ட ஒரு காரியத்தைச் செய்யும்படிக் கூறினான். அதாவது அவர்கள் அவனைக் கொல்ல ஆயத்தமானபோது, அவர்கள் அவனை ஒரு சிலுவையின்மேல் தொங்கவிடப் போவதாயிருந்தனர். அப்பொழுது அவன், “நான் அந்தவிதமாக மரிப்பதற்குக் கூட பாத்திரன் அல்ல. எனவே என்னுடையப் பாதங்களை மேலாகவும், என்னுடையத் தலையை கீழாகவும் திருப்பி தொங்கவிடுங்கள். ஏனென்றால், என் ஆண்டவர் தன்னுடையத் தலை மேலிருந்தவாறான நிலையில்தான் மரித்தார்” என்றான். ஆம். எனவே நான் அவ்வாறு ஒருபோதும் மரிக்க வேண்டாம், வேண்டாம். புரிகிறதா? அவன் கிறிஸ்துவோடு அப்பொழுது இருந்தான், ஆனால் இப்பொழுதோ கிறிஸ்து பேதுருவுக்குள் இருந்தார். அப்பொழுது பேதுரு தன்னை வழிநடத்திக்கொண்டிருந்தான். ஆனால் பரிசுத்த ஆவியானவர் வந்த பிறகு, பரிசுத்த ஆவியானவரே அதன்பின் வழிநடத்திக்கொண்டிருந்தார். பேதுருவோ தன்னை வழிநடத்தாமல் இருக்க, அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் அவனை வழிநடத்தினார். 116 இப்பொழுது நீங்கள்…பெற்றிருந்தால்…நீங்கள் நல்ல யோசனைகளை உடையவராயிருந்தால், நீங்கள் அமர்ந்து, வேதத்தைக் குறித்து யோசிக்க முயற்சித்து, “எப்படி அவரால் மரித்தோரிலிந்து உயிரோடெழுந்திருக்க முடியும்? நாம் வாழ்ந்துகொண்டிருக்கிற இந்த விஞ்ஞான, மிகப்பெரிய நாகரீக காலத்தில் இந்த அற்புதங்களும் மற்றக் காரியங்களும் எப்படி இன்றைக்கு நிகழக்கூடும்” என்று யோசிக்கலாம். நீங்கள் அதை யோசித்துப் பார்க்க முயற்சிக்கலாம், அவ்வாறு செய்யும்போது, நீங்கள் தேவனிடத்திலிருந்து எல்லா நேரத்திலும் தூரமாய் விலகிக்கொண்டே செல்லுகிறீர்கள். நீங்கள் யோசனையின் மூலம் அவரை ஒருபோதும் அறிந்துகொள்ளவே மாட்டீர்கள். தேவன் யோசனையினால் அறியப்படுகிறதில்லை. 117 தேவன் விசுவாசத்தினால் அறியப்படுகிறார். நீங்கள் அதை ஏற்றுக்கொள்ளுகிறீர்கள். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்கள். உங்களுக்குள்ளாக ஏதோ ஒரு காரியம் சம்பவிக்கும் வரையில் உங்களால் அதைச் செய்ய முடியாது, அவ்வாறு சம்பவித்தப் பிறகே பரிசுத்த ஆவியானவர் உள்ளே வருகிறார். அப்பொழுது நீங்கள் கிறிஸ்துவின் சிந்தையுடையவராயிருக்கிறீர்கள். 118 கவனியுங்கள். அவர்கள் இரா முழுவதும் மீன்பிடித்தும், ஒரு மீனையும் பிடிக்கவில்லை. மிகவும் திடனற்றுப் போயிருந்தனரே! அடுத்த நாள் காலை, சூரியோதயத்தில், அவர்கள் கரையை நோக்கிப் பார்க்க, அங்கே இயேசு நின்றிந்திருந்தார். ஆனாலும் அவர்கள் அவரை அறிந்துகொள்ளவில்லை. அதுதான் சோகமான பாகம். அவர்கள் அவரை அறிந்திருக்கவில்லை. 119 ஓர் இரவு சமுத்திரப் புயலில் அந்தச் சிறு படகு கிட்டத்தட்ட மூழ்கப்போவதாயிருந்தது. அப்பொழுது இதோ அருமையான ஆண்டவர் அவர்களை நோக்கியவாறு நடந்து வந்தார். அப்பொழுது அவர்களோ, “ஓ விலகிப் போ. அது ஒரு ஆவி. அது பேய்த்தனமான ஆவியின் உருவம். நாங்கள் அதனோடு எந்த தொடர்புங்கொள்ள விரும்பவில்லை” என்றனர். அவர்களுக்கு அருகில் இருந்ததான அந்த ஒருவர் மாத்திரமே அவர்களுக்கு உதவ முடிந்தது. ஆனால் அவர்களோ அதைக் குறித்து பயமடைந்திருந்தனர். 120 நான் இன்றைக்கு பரிசுத்த ஆவியைப் பெற்றிராத ஜனங்களாகிய உங்களுக்கு இதைக் கூறுவேனாக. நமக்கு ஏராளமான பரியாசங்கள் சபைப் பிரிவுகளில் ஏற்பட்டுள்ளன என்று நான் தெளிவாக உணருகிறேன். அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளாமலிருக்கும்போது, பரிசுத்த ஆவியைப் பெற்றுவிட்டதாக பாவனைசெய்யும் ஏராளமான காரியங்களை நாம் அறிந்துள்ளோம். அது உண்மை. எனவே நீங்கள் சபை அங்கத்தினர்கள் என்று உரிமை கோரும்படியாக, அங்குள்ள உங்களுடைய சபைப் பிரிவில் அதைப் பெற்றிருப்பதாகக் கூறினாலும், அவர்கள் உண்மையாக அதைப் பெற்றிருக்கவில்லை. அது உண்மை. ஆகையால் எங்கே ஆதரவு உண்டோ அங்கே எதிர்ப்பும் உண்டே. அதை நினைவில் கொள்ளுங்கள். எங்கே ஓர் எதிர்மறை உண்டோ, அங்கே ஒரு உடன்பாடும் உண்டு. எங்கே ஒரு போலியான டாலர் உண்டோ, அங்கே அசலான ஒன்றும் உண்டு. எங்கே யாராவது ஒருவர் பரிசுத்த ஆவியைப் பெற்றிருப்பதாகப் பரியாசமும், பாவனையும் பண்ணுகிறார்களோ, அங்கே அசலான பரிசுத்த ஆவியும் உண்டு. அதை நினைவில்கொள்ளுங்கள். 121 அசலான அந்தக் காரியம்தான் உங்களுக்கு உதவி செய்யும்; அந்தக் காரியம்தான் உங்களை விடுவிக்கும்; அந்தக் காரியம்தான் உங்களை உங்களுடையப் பழக்கவழக்கமான சிறை வீட்டிலிருந்து உங்களை வெளியேக் கொண்டு செல்லும்; அதுவே உங்களை உங்களுடையப் பயம் மற்றும் நிலைகுலைவான சிறைவீட்டிலிருந்து வெளியேக் கொண்டு வரும்; அந்தக் காரியமே உங்களை புற்றுநோயிலிருந்து வெளியேக் கொண்டுவந்து உங்களை மீண்டு ஒரு ஜீவிக்கின்ற சிருஷ்டியாக மாற்றும். அந்தக் காரியமே உங்களை கடைசி நாளில் எழுப்பும்; இப்பொழுது உங்களுக்கு அருகில் நிற்கிறது, ஆனால் நீங்களோ அதைக் குறித்து பயமடைந்திருக்கிறீர்கள். பயப்படாதீர்கள். அது அவராகும். 122 அவர், “நான்தான்” என்றார். “பயப்படாதிருங்கள், நான்தான்.” ஆனால் அவர்களோ அதைக் குறித்து பயமடைந்திருந்தனர்; அதற்கான அவருடைய வார்த்தையை ஏற்றுக்கொள்ள பயப்படுகின்றனர். அவரோ, “அது…பயப்படாதீர்கள். நான்தான்.” என்றார். 123 அவர்களிடத்தில் ஏதாகிலும் மீன் உண்டா என்று இயேசு அவர்களிடத்தில் கேட்டார். அவர்களோ, “இல்லை” என்றனர். மேலும் அவர்கள், “நாங்கள் இராமுழுவதும் பிரயாசப்பட்டுள்ளோம்” என்றனர். அப்பொழுது அவர்கள் கரைக்கு வந்தபோது, மீனை, பொரித்த மீன் அவர்களுக்காக ஆயத்தமாய் வைத்திருப்பதைக் கண்டனர். அந்த அற்புதத்தினால் அது அவர் என்று அறிந்துகொண்டனர். 124 இன்னும் இரண்டுபேர், எம்மாவூருக்கு செல்லும் பாதையில் சென்றுகொண்டிருந்தனர். இப்பொழுது நாம் முடிக்கப் போகின்ற காரணத்தால் கவனமாக செவிகொடுங்கள். உயிர்த்தெழுதலுக்குப் பிறகு ஒருநாள் எம்மாவூருக்குப் போகும் வழியில் இரண்டுபேர் சென்றனர். அதில் ஒருவர் கிலெயோப்பா மற்றொருவர் அவருடைய நண்பர். அதுவோ இதைப் போன்ற ஓர் அழகான ஓய்வு நாள் காலை வேளையாய், அழகான முதல் ஈஸ்டராயிருந்தது. இப்பொழுது கவனமாக வார்த்தையை உற்றுநோக்குங்கள். ஆயத்தமாயிருங்கள். 125 அவர்கள் முதல் ஈஸ்டரை உற்று நோக்கிக் கொண்டிருக்கையில், அவர்களுக்கு ஏமாற்றம் உண்டாயிருந்த காரணத்தால், வாட்டங்கொண்ட இருதயத்தோடு திடனற்றுப் போயிருந்தனர். 126 ஏதோ ஓர் ஏமாற்றத்தின் காரணமாக, ஏதோ ஒரு காரியம் சம்பவித்த காரணத்தால் இன்றைக்கு இந்த ஈஸ்டரை உற்றுநோக்கிக் கொண்டிருக்கிற புருஷரும், ஸ்திரீகளும் இங்கே இருக்கலாம். ஆனால் நினைவிருக்கட்டும், கர்த்தராகிய இயேசு இன்றைக்கு கல்லறையிலிருந்து எழுந்துவிட்டார். அவர் ஜனங்களுக்கு மத்தியில் ஜீவித்துக்கொண்டிருக்கிறார். 127 அநேக சமயங்களில் நான் பள்ளியில் இருந்தபோது, நான் தாவரவியலைப் பயின்றுள்ளேன், நான் எப்பொழுதுமே தாவரவியலைப் பயின்று வந்துள்ளேன். எனக்குத் தாவரவியல், தாவர வாழ்க்கையல்ல; அதாவது எப்படி தாவரமானது வளருகின்றது என்பதைக் காண்பதும், எப்படியாய் சூரிய வெளிச்சம் அதன்மேல் படுகின்றது என்பதைக் குறித்துமே கூறுகிறேன். தாவரவியல் என்பது என்னைப் பொருத்தமட்டில் அதை சிருஷ்டித்த ஒருவரே அந்தத் தாவரத்தை வளரச் செய்கின்ற சிருஷ்டிகராய் இருக்கிறார். ஓ, அந்த ஈஸ்டர் மலர்கள் எவ்வளவு அழகாகக் காணப்படுகின்றன. அவைகளை நோக்கிப்பாருங்கள். ஓ என்னே! சரியான மனநிலையில் உள்ள எவருமே சுற்றிலும் காணப்படுகின்ற அந்த அழகான மலர்களை நோக்கிப் பார்த்து, தேவன் இல்லை என்று கூறவே முடியாது. 128 இதோ இங்கே அவர்கள் திடனற்றுப்போய், இப்பொழுது வீட்டிற்கு திரும்பி போய்க்கொண்டிருக்கின்றார்கள். “பாருங்கள், நாம் நன்றாகத்தான் துவங்கினோம். எல்லாம் சரியாயிருக்கும் என்று நாம் எண்ணியிருந்தோம். ஆனால் இப்பொழுது நாமோ வீட்டிற்குத் திரும்பிப் போக வேண்டியதாயிற்றே என்று கூறி, எம்மாவூருக்கு செல்லும் வழியில் திரும்பிக்கொண்டிருந்தனர்.” அவர்கள் திடனற்றுப் போனவர்களாய் நடந்து போகையில், அவர்கள்… 129 உரையாடலோ சரியானதாய் இருந்தது. அவர்கள் அவரைக் குறித்து பேசிக்கொண்டிருந்தனர். அப்பொழுதுதான் அவர் தோன்றினர். 130 நம்முடைய உரையாடலை கிறிஸ்துவைத் தவிர மற்றெல்லாக் காரியத்தையுங் குறித்து பேசிக்கொண்டிருக்கின்ற காரணத்தினால் இன்றைக்கு அவர் நம்மில் அநேகருக்கு பிரசன்னமாகிறதில்லை. அந்த வேலையை நாம் எப்பொழுது செய்து முடிக்கப் போகிறோம் என்றும், அல்லது நாம் இங்கே என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்பதைக் குறித்தே எப்பொழுதும் நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். உங்களுடைய உரையாடல் கிறிஸ்துவின் பேரிலேயே இருக்கட்டும். நீங்கள் அவரைக் குறித்து பேசும்போது, அப்பொழுதே அவர் பிரசன்னமாகிறார். அவரைக் குறித்து பேசிகொண்டிருங்கள். 131 அவர்கள் அவரைக் குறித்து பேசிக்கொண்டே சென்று கொண்டிருந்தனர். அவர்கள் அவரை நேசித்திருந்தும், அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்துவிட்டார் என்பதை அறியாதிருந்தனர். 132 இன்றைக்கு உலகம் முழுவதிலும் உள்ள இந்தப் பெரிய சபைகளில் உள்ள அநேக ஜனங்கள் கர்த்தராகிய இயேசுவை உண்மையாகவே நேசிக்கின்றனர். அவர்கள் கர்த்தரை நேசிக்கிறார்கள். ஆனாலும் அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்துவிட்டார் என்பதை உண்மையாகவே அறியாதிருக்கின்றனர். 133 கவனியுங்கள், ஒரு வேளை அவர் ஓர் அந்நியராகப் புதரிலிருந்து வெளியே வந்து, ஒருகால் அவர்களை, “காலை வணக்கம்” என்று கூறி வாழ்த்தியிருக்கலாம். அப்பொழுது அவர்களோ முழுவதும் சோகமாயும், மனமுடைந்துபோயும், “ஓ, நான் அவரை நேசித்தேன். மரித்துப்போய் நான்கு நாட்களான ஒரு மனிதனின் கல்லறையண்டை நின்று, அதாவது லாசருவின் கல்லறையண்டை நின்று, ‘லாசருவே வெளியே வா’ என்று கூறினதை நான் கண்டேன். ஓ, எப்படி அந்த மனிதர் தவறிப்போயிருக்க முடியும்? அவரால் எப்படி நம்மை இந்தவிதமாக எதிர்பார்த்தபடி நடவாமல் ஏமாற்றமாய் விட்டுவிட முடிந்தது? இப்பொழுதோ நாம் வெட்கத்திலும், அவமானத்திலும் நிற்கிறோமே? நாம் மீண்டும் நம்முடைய மீன்பிடித்தலையும், தச்சுவேலையையும் செய்யும்படித் துவங்க வீட்டிற்குத் திரும்பி போய்க்கொண்டிருக்கிறோமே?” என்று கூறிக்கொண்டிருந்திருக்கலாம். புரிகிறதா? 134 அப்படித்தான் இன்றைய நவீனக் கிறிஸ்தவன் இருக்கிறான் அல்லவா? ஓ, சுகமளித்தல் நிகழட்டும், அவர்கள் ஜெயத்தை ஆர்ப்பரித்துக்கொண்டிருப்பார்கள். பரிசுத்த ஆவியின் வல்லமை விழட்டும், அவர்கள் ஜெயத்தை ஆர்ப்பரித்துக்கொண்டிருப்பார்கள். உண்மையாகப் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டவர்கள் ஜீவியப் பயணம் முழுவதும் அந்தவிதமாகவே தரித்திருக்கிறார்கள். 135 ஆனால் இன்னமும் மாம்ச சிந்தையோடு நடந்துகொண்டிருக்கிற மனிதருக்கு ஒரு சிறு வாட்டம் உண்டாகட்டும், அப்பொழுது ஏதோக்காரியம் தவறாய்ப் போகிறது, அவர்கள் உடனே விலகிப்போய், “பாருங்கள், நான் எல்லாம் சரியாயிருந்தது என்று எண்ணினேன். ஆனால் ஓ, என்னே, இப்பொழுது இதை நோக்கிப் பாருங்கள். இந்தச் சிறிய சபை ஒருபோதும் தவறாது என்று நான் எண்ணியிருந்தேன். இந்த நபரைக் குறித்து…நான் இவ்வாறு எண்ணியிருந்தேன்” என்று கூறுவார்கள். நீங்கள் உங்களுடைய சிந்தையில் தவறானக் காரியத்தைப் பதித்து வைத்துள்ளீர்கள். புரிகிறதா? உங்களுடைய சிந்தையை தவறிப்போக முடியாத அவர்மேல் வையுங்கள். உங்களுடைய உரையாடல் உங்களுடைய சபையைப் பற்றியதாயில்லாமல், உங்களுடையக் கர்த்தரைப் பற்றியதாயிருக்கட்டும். அந்த ஒருவரைப் பற்றினதாகவே இருக்கட்டும். உங்களுடைய அயலகத்தாரைப் பற்றினதாயிராமல் உங்களுடைய ஆண்டவரைப் பற்றினதாயிருக்கட்டும். உங்களுடைய உரையாடல் அவரைப் பற்றியதாகவே இருக்கட்டும். 136 அப்பொழுது அவர்கள் பேசிக்கொண்டே பயணித்துக் கொண்டிருக்கையில், திடீரென்று ஒரு மனிதன், வெறுமனே ஒரு சாதாரண மனிதன்… 137 அவர் ஒரு மகத்தான வேதபாரகனாய் இருக்கவில்லை. அவர் கல்வி பயின்றிருக்கவில்லை. அவர் கல்வியறிவு இல்லாதவராயிருந்தார். நாம் அறிந்தவரையில், அவர் தன்னுடைய ஜீவியத்தில் ஒருநாள்கூட பள்ளிக்குச் சென்றதேயில்லை. ஆனால் எப்போதும் வாழ்ந்துவந்த எந்த மனிதனுக்கு அப்பாற்பட்ட ஞானத்தை அவர் உடையவராயிருந்தார். பரிசேயர்கள் அவருடைய ஞானத்தைக் கண்டபோது, அவர்களோ, “அவர் எந்தப் பள்ளிக்குச் சென்றார்? அவர் எங்கிருந்து வந்தார்? அவர் இந்த வார்த்தைகளை எங்கிருந்து கற்றறிந்திருந்தார்? அவர் எப்படி இதைச் செய்கிறார்? எங்கள்…எங்களுடைய வேதபாடசாலை கருத்தரங்குகளினூடாக ஒருபோதும் வரவில்லையே. அவர் எங்களுடைய ஜனங்களில் ஒருவரைப்போல பேசவில்லையே. இந்த வார்த்தைகள் எங்கிருந்து வருகின்றன?” என்று கேட்டனர். அவர்களுடையக் குழுக்களை அவர் சேர்ந்தவராயிராத காரணத்தால் அவர்கள் இடறலடைந்தனர். அவர் தம்மை அவர்களோடு கூட்டாளியாக இணைத்துக்கொள்ளவில்லை. அவர் தெள்ளந்தெளிவோடு தனிமையாய் நின்றார், ஏனென்றால் அவர் தேவனாயிருந்தார். 138 அவர் நின்று தம்மைத்தாமே வெளிப்படுத்தினார். மேலும் அவர், “உங்களால் என்னை விசுவாசிக்க முடியவில்லையென்றால், நான் செய்கிற கிரியைகளையாவது விசுவாசியுங்கள். அவைகள் என்னை பிதா அனுப்பினார் என்று சாட்சிக்கொடுக்கின்றன” என்றார். அவர், “என்னுடையக் கல்வி…” என்றார். இந்தவிதமாக வேறு வார்த்தைகளில் கூறினால், “என்னுடையக் கல்வி உங்களுடைய வாஞ்சைகளைத் திருப்திபடுத்துகிறதில்லை, என்னுடைய பட்டத்தினால்…நான் எந்தப் பட்டத்தையும் பெற்றிருக்கவில்லை. ஆனால் என்னுடையப் பட்டம், என்னுடையப் பல்கலைக்கழகப் பட்டச்சான்றிதழை உங்களுடைய வேதாகமக் கல்லூரி கருத்தரங்குகளிலிருந்து பெற்றிருக்கவில்லை. என்னுடையப் பல்கலைக்கழகப் பட்டச்சான்றிதழ் நான் செய்கிற கிரியைகளே பிதா என்னை அனுப்பினார் என்பதற்கு ஆதாரமாயுள்ளது. அவைகளே என்னுடைய பல்கலைக் கழக பட்ட சான்றிதழ்களாய் உள்ளன” என்பதாகும். அதுவே நான் அறிந்துள்ள மிகச் சிறந்த பட்டமளிப்பு சான்றிதழாகும். அந்த பட்டமளிப்பு சான்றிதழ்களையே தேவன் நமக்கு அதிகமாகத் தருகிறார். “நான் செய்கிற கிரியைகளே, பிதாவானவர் என்னை அனுப்பினார் என்பதற்கு ஒரு ரூபகாரப்படுத்துதலாய் உள்ளது. அது போதுமானதாயிருக்கவில்லையா, அப்படியானால் எனக்குப் பதிலாக அந்தக் கிரியைகளையாவது நம்புங்கள்.” 139 இப்பொழுது அவரைக் கவனிப்போம். ஓ, நான் அவரை நேசிக்கிறேன். அங்கே அவர் நடந்து செல்கிறதை நான் காண்கையில், அப்பொழுது அவரோ, “நீங்கள் ஏன் துக்கமுள்ளவர்களாய் இருக்கிறீர்கள்? இந்தவிதமாக உங்களை வருத்தமாக உணரச் செய்தது எது? என்னே ஓர் அழகான நாள்…காணப்படுகிற ஒவ்வொரு காரியமும் எப்படியுள்ளது என்று பாருங்களேன்!” என்பதைக் காண்கிறேன். 140 அவர், “ஆம்” என்றார். அப்பொழுது அவர்களோ, “நாங்கள் இவ்வாறு நம்பியிருந்தோம்…நானும் அறிவேன்…” என்று கூறினதுமன்றி, “நீர் இவ்விடத்திற்கு ஓர் அந்நியரோ? ஏன்?” என்று கேட்டு, “நசரேயனாகிய இயேசுவை மகத்தான அடையாளங்கள் முதலியவற்றினால் தேவனால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு மனிதனாயிருந்தார் என்பதை நீர் அறிந்திருக்கவில்லையா? நாங்கள் மூன்றரை வருடங்களாக அவரை பின்பற்றி வந்தோம். பிலாத்துவோ அவரை சிலுவையிலறைந்தான். அவர்கள் அவரை அடக்கம் செய்து கல்லறையில் வைத்துவிட்டனர்” என்பது மட்டுமின்றி, “அவர் ஓர் இராஜாவாய், ஏன், ஒரு மகத்தான தலைவராய் இருப்பார் என்றே நாங்கள் நம்பியிருந்தோம். ஆனால் அவரோ இப்பொழுது தைலமிடப்பட்டு அங்கே கீழே கல்லறையில் வைக்கப்பட்டு படுத்துக்கிடக்கிறார்” என்று அவர்கள் கூறினர். அதற்கு அவரோ, “ஏன், நீங்கள் வேதவாக்கியங்களை அறிந்திருக்கவில்லையா?” என்று கேட்டார். 141 ஓ, எனக்கு அது பிடிக்குமே! அவர் என்ன செய்தார்? அவருடைய நிகழ்காரியங்களை நிரூபிக்கும்படியாக நேரடியாக வேதவாக்கியங்களுக்குச் சென்றார். எந்த உண்மையான தேவனுடைய ஆவியும் நேரடியாக வேதவாக்கியத்திற்கேச் செல்லும். 142 அவர் என்ன செய்தார்? பழைய ஏற்பாட்டிற்கு திரும்பிச் சென்று, மோசேயின் ஆகமங்களுக்குச் சென்று, மோசேயைக் குறித்தும், பல்வேறுபட்டவர்களைக் குறித்தும் பேசத்துங்கி, இயேசுவானவர் வந்து, எவ்விதம் பாடுபடுவார் என்றும், என்ன செய்வார் என்றும் அவர்கள் எப்படிக் கூறியிருந்தனர் என்றும் பேசத் துவங்கினார். மேலும் அவர், “இந்த வேதவாக்கியத்தை, இந்த வார்த்தையை நீங்கள் அறிந்திருக்கவில்லையா?” என்று கேட்டார். அவர் தொடர்ந்து, “அப்பொழுது கூறப்பட்ட வார்த்தை இப்பொழுது நிறைவேற்றப்பட்டிருப்பதை நீங்கள் அறிந்திருக்கவில்லையா? கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்திருக்க வேண்டும் என்பதை நீங்கள் அறிந்திருக்கவில்லையா?” என்று கேட்டார். அங்கே… 143 அவர்களோ, “இல்லையே, நாங்கள் அதை அறிந்திருக்கவில்லையே” என்றனர். நல்ல ஜனங்கள், அவரை நேசித்தவர்கள், ஆனாலும் அவர் மரித்தோரிலிருந்து எழுந்திருந்ததை அறிந்திருக்கவில்லை. 144 சகோதரனே, சகோதரியே, இன்றைக்கு அது அவ்வண்ணமாகவே உள்ளது, இன்றைக்கும் சரியாக அதேக் காரியமாகவே உள்ளது. ஓ, தேவன் தாமே உங்களுடைய உள்ளிந்திரியங்களை எழச்செய்வாராக! அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்துவிட்டார் என்பதை ஜனங்கள் புரிந்து கொள்ளுகிறதில்லை. அவர் மரித்துவிடவில்லை. அவர் உயிரோடிருக்கிறார். 145 அவர் வேறொரு ரூபத்தில் நடந்து சென்றார். அவர் ஒரு மனித ரூபத்தில் அவர்களுக்குத் தோற்றமளித்தார். 146 அவர் உங்களுக்கு உங்களுடைய அயலகத்தாரின் ரூபத்தில் தோற்றமளிக்கலாம். அவர் உங்களுக்கு ஓர்—ஓர் ஊழியக்காரரின் ரூபத்தில் அல்லது உங்களுடைய தாயாரின் ரூபத்தில் தோற்றமளிக்கலாம். கிறிஸ்து ஜனங்களுக்குள்ளிருந்து உங்களுக்கு தோற்றமளிக்கிறார். ஆகையால் எல்லோரையுமே சரியான முறையில் நடத்துங்கள், தயவாயிருங்கள், அயலகத்தாரிடம் ஐக்கியமாயி௫ங்கள், அன்பாயி௫ங்கள், கிறிஸ்துவே அந்த நபரில் இருக்கிறார். “கிறிஸ்து மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இ௫க்கிறார்.” நீங்கள் நடந்து போகையில் ஜனங்கள் உங்களுக்கு பிரசன்னமாகி உங்களிடத்தில் தயவான ஒரு நபர் பேசத்துவங்கும்போது அவருக்குச் செவிகொடுங்கள். அது இயேசுவானவர் உங்களிடத்தில் பேசிக்கொண்டிருப்பதை நீங்கள் அறியாததாய் இருக்கலாம். பாருங்கள், அவர் புலப்படுகிறார். “நான் உங்களோடும், உங்களுக்குள்ளும் இருப்பேன். நீங்கள் இவர்களுக்கு எதைச் செய்கிறீர்களோ, அதை நீங்கள் எனக்கேச் செய்கிறீர்கள்.” 147 ஓ, நீங்கள் அதை அந்தவிதமாக நோக்கிப்பார்க்கத் துவங்கும்போது, அந்தப் பழைய பாரம்பரியம் வீழ்ச்சியுறுகிறது. புரிகிறதா? அப்பொழுது அது முறைமைகளைக் கொண்ட வார்த்தைகளாக, அநேக வார்த்தைகளை ஒன்றுசேர்த்தப் பிரமாண அறிக்கையாக மாறுகிறதில்லை. ஆனால் அது கிறிஸ்து இப்பொழுது நமக்குள்ளே இருக்கிறார் என்ற ஒரு ஜீவனுள்ள உயிர்த்தோற்றமாகிறது. பரிசுத்த ஆவியானவர் முன்னும் பின்னும் அசைவாடி, ஒவ்வொரு மானிட வர்க்கத்தினுடைய இருதயத்தினூடாக அசைவாடி, ஆராய்ந்து, அழிவு நிலையிலுள்ள ஜீவியத்தைக் கண்டித்துரைக்கிறார். அதே சமயத்தில் நீங்கள் அதை அறிக்கை செய்யும்போது, அவர் தேவனுக்கு முன்பாக அதைப் பற்றிக்கொண்டிருக்க, இரத்தம் அதை சுத்திகரிக்கிறது. ஆமென். 148 அதன்பின்னர் அவர்கள் தொடர்ந்து நடந்து சென்றனர். இப்பொழுது கவனியுங்கள். அப்பொழுது சாயங்கால நேரமாகிக் கொண்டிருந்தது. ஓ, நான் இதை விரும்புகிறேன்! 149 நமக்கு இன்னும் சற்று நேரம் இருந்திருந்தால்…நலமாயிருக்கும். ஓ, என்னே! நான் இந்த அளவு நீண்ட நேரம் எடுத்துக்கொண்டதை நான் அறிந்திருக்கவில்லை. 150 பாருங்கள். அது சாயங்கால நேரமாய் இருந்து கொண்டிருந்தது. நான் முடிக்கவுள்ளேன். நீங்கள் கவனித்தீர்களா? இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். அது சாயங்கால நேரமாய் இருந்துகொண்டிருந்தது. அப்பொழுது அவரோ அவர்களைவிட்டு அப்புறம் போகிறவர்போலத் தன்னைக் காண்பித்தார். ஆனாலும் அவர்களோ உள்ளே வரும்படிக்கு அவரை வருந்திக்கேட்டுக் கொண்டனர். 151 நாம் இன்றைக்கு எந்த அளவு வருந்தி வேண்டிக் கொள்வோம் என்று நான் எதிர்பார்க்கிறேன். நீங்கள் எந்தளவு அதை சரியாக செய்துகொண்டிருக்கிறீர்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன். “ஓ கர்த்தாவே, உயிர்த்தெழுந்த ஒருவரே, நீர் என்னுடைய இருதயத்திற்குள்ளாக வரும்படி நான் வருந்தி வேண்டிக்கொள்ளட்டும். எனக்குள்ளே வாரும். நான் உம்மை விசுவாசிக்க விரும்புகிறேன். நான் அரைகுறையான கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளேன், ஆகையால் நான்…அறிவுக்கேற்ற விசுவாசத்தில் கொண்டுள்ள நம்பிக்கையின் மூலம்…அறிவாற்றலுள்ள விசுவாசத்தையே உடையவனாயிருக்கிறேன். ஆனால் நான் உம்முடைய உயிர்த்தெழுதலின் வல்லமையை அறிந்துகொள்ளவே விரும்புகிறேன், ஏனென்றால் இந்த நேரத்தில் மட்டுமே நான் ஆயத்தம் செய்து கொள்ள வேண்டும். நான் தலைசாய்த்து மரிக்கும்போது உம்மை அறிந்துகொள்ள விரும்புகிறேன். உம்முடைய உயிர்த்தெழுதலின் வல்லமையில் உம்மை நான் அறிந்துகொள்ள விரும்புகிறேன். நான் அதைக் குறித்து எந்த யூகித்தலையும் செய்ய விரும்பவில்லை. நான் உம்மை அறிந்துகொள்ளவே விரும்புகிறேன். நீர் உள்ளே வந்து என்னோடு தரித்திருப்பீரா? பொழுதும் போயிற்றே.” 152 கவனியுங்கள், அவர்கள் உள்ளே சென்றபோது, கதவுகளை மூடினர், அப்பொழுதே அவரால் அவர்களிடத்தில் பேச முடிந்தது. இந்த ஜனங்களிடத்திலிருந்து என்ன ஒரு வித்தியாசத்தை அவர் உண்டுபண்ணினார். அவர்கள் கரையின் மேல் நின்றுகொண்டிருந்தபோது அவரை அறிந்துகொள்ளவில்லை; அவர்கள் அவரோடு நீண்ட நேரம் இருந்தனர். ஆனால் கிறிஸ்து ஒருமுறை உள்ளே வந்தபோது… 153 கிறிஸ்து வெளிப்புறத்தில் இருக்க, அதை வாசித்து, “சரி, அது உண்மை” என்று கூறுவதினால் அல்ல. ஆனால் கிறிஸ்து உட்புறத்தில் இருந்து, “அது உண்மை” என்று கூறுவதாகும். நீங்கள் அந்த வித்தியாசத்தைப் புரிந்துகொண்டீர்களா? கிறிஸ்து உட்புறத்திலே! அப்பொழுது அவர் கூறினார்… 154 ஒருமுறை உள்ளேயிருந்தபோது, வாசல் அடைக்கப்பட்டது. அப்பொழுது அவர் தம்மை அவர்களுக்கு அவர் செய்திருந்த ஏதோ ஒரு காரியத்தின் மூலம் வெளிப்படுத்தினார். அவர் அப்பத்தை எடுத்து, அதைப் பிட்டார். 155 அப்பொழுது அவர்கள் நோக்கிப் பார்த்து, “அதை செய்யக்கூடிய மனிதர் பூமியின் மேல் ஒருவர்தான், அது அவராகும்” என்று கூறினர். அவர் ஏற்கனவே செய்திருந்த அந்த விதமான ஏதோ ஒரு காரியமாயிற்றே! அவர் தம்முடையப் பிரசங்கத்தை நிகழ்த்தினவிதமாக அல்ல; ஏனென்றால் அவர்களுக்குப் பிரசங்கத்தை நிகழ்த்த ஏராளமான வேதபண்டிதர்களை அவர்கள் உடையவர்களாயிருந்தனர். அவர் உடுத்தியிருந்தவிதமாயுமல்ல; நவநாகரீகத் திரைப்படத்துறையான ஹாலிவுட் பாணியில் அல்ல, அது இன்றைக்கு அவ்வாறு இருக்கலாம். ஆனால் அதுவல்ல. அவர் ஏற்கனவே செய்திருந்தவிதமாகவே, அவர் தம்முடைய முறையில் அதைச் செய்திருந்தார் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். அப்பொழுது அவர்களுடையக் கண்கள் திறக்கப்பட்டது. அப்பொழுதே அவர்கள் அவரை அறிந்துகொண்டனர். 156 அவர்கள் அவரை சில நாட்கள்…அறிந்திருக்கவில்லை அல்லது சீஷர்கள் அந்த வழிப்பாதையில் அவரை அறிந்திருக்கவில்லை. அவர்கள் அவரோடு உள்ளே கதவு மூடப்பட்டவர்களாய் ஒருபோதும் இருக்கவில்லை. அவர்கள் அவரைக் கண்டபோதும் அவரை அறிந்திருக்கவில்லை. ஆனால் அவர்கள் ஒருமுறை கதவு மூடப்பட்ட நிலையில் உள்ளே இருந்தபோது, அப்பொழுது அது அவர்களுடைய ஆண்டவர் என்பதை அவர்கள் அறிந்து கொண்டனர். 157 நீங்கள் ஒரு காரியத்தை கவனிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். முடிப்பதற்கு முன்பாக இப்பொழுது கவனமாகக் கூர்ந்து கவனியுங்கள். அதிகாலையிலே மகதலேனா மரியாளும், மார்த்தாளும் முதலில் கல்லறையினிடத்தில் இருந்தனர். கவனியுங்கள். முதலாவது அதிகாலையிலே, கிறிஸ்து அதிகாலையில் எழுந்திருந்தவர்களுக்கு மத்தியில் தம்மை காணும்படியாகக் காண்பித்தார். அதன்பின்னர் அவர் சாயங்கால நேரம் வரைக்கும், அந்த நாள் முழுவதுமே தம்மை ஒருபோதும் காண்பிக்கவில்லை. அதன்பின்னர் அவர் தம்மை மீண்டும் வெளிப்படுத்தினார். ஏனென்றால் அவர் அல்பாவும் ஒமேகாவுமாயிருக்கிறார். சாயங்காலத்திலே வெளிச்சம் உண்டாகும், மகிமையின் பாதையை நீ நிச்சயம் கண்டடைவாய். 158 கிறிஸ்து உயிர்த்தெழுதலின்போது, ஆரம்ப நாட்களில் அப்போஸ்தலர்களோடு தம்மை வெளிப்படுத்தினபோது, பேதுரு, யாக்கோபு, யோவான் முதலியவர்கள் அடையாளங்களையும், அற்புதங்களையும் செய்தனர். அவர் தம்மை ஜனங்களுக்கு (எப்படி?) வெளிப்படுத்தினார். உயிர்த்தெழுதலின் வல்லமையிலேயே. (கவனியுங்கள்) அவர் செய்த அடையாளங்கள், அதிசயங்கள் மற்றும் அற்புதங்களின் மூலமாகவே வெளிப்படுத்தினார். அது சரிதானே? [சபையோர், “ஆமென்” என்கிறார்கள்.—ஆசி.] அவர் தம்மை வெளிப்படுத்தினார். 159 இப்பொழுது நாம் ஒரு மகத்தான நாளினூடாக வந்திருக்கிறோம். அந்த நாளானது மகத்தான போதகர்களினூடாகவும், பரிசுத்த அகஸ்டின் அவர்களினூடாகக் கடந்துவந்து, மார்டின் லூர்தர், ஜான் வெஸ்லி, கால்வின், நாக்ஃஸ், அவர்கள் எல்லோரினூடாகவும் கடந்து வந்து, மெத்தோடிஸ்டுகளின் காலத்தினூடாகவும், பாப்டிஸ்டுகளின் காலத்தினூடாகவும், நசரேயர்களின் காலத்தினூடாகவும், யாத்திரீக பரிசுத்தரின் காலத்தினூடாகவும், பெந்தேகொஸ்தே காலத்தினூடாகவும் கழிந்து போய்விட்டது. எல்லாக் காலங்களும் கடந்துபோய்விட்டன. சூரியனோ அஸ்தமித்துக் கொண்டிருக்கிறது. 160 அவர், “சாயங்காலத்திலே வெளிச்சம் உண்டாகும்” என்றார். தீர்க்கதரிசியோ, “ஒரு நாள் உண்டு; அது பகலுமல்ல இரவுமல்ல. அது ஒருவிதமான மந்தாரமுமாயிருக்கும்” என்றார். 161 இன்றைக்கு கர்த்தராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலான முதலாம் காலை முதற்கொண்டே, அந்த முன்பிருந்த முதலாம் சபைக்காலமான எபேசு சபைக்காலம் முதற்கொண்டே உலகமானது அந்தவிதமாகவே பயணித்துள்ளது. அந்த முதலாம் சபைக் காலத்தில் தேவன் தம்மை அடையாளங்களினூடாகவும், அதிசயங்களினூடாகவும் அற்புதங்களினூடாகவும் வெளிப்படுத்தினார். அது ஆதிகாலப் பிதாக்களிடத்திலே மங்கிப்போய்விட்டது. பின்னர் கத்தோலிக்க சபையினூடாக வந்து, சீர்த்திருத்தத்தினூடாக இங்கே வந்தது. அவர் தேவனுடையக் குமாரனாயிருந்தார் என்று விசுவாசிக்கும்படிக்கு போதுமான வெளிச்சத்தை அவர்கள் உடையவர்களாயிருந்தனர். அவரை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளும்படிக்கு போதுமான வெளிச்சத்தை அவர்கள் பெற்றிருந்தனர். பின்னர் அது போய்விட்டது. ஆனால் மேகங்கள், அந்தகார மேகங்கள், ஜனங்களை கட்டிவைத்துள்ள போதகர்கள், “அற்புதங்களின் நாட்கள் கடந்துவிட்டன. இந்த எல்லாக் காரியங்களும் அநேக ஆண்டுகளுக்கு முன்னரே போய்விட்டன” என்று கூறிவருகின்றனர். அது ஓர் அந்தகாரமான நாளாய் இருந்து வருகிறது. முழுவதும் அந்தகாரமாயல்ல; அவர்களால் எப்படி முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்பதைக் காண முடிந்தது, ஆனாலும் மிக நன்றாகக் காண முடியவில்லை. 162 ஆனால் சகோதரனே, சூரியன் மேற்கத்திய உலகத்தின் பாகத்தில் அஸ்தமித்துக்கொண்டிருக்கும்போது, உலகம் இருப்பது எவ்வளவு நிச்சயமோ அவ்வளவு நிச்சயமாக மீண்டும் வெளிச்சம் உண்டாகும் என்று தேவன் வாக்குத்தத்தம் செய்துள்ளார். 163 இந்த வேதாகமம் ஒரு கீழை நாகரீகத்தொடர்புக்குரியப் புத்தகம். அது கீழை நாடுகளின் நாகரீக பாணியின்…மொழியில், கிழக்கத்திய பாணியைக் கொண்ட நடைமுறையில் எழுதப்பட்டுள்ளது. கிழக்கத்திய ஜனங்கள் தங்களுடைய நாளின் முதலாம் உயிர்த்தெழுதலின் விஜயத்தை உடையவர்களாயிருந்தனர். காலத்தினூடாக சூரியன் பயணித்துள்ளது. நாகரீகம் கிழக்கிலிருந்து துவங்கி மேற்கிற்கு செல்கிறது. இங்கே மேற்கத்திய எல்லையில் சூரியன் அஸ்தமிப்பதற்கு முன்னர், மீண்டு வெளிச்சம் உண்டாகும். அதே உயிர்த்தெழுந்த கர்த்தராகிய இயேசு தம்முடைய மாறாத வல்லமையில் தோன்றுவார். [சகோதரன் பிரான்ஹாம் பிரசங்க பீடத்தை ஐந்து முறைகள் தட்டுகிறார்.—ஆசி.] ஆரம்பத்திலே அவர் மகதலேனா மரியாளுக்கும் மற்றவர்களுக்கு தம்மை வெளிப்படுத்தினது போல, இந்தக் கடைசி காலத்திலும் அவர் தம்மைத் தம்முடைய உயிர்த்தெழுதலின் வல்லமையில் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். எங்கே? கடைசி காலத்தில். 164 அவர்கள், “உள்ளே வாரும். நேரமாகிக்கொண்டிருக்கிறது. பொழுதும் போய்விட்டது. சாயங்கால நேரமாகிக்கொண்டிருந்தது. நீர் உள்ளே வரமாட்டீரா?” என்றனர். அப்பொழுது அவர்கள் அவரை உள்ளே அழைத்து வந்தனர். 165 ஒருமுறை உட்புறத்தில் வந்தபோது, அவர் அவர்களுடைய கண்களைத் திறந்தார். அவர் ஒருகாரியத்தை நிகழ்த்தினார். அப்பொழுது அவர்கள், “அவரால் மாத்திரமே இதைச் செய்ய முடியும்” என்றனர். அவர்கள் எப்படி இருந்தனர் என்பதைப் பாருங்கள். அவர்கள் ஒருநாள் முழுவதும் நடந்து வந்துகொண்டிருக்க நேர்ந்தது. 166 அங்கேதான் மிஷினெரிமார்கள் தவறியிருக்கின்றனர். நாங்கள் கைப்பிரதிகளை விநியோகிக்கும்படியாக அங்கு சென்றுள்ள அந்த மிஷினெரிக்கு உதவி செய்ய சலவைத் தேய்ப்புக் கட்டையைக் கழுவியுள்ளோம். நாங்கள் அங்கே வேதசாஸ்திரத்தைக் கற்பிக்கும்படி அனுப்பியிருக்கிறோம். புத்தமதத்தினர், முகமதியர், சீக்கியர்…உள்ளனர். உலகிலுள்ள பல்வேறுபட்ட எல்லா சமயத்தினருமே தங்களுடைய வேதசாஸ்திரத்தைக் கொண்டு கிறிஸ்தவ மார்க்கம் தோற்றுவிக்கக்கூடிய அதேக் காரியத்தை மனோரீதியான வழியில் தோற்றுவிக்க முடியும். அது உண்மை. 167 உலகத்தில் உள்ளவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் மட்டுமே இந்த ஈஸ்டர் காலையில் இயேசுவைக் குறித்து அறிந்துள்ளார்கள் அல்லது கேட்டிருக்கிறார்கள். மூன்றில் இரண்டு பகுதியினர் கம்யூனிஸத்திலும், அந்தகாரத்திலும் இருக்கின்றனர். மூன்றில் இரண்டு பகுதியினர் இயேசுவைக் குறித்தோ அல்லது உயிர்த்தெழுதலைக் குறித்தோ ஒருபோதும் கேள்விப்பட்டதேயில்லை. 168 [சகோதரன் பிரான்ஹாம் தன்னுடையக் கரங்களை ஒன்று சேர்த்து இருமுறை தட்டுகிறார்—ஆசி.] ஆனால் சகோதரனே, எம்மாவூர் அனுபவம் கிலெயோப்பாவிற்கு உண்டானபோது, அவர்களுடையக் கண்கள் திறக்கப்பட்டபோது, அவர்கள் யாராய் இருந்தனர் என்பதை அடையாளங் கண்டு கொண்டனரே! அப்பொழுது ஒரு சில நிமிடங்களில் அவர்கள் நடைபாதைகளின் வழியே மிகவும் துரிதமாகப் பயணித்து எருசலேமிற்குத் திரும்பிச் சென்று களிப்பான இருதயத்தோடு ஜனங்களுக்கு அதைக் கூறினர். “நம்முடையக் கர்த்தர் மரித்தோரிலிருந்து எழுந்துவிட்டார் என்பதை நாங்கள் அறிவோம், ஏனென்றால் நாங்கள் அவரை கண்டுவிட்டோம். அவர் மெய்யாகவே உயிரோடு இருக்கிறார் என்பதை நாங்கள் அறிந்துள்ளோம்.” 169 அதுதான் இந்தக் கடைசி நாட்களிலும் உள்ளது. இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று நிரூபிக்கும்படியாக தேவன் சுவிசேஷ வல்லமையோடும், விடுதலையோடும், வல்லமையோடு கூடிய செய்திகளோடும் மனுஷர்களை எழுப்பப்போகிறார். [ஒலிநாடாவில் காலி இடம்—ஆசி.] 170 இது எளிதில் உணர்ச்சிவசப்படுகிறதாய் தென்படுகிறது என்பதை நான் அறிவேன். வியப்பொன்றுமில்லையே! நாம் உணர்ச்சி வசப்படுகின்ற நேரத்தில்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஆம், அதுதான் இது. நாம் கடைசி நாட்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். தேவன் ஒவ்வொரு பரிசுத்தத் தீர்க்கதரிசியினூடாகவும், பழைய ஏற்பாட்டினூடாகவும், புதிய ஏற்பாட்டினூடாகவும், ஆரம்ப காலத்தில் சம்பவித்த அதேக் காரியங்கள் கடைசி காலத்தில் சம்பவிக்கும் என்றும், அப்பொழுது அந்தகாரம் அகன்று ஓட, சுவிசேஷ ஒளியானது பூமியின் பாதைகளினூடாக, இன்னும் ஒருவிசை கர்த்தராகிய இயேசுவின் வருகைக்கு முன்னதாக பிரகாசிக்கு என்றும் வாக்களித்துள்ளார். 171 அவர் மரித்தோரிலிருந்து எழுந்துவிட்டார். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார், இனிமேலும் இருப்பார். இயேசு கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழும்பி, நமக்கு மத்தியிலே ஜீவித்துக் கொண்டிருக்கிறார். நான் அதற்காக மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறேன். என்னுடைய இருதயம் எழுச்சியடைந்துள்ளதை விவரிக்க வார்த்தைகளேக் கிடையாது. நாம் அதைக் குறித்து யூகிக்க வேண்டியதில்லை. அது சத்தியமாய் உள்ளது. 172 நண்பனே, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. நீங்கள் அதை அறியாமலிருந்தால்…இந்தச் செய்தியை யார் கொண்டு வருகிறார்கள் என்பதற்கு எந்தக் கவனத்தையும் செலுத்தாதீர்கள், ஆனால் செய்தி என்ன பொருட்படுத்துகிறது என்பதற்கே கவனம் செலுத்துங்கள். புரிகிறதா? அது நீங்கள் கிறிஸ்துவிற்கு புறம்பேயிருப்பதாய் உள்ளது. நீங்கள் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையில் அவரை அறிந்திருக்கவில்லையென்றால், நீங்கள்…அதைக் குறித்த மனரீதியான கருத்துக்களை ஏற்றுக்கொள்ள வேண்டாம். உங்களுடைய வேதசாஸ்திரத்தைக் குறித்தோ அல்லது உங்களுடைய அறிவாற்றலுள்ள விசுவாசத்தைக் குறித்தோ பேச வேண்டாம்; ஏதோ ஒரு காரியம் உங்களுடைய இருதயத்தில் சாட்சிப் பகரவில்லையென்றால், உங்களுடைய இருதயத்தில் உள்ளவை வெளியே கொட்டப்பட்டு உலகத்தின் பண்டையக் காரியங்களுக்கு மரிக்கும்படியான ஒரு காலியானக் கல்லறையாக மாற்றப்பட்டிருந்தால், (அல்லேலூயா), அப்பொழுது கிறிஸ்து உங்களுடைய இருதயத்தில் புதியதாக எழும்பியிருக்கிறார். 173 ஓ தேவனே, இந்தக் காலையில் சந்தேகத்தின் கல்லை புரட்டிப்போடும். அதை தூரமாய் எடுத்துப் போடும். 174 அவர் இன்றைக்கே உங்களுடைய இருதயத்தில் எழும்பி, உங்களை ஒரு புது சிருஷ்டியாக்குவாராக. இன்னும் ஒருசில நிமிடங்களில் அவர் காட்சியில் தோன்றி, அவர் இங்கே பூமியின் மேலிருந்தபோது செய்த அதேக் காரியங்களைச் செய்வார் என்று நான் விசுவாசிக்கிறேன். நாம் நம்முடையத் தலைகளை வணங்கியிருக்கையில், நாம் ஜெபம் செய்வோம். 175 எங்கள் பரலோகப் பிதாவே, காலம் தாமதமாகிக் கொண்டேயிருக்கிறது. பொழுதும் போயிற்று, ஆயினும் நீர் பிரசன்னமானது, அது பயனாய்க் கழிந்த நேரமாய் இருந்தது. உம்முடையத் தெய்வீக வார்த்தைகளுக்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். நாங்கள் பிரசங்கிக்கிற, விசுவாசிக்கிற இந்த சுவிசேஷத்திற்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். சத்தியம் என்று நீர் ரூபகாரப்படுத்தியிருக்கிற இந்த சுவிசேஷத்திற்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். 176 இப்பொழுதும் கர்த்தராகிய இயேசுவே, இழந்துபோன ஆத்துமக்களிடத்தில் பேசும். உம்மை நேசிக்கிற அநேக ஜனங்கள் இங்கே இருக்கிறார்கள். கர்த்தாவே, ஆனாலும் அவர்கள் உம்மை உண்மையாக ஒருபோதும் ஏற்றுக்கொண்டிருக்கவில்லை. நீரோ அவர்களோடு அனுதினமும் நடக்கிறீர். அவர்களை விபத்தின் நேரத்தில் கொல்லப்படாமல் காத்தது நீரே. அன்றிரவு அந்த நாளில் புயற்காற்று வீசி வீட்டை சேதப்படுத்தாமல் தடுத்துக் காத்தது நீரே. ஆபத்துக் காலத்தில் அவர்களண்டை வந்தது நீரே. அவர்கள் எந்த வேலையுமில்லாமலிருந்தபோது, அவர்களுக்கு வேலையை அளித்தது நீரே. அவர்களுடைய அன்பார்ந்தவர்கள் கல்லறைக்குச் சென்றபோது, அவர்களுடைய இருதயங்களைத் தேற்றினது நீரே. நீர் அவர்களோடு நடந்திருக்கிறீர். ஆயினும் அதே சமயத்தில் அவர்களுக்கு உம்மைத் தெரியவில்லை. 177 தேவனே, கிறிஸ்துவுக்குப் புறம்பாக இங்கே இருக்கிற ஒவ்வொரு நபரும் இன்றைக்கு கிலெயோப்பாவும் அவருடைய நண்பரும், “வந்து எங்களோடு தங்கியிரும். என்னுடைய ஜீவியத்தின் நாளோ கழிந்துபோயிற்று. இப்பொழுது உள்ளே வந்து, உம்முடைய வழியை ஏற்படுத்தும்” என்று கூறினது போலக் கூற அருள்புரியும். 178 நாம் நம்முடைய தலைகளை வணங்கியிருக்கையில், உட்புறத்திலிருந்தோ அல்லது வெளிப்புறத்திலிருந்தோ, எங்கிருந்தாவது ஒரு நபர் இங்கே தேவனன்டை உயர்த்தப்பட்ட கரத்தின் மூலம், உங்களுடைய சகோதரனிடத்தில் அல்ல, ஆனால் தேவனண்டை உயர்த்தி, “ஓ, இந்தக் காலையில் என்னுடைய இருதயத்தில் ஏதோ ஒரு காரியம் சம்பவித்துள்ளது. என்னுடைய இருதயத்தில் ஏதோக் காரியம் சம்பிவித்துக்கொண்டிருக்கிறது என்பதை நான்—நான் அறிவேன். நான்—நான் இனி ஒருபோதும் இருந்தவிதமாக இருக்கமாட்டேன். இந்தக் காலையில் நான் இந்தக் கட்டிடத்திற்குள் வந்தது முதற்கொண்டே ஏதோ ஒரு காரியம் சம்பவித்துள்ளது ௭ன்பதை நான் விசுவாசிக்கிறேன். நான் இப்பொழுதே என்னுடைய இருதயத்தில் கிறிஸ்துவை என்னுடைய இரட்சகராக ஏற்றுக் கொள்கிறேன். எனவே நான் என்னுடையக் கரங்களைத் தேவனண்டை உயர்த்தி, ‘தேவனே, இதோ நான் இருக்கிறேன். என்னால் செய்ய முடிந்ததெல்லாம் என்னுடையக் கரத்தை உயர்த்தி, நான் உம்மை விசுவாசிக்கிறேன் என்று உம்மிடத்தில் கூறமுடிந்ததுதான்” என்று கூறுங்கள். 179 நீங்கள் உங்களுடையக் கரத்தை உயர்த்துவீர்களா? ஐயா, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அது உண்மை. வேறு எவரேனும் உங்களுடையக் கரத்தை உயர்த்தி, “நான் இப்பொழுதே அவரை ஏற்றுக் கொள்கிறேன்” என்று கூறுவீர்களா? பெண்மணியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அது அருமையாயுள்ளது. வேறு எவரேனும் இருக்கிறீர்களா? 180 நீங்கள் உங்களுடையக் கரத்தை உயர்த்துகையில், தேவன் உங்களுக்கு நித்திய ஜீவனை அளிப்பதாக வாக்குப்பண்ணினார். “என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்.” 181 இப்பொழுதே நீங்கள் உங்களுடையக் கரத்தை உயர்த்தி, “கர்த்தாவே, நான் விசுவாசிக்கிறேன்” என்று கூறுவீர்களா? நீங்கள் விரும்பினால், அப்படியே கர்த்தராகிய இயேசுவும் நானும் என்று கூறி வேறு எவரையும் நோக்கிப்பார்க்காதீர்கள். உங்களுடையக் கரத்தை அப்படியே உயர்த்தி, “நான் இப்பொழுதே அவரை என்னுடைய இரட்சகராக ஏற்றுக்கொள்கிறேன்” என்று கூறுங்கள். நீங்கள் உயர்த்துவீர்களா…தேவன் உங்களை, உங்களை, உங்களை ஆசீர்வதிப்பாராக. ஓ, அது அருமையாயுள்ளது, அநேகக் கரங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அது அருமையாயுள்ளது. 182 அது உங்களுக்கு என்னச் செய்கிறது? உங்களுக்கு ஜீவனை அளிக்கிறது. நீங்கள் உங்களுடையக் கரத்தை எஜமானிடத்தில் உயர்த்தி, “நான் அதை விசுவாசிக்கிறேன்” என்று கூறினீர்கள். 183 இயேசு, “விசுவாசிக்கிறவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்” என்றார். நீங்கள் இப்பொழுதே நித்திய ஜீவனைப் பெற்றிருக்கிறீர்கள். நீங்கள் அதைக் குறித்து சந்தோஷமாயிருக்கவில்லையா? 184 நாங்கள் ஜெபிப்பதற்கு முன்பாக வேறு எவரேனும், இன்னும் வேறு எவரேனும் ஒருவர், “சகோதரன் பிரான்ஹாம், இந்த ஈஸ்டர் காலையில் காணக்கூடியக் கிறிஸ்துவின் அடையாளங்கள் பிரசன்னமாவதைக் காண்பதற்கு முன்னமே, அதாவது அவர் அவ்வண்ணமாகச் செய்வாரானால், நான் எந்த ஒரு காரியத்தையும் காணும் முன்னே, நான் இப்பொழுதே, நான் அவரை இப்பொழுதே ஏற்றுக்கொள்கிறேன். நான் அவரைக் காணும் வரையில், அவரை உணரும் வரையில் காத்திருப்பேன் என்று கூறின தோமாவைப் போல நான் காத்திருக்கப்போவதில்லை. ஆகையால் நான் இப்பொழுதே அவரை ஏற்றுக் கொள்ளப்போகிறேன்” என்று கூறுங்கள். 185 அவரோ, “எந்தக் காரியத்தையுமே, உணராமலுமிருந்து அவரை விசுவாசித்திருக்கிறவர்களுக்கு அவர்களுடையப் பலன் எவ்வளவு மகத்தானதாயிருக்கிறது” என்று கூறினாரே! 186 உட்புறத்திலோ அல்லது வெளியிலிருந்தோ இன்னும் வேறு யாரேனுமிருந்தால், நீங்கள் உங்களுடையக் கரத்தை உயர்த்துவீர்களா? தேவன் உங்களை, உங்களை, உங்களை ஆசீர்வதிப்பாராக. ௨ங்களை சகோதரியே, தேவன் ௨ங்களை ஆசீர்வதிப்பாராக. உங்களை சகோதரியே, தேவன் உங்களையும் ஆசீர்வதிப்பாராக. சரி, நம்முடைய தலைகள் வணங்கியவாறு இருக்கட்டும். 187 எங்கள் பரலோகப் பிதாவே, நீர், “சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு; எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம்பண்ணி, கடிந்துகொண்டு புத்திசொல்லு” என்று கூறியிருக்கிறீர். எங்களிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறே சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கவில்லை. கிறிஸ்துவானவர் மரித்து, வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து, இப்பொழுது எங்களுடைய அறிக்கையின் பேரில் வேண்டுதல் செய்யும்படி உன்னதங்களிலே மகத்துவமான தேவனுடையப் பிரசன்னத்தில் உட்கார்ந்திருக்கிறார். அதாவது, “என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு” என்ற இதுவே அவருடைய வார்த்தையாய் உள்ளது. 188 இன்றைக்கு இந்தப் பரபரப்பூட்டும் பரவலான செய்தியில் அநேகர் தங்களுடையக் கரங்களை உயர்த்தியிருக்கின்றனர். நீர் அவைகளைக் கண்டீர். வீதியில் விழுகிற ஒவ்வொரு அடைக்கலான் குருவியையும் நீர் அறிந்திருக்கும்போது, நீர் எப்படி இந்தக் கரங்களைக் காணத்தவறியிருக்க முடியும்? நீர் அதை அறிவீர். மகத்தான சர்வவல்லமையுள்ள தேவனே, நீர் ஒவ்வொரு காரியத்தையும் காண்கிறீர். நீர் ஒவ்வொரு காரியத்தையும் அறிந்திருக்கிறீர், உம்மால் எல்லாக் காரியத்தையும் செய்ய முடியும். இப்பொழுது உம்முடைய வார்த்தையின்படி, நீர் இவர்களைப் பாவத்திலிருந்து இரட்சித்திருக்கிறீர். பிதாவே, நாங்கள் அதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். அவர்களுடைய வாழ்நாள் நீடித்ததாயும், மகிழ்ச்சியாயுமிருப்பதாக. அவர்கள் தங்களுடைய வாழ்நாளெல்லாம் உம்மையே சேவிப்பார்களாக. 189 அவர்கள் ஒருபோதும் தண்ணீரில் முழுக்கு ஞானஸ்நானம் பெறாமலிருந்தால், இன்றிரவே வரட்டும், அவர்கள் வந்து ஞானஸ்நானம்பண்ணப்பட்டு, கர்த்தருடைய நாமத்தை தொழுதுகொண்டு, இன்றிரவே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுவார்களாக. அன்புள்ள தேவனே இதை அருளும். நாங்கள் இதை கிறிஸ்துவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம். 190 இப்பொழுதும் பிதாவே, நாங்கள் ஆராதனையில் பங்கெடுத்துக்கொண்டிருக்கிறோம். உம்முடைய வார்த்தை தவறிப்போக முடியாது என்பதை நான் அறிவேன். அது எங்களுடைய சொந்த ஊரில், அதாவது, “ஊழியக்காரன், தன்னுடைய சொந்த ஊர் ஜனங்களுக்கு மத்தியிலே” என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இருமுறை, கர்த்தாவே, இந்தப் பத்து ஆண்டுகளில் அது சம்பவிக்க நீர் அனுமதித்திருக்கிறீர். இன்றைக்கு மீண்டும் அதை நீர் அருளமாட்டீரா? இது ஈஸ்டராயுள்ளது. எங்களுடைய சிந்தைகளோ ஈஸ்டர் நினைவுகளின் மேலும், உயிர்த்தெழுதலின் மேலும் புதுமைக் குன்றாமலிருக்கின்றன. அது வாடாமல், புத்தம்புதிதாகவே சுவிசேஷத்தின் மேல் உள்ளது, இந்தக் காலையில் இங்கே அது இருமுறை பிரசங்கிக்கப்பட கேட்டுள்ளோம். கர்த்தாவே, நாங்கள் உம்மைக் காண விரும்புகிறோம். நீர் இங்கே இருக்கிறீர் என்று நான் ஜனங்களுக்கு கூறியிருக்கிறேன். நீர் இருப்பேன் என்று நீர் கூறினீர். நீர் எப்பொழுதுமே சர்வவியாபியாயிருக்கிறீர். நீர் இப்பொழுதே வந்து கருவிகளாக எங்களைப் பயன்படுத்த எடுத்துக்கொள்ளமாட்டீரா? கர்த்தாவே, அவைகள் அற்பமானவைகளாய் இருக்கின்ற காரணத்தால், உம்முடைய அற்பமான ஊழியக்காரனை எடுத்தாளமாட்டீரா? எங்கள் மூலமாக இன்றைக்கு கிரியை செய்யும். அதாவது இங்கு அமர்ந்துள்ள புருஷரும் ஸ்திரீகளும், உம்மை ஏற்றுக்கொண்டுள்ள அவர்கள் என்ன செய்துள்ளார்கள் என்பதைப் பாரும். அது போலியான ஏதோ ஒரு காரியமல்ல; அது கர்த்தராகிய இயேசுவாயுள்ளது. ஓ தேவனே, இதை அருளும். நாங்கள் இயேசுவின் நாமத்தில் இதை வேண்டிக்கொள்கிறோம். ஆமென். 191 ஓ, என்னே! நீங்கள் நலமாக உணருகிறீர்களா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] நான் களைப்புற்று, விடாய்த்துப்போயிருந்தாலும் கூட நானும் அந்தவிதமாக நலமாக இருப்பதை உணருகிறேன். இது எப்படிப்பட்ட மகிமையுள்ள வார்த்தையாய் உள்ளது. இப்பொழுது நண்பர்களே, என்னால் முடிந்தளவு முழுமையாய்ப் பிரசங்கித்திருக்கிறேன்… 192 நான் ஒருவிதமாக…இன்றைக்கே இரண்டு முறை பிரசங்கித்திருக்கிறேன். நாளை நான் காரோட்டிச் செல்ல துரிதமாய்ப் புறப்பட வேண்டும். நான் வாஷிங்டன்னில் உள்ள டாகோமாவிற்கும் மற்றும் கனடாவிற்குச் செல்ல அதிகாலையிலேயே புறப்பட வேண்டும். நாளை ஆராதனைகளுக்கு அவர்கள் நான் ஆகாய விமானத்தின் மூலம் வரவேண்டும் என்று விரும்பினார்கள், ஆனால் நான் காரோட்டிச் செல்லலாமென்றிருக்கிறேன். 193 ஆகையால் இப்பொழுது கவனியுங்கள், முழு பிரசங்கத்தையும் என்னால் செய்ய முடிந்தாலும், கிறிஸ்து செய்யக் கூடிய ஒரு காரியமானது, அதாவது நீங்கள் அதைக் காணும்படி உயிர்வாழ்ந்தால், நான் ஆயிரமாண்டுகளாக உங்களிடத்தில் கூறமுடிந்த எல்லா காரியங்களைக் காட்டிலும் அவர் செய்கிற ஒரு காரியமே பெருமதிப்புடையதாயிருக்கும். 194 இப்பொழுது நான் உங்களிடத்தில் ஒரு காரியத்தைக் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். நீங்கள் அப்படியே பயபக்தியோடு இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இப்பொழுது உங்களில் அநேகர் நின்றுகொண்டிருக்கிறீர்கள். நீங்கள் களைப்புற்றிருப்பதை நான் அறிவேன். ஆயினும் இன்னும் ஒரு சில நிமிடங்கள் மட்டும் காத்திருங்கள். இப்பொழுது நான் இதை…எடுத்துக் கொண்டிருக்கிறேன்… 195 புரிந்துகொள்ளுங்கள், அதாவது அது சம்பவிக்கலாம் என்று நான் கூறவில்லை. நான் விசுவாசத்தினாலே, தேவன் செய்தவண்ணமாகவே செய்யும்படிக்கு கேட்டுக்கொண்டுள்ளேன். இயேசு மரித்தோரிலிருந்து எழுந்துவிட்டார் என்பதை ஜெபர்ஸன்வில்லில் உள்ள ஜனங்கள் அறிந்துகொள்ளும்படியாக அவர் ஊழியக் களத்தில் இருந்தபோது செய்ததுபோலவே, இங்கே ஒரு கூட்டத்தை ஏற்படுத்தித் தரும்படிக்கு நான் அவரிடத்தில் இப்பொழுதே வேண்டிக்கொண்டிருக்கிறேன். இப்பொழுது நாம் அதை இருமுறை பெற்றுள்ளோம். 196 இந்நாளுக்குப் பிறகு மீண்டும் இக்கூடாரத்திற்கு எப்பொழுது திரும்பி வருவேன் என்று எனக்குத் தெரியாது. நான் இந்த சிறிய பண்டைய சபையை நேசிக்கிறேன். இதில் மிக அதிகமான அந்நியர்கள் இங்கே உள்ளே இருக்கவில்லை. அதே சமயத்தில் இங்கே இந்தப் பிரசங்க பீடத்தின்மேல் பன்னிரண்டு ஆண்டுகளாக இங்கே பிரசங்கித்து வருகிற காரணத்தால் என்னுடையக் கைரேகைகள் பதிந்துள்ளன. இப்பொழுது நான் சுவிசேஷ ஊழியத்தில் இருபத்தி மூன்று ஆண்டுகளாக இருந்து வருகிறேன். 197 ஓ, நான் திரும்பிப் பார்க்கும்படியாக அதிக அளவிற்கு ஊழியம் செய்து வந்திருக்கிறேன். நான் மிக அதிகமாகவே காரியங்களைப் பார்த்திருக்கிறேன்! ஜனங்கள் என்னக் கூறுகிறார்கள் என்று நான் கவலைப்படுகிறதில்லை. எனக்கு—எனக்கேத் தெரியும். நான் அறிவேன். ஆம் ஐயா. முழு உலகமே வித்தியாசமாகக் கூறினாலும் கவலைப்பட வேண்டியதில்லை. “நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னார் என்று அறிவேன், நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை அவர் அந்நாள் வரைக்கும் காத்துக்கொள்ள வல்லவராயிருக்கிறாரென்று நிச்சயித்துமிருக்கிறேன்.” 198 நண்பர்களில் அநேகர் இங்கே உள்ளே உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள், அவர்களில் சிலர் வெளியே இருக்கிறார்கள். என்னுடைய மருத்துவ நண்பர்கள் இருவர் கூட இப்பொழுது இங்கேயிருக்கிறார்கள். 199 நான் ஒரு மதவெறியன் அல்ல, நான் வெறுமென…அது ஏற்புடையதானால்…இயேசுவின் உயிர்த்தெழுதலை விசுவாசிப்பது மதவெறித்தனம் என்று நீங்கள் அழைப்பீர்களேயானால், அப்பொழுது நான் ஒரு மதவெறியனே. அது உண்மை. நான் அதை என் முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறேன். 200 இப்பொழுது இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்துவிட்டார் என்பதே இங்கே என்னுடைய வாதமாயிருக்கிறது. நான் அதை விசுவாசிக்கிறேன், அவர் மரித்தோரிலிருந்து எழுந்துவிட்டிருப்பாரேயானால்…அவர், “நான் செய்கிற கிரியைகளை நீங்களும் கூட செய்வீர்கள். நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால் இதைப் பார்க்கிலும் அதிகக் கிரியைகளைச் செய்வீர்கள்” என்றார். 201 இந்த உயிர்த்தெழுதலின் காலையில் இங்கே தேவன் மீண்டும் காட்சியில் தோன்றுவாரேயானால், அது அவர் என்று நீங்கள் அறிந்துகொள்ளக் கூடிய ஒரு ரூபத்தில் இருக்கும் என்று நான் நம்புகிறேன். நீங்கள் அவரைக் காண விரும்புகின்றீர்களா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்—ஆசி.] அவர் கிலெயோப்பாவோடும் மற்றவர்களோடும் வந்ததுபோன்று வர நீங்கள் விரும்புகின்றீர்களா? அப்படியானால் தேவன் அதைச் செய்வாரென்றால், அப்பொழுது நான் உங்களுக்கு சுவிசேஷ சத்தியத்தையே கூறியிருக்கிறேன். 202 இப்பொழுது அவர் இந்தக் காலையில் இங்கே தோன்றுவாரேயானால், அவர் என்ன செய்வார்? அவர் கூற முடிந்ததோ…நீங்கள் வந்து, “கர்த்தாவே, நீர் என்னை இரட்சியும்” என்று கூறுவீர்களா? 203 அப்பொழுது அவர் என்ன கூறுவார்? “நான் உங்களுக்காகக் கல்வாரியில் மரித்தபோது, நான் அதை செய்துவிட்டேன்.” ஏனென்றால் அதுதான் அவருடைய சுவிசேஷம். நீங்களோ, “கர்த்தாவே, நீர் என்னைக் குணமாக்குவீரா?” என்று கேட்பீர்களா? அதற்கு அவரோ, “நான் உங்களுக்காக கல்வாரியில் மரித்தபோதே, நான் அதைச் செய்துவிட்டேன்” என்று கூறுவார். 204 இப்பொழுது அவர் செய்யக் கூடிய ஒரே காரியம் என்னவென்றால், உங்களுக்கு மத்தியிலே அடையாளங்களையும், அற்புதங்களையும் காண்பிப்பதேயாகும், அது உங்களை விசுவாசிக்கும்படிச் செய்து, அதனை ஏற்றுக்கொள்ளச் செய்யும். அது உண்மைதானே? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்—ஆசி.] 205 இப்பொழுது இந்தக் காலையில் பையன்கள் சில ஜெப அட்டைகளைக் கொடுத்திருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். ஒரு சில நிமிடங்களுக்காக முன்னால் பில்லி வந்து, “அவர்கள் கையிலிருந்த கொஞ்ச ஜெப அட்டைகளை கொடுத்து தீர்த்துவிட்டார்கள்” என்று என்னிடத்தில் கூறினான். ஆனால் அவர்கள் சுற்றிலும் சென்று கொடுக்கும்படி போதுமான ஜெப அட்டைகளை வைத்திருக்கவில்லை. அவன் இன்னும் சற்று அதிகமான அட்டைகளை கொடுக்க வந்தபோது அவனுக்கு நேரமாகிவிட்டது. எனவே அவன் வெளியே போய், சில ஜெப அட்டைகளை கொடுக்கத் துவங்கும்போதே, சகெதரன் நெவில் அவர்கள் நம்பிடுவாய் என்னும் பாடலைப் பாடத் துவங்கிவிட்டார். 206 இதோ உடனே அவர்கள் அங்கிருந்து ஓடி வந்துவிட்டனர். அப்பொழுது சகோதரன் உட்ஸ் அவர்களும், மற்றவர்களும், “ஏன், பாடல்கள் ஏற்கனவே பாடப்பட்டுவிட்டன” என்று கூறினார்களாம். எனவே நானும் விரைந்து வரவேண்டியதாயிருந்தது. அதிகமான ஜெப அட்டைகளைக் கொடுக்கவில்லையாம், ஒருவேளை ஐம்பது அல்லது நூறு அதைப்போன்றுதான் அநேகமாக கொடுத்திருப்பார்கள். ஆகையால் கூடுமானவரை, நம்மால் முடிந்தளவு எத்தனை அட்டைகளைப் பார்க்க முடியுமோ அத்தனை அட்டைகளை நாம் பார்க்கலாம். 207 இப்பொழுது நீங்கள் உங்களுடைய சிறு ஜெப அட்டைகளை கொண்டுவர வேண்டுமென்று நான் விரும்புகிறேன். அது ஒரு சிறு சதுர வடிவமான அட்டையாகும். அதன் முன்பக்கத்தில் என்னுடையப் புகைப்படம் இருக்கும். அதனுடைய பின்புறத்தில் ஒரு எண் இருக்கும். நாங்கள் இங்கே ஜனங்களை வரிசைப்படுத்தி நிற்கவைத்து, அவர்களுக்காக ஜெபிக்க விரும்புகிறோம். அவர்கள் கூட்டமாக வந்து விடுகிறார்கள். நாங்கள் முடிந்தளவு அவர்களுக்காக ஜெபிப்போம். 208 இப்பொழுது நீங்கள் உங்களுடைய அட்டைகளைப் பெற்றுக்கொள்ளும்போது, ஆயத்தமாயிருங்கள், இப்பொழுது நீங்கள் கவனிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இங்கே அநேகர் ஜெப அட்டையே இல்லாமல் இருக்கிறார்கள். இங்கே ஒருவேளை நூறு பேர் ஜெப அட்டை இல்லாமலிருக்கலாம். ஜெப அட்டை எந்தக் காரியத்தையும், ஒரு காரியத்தையும் பொருட்படுத்துகிறதில்லை. அது பொருட்படுத்துகிற ஒரே காரியம் நீங்கள் தேவனில் விசுவாசமுடையவர்களாய் இருக்க வேண்டும் என்பதேயாகும். 209 இயேசு ஜனங்களுக்காக ஜெபித்தார், அது உண்மை, அநேக முறை அவர்களுடையக் கோளாறு என்னவென்பதை அவர் அவர்களுக்குக் கூறினார். ஆனால் அவர்…ஒருபோதும், “நான் உங்களைக் குணமாக்கியுள்ளேன்” என்று கூறவேயில்லை. அவர், “உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது” என்றார். ஜனங்கள்…அருகில் வர… 210 அந்தக் குருடனான பர்திமேயு வீதியிலே அமர்ந்து பிச்சையெடுத்துக் கொண்டிருந்தான். இயேசுவானவர் ஒருகால் பர்திமேயு உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து, அதாவது இங்கிருந்து ஏறக்குறைய அடுத்த மூலைவரையில் உள்ள தூரத்தில் இருந்ததான வாசலண்டைக்கு நடந்து சென்றிருந்திருக்கலாம். இதோ இயேசு வந்துவிட்டார். அப்பொழுது அங்கே அந்த மதிற்சுவற்றிற்கு எதிராக உட்கார்ந்துகொண்டிருந்த அந்தக் குருட்டுப் பிச்சைக்காரன் கூச்சலிட்டான். 211 ஜனங்களோ கூச்சலிட்டு, “அந்த மதவெறியனை அப்புறப்படுத்துங்கள். பிதற்றுபவரே வாரும், நீர் ஏன் ஏதோ ஒரு அற்புதத்தை செய்து, அதை எங்களுக்கு காண்பிக்கக் கூடாதா” என்று கூறினர். 212 மற்றவர்களோ, “ஓசன்னா! ஓசன்னா! அவர் இராஜா, தாவீதின் குமாரன்” என்று கூறிக் கொண்டிருந்தனர். அவர்கள் எல்லோருமே, பல்வேறுபட்ட நிலையில், கலப்புற்றிருந்தனர். 213 இயேசு கல்வாரியை நோக்கி சென்றுகொண்டிருந்தபோது, தம்முடைய முகத்தை…அவர் அதை நோக்கியவாறு சென்று கொண்டிருந்தார். அவர் நடந்து செல்வதை நான் காண்கிறேன். அவருடைய வாலிப வாழ்க்கை வெறுமனே முப்பது வயதிற்கு சற்று மேம்பட்டதாய் மாத்திரமே இருந்தபோதிலும், அவர் வயோதிகரைப் போன்று காணப்பட்டார். அவர் கிட்டத்தட்ட “ஐம்பது” வயதுடையவர் என்றே அவர்கள் கூறினர். ஆனால் அவரோ முப்பத்தி மூன்று வயதினை மட்டுமே உடையவராயிருந்தார். அவர் மீது வைக்கப்பட்ட உலகத்தின் பாவங்களினால் அவருடைய முகபாவம் அவ்வாறமைந்திருந்தது, எப்போதும் இருந்துவந்த சுகவீனம் அனைத்தும் அவர் மீது தொங்கிக்கொண்டிருந்தன. சிலுவையில் அறையப்படுவதற்காகவே அவர் கல்வாரியை நோக்கி சென்று கொண்டிருந்தார். 214 அங்கிருந்த வயோதிக குருட்டு பிச்சைக்காரனோ கந்தையாய்க் கிழிந்த அரைக்கை சட்டையை அணிந்தவனாய், “தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும்! எனக்கு இரங்கும்!” என்றே கூறிக்கொண்டிருந்தான். அப்பொழுது ஜனங்களோ, “உட்கார்ந்திரு” என்று அதட்டிக் கூறினர். 215 ஆனால் இயேசுவோ நின்று, திரும்பி அங்கே அப்பாலே நோக்கிப்பார்த்து, “உன் விசுவாசம் உன்னை இரட்சித்து” என்றார். “உன் விசுவாசமே!” 216 ஏழ்மையான அந்தப் பெண்மணி, ஏறெடுத்துப்பார்க்க ஒன்றுமில்லாதவளாய் இருந்தாள். அவள் கூட்டத்தாரினூடாக, அவர்களுடையப் பாதங்களுக்கிடையே அங்கே நெருக்கிக்கொண்டே அங்கே நகர்ந்து சென்று, அவருடைய வஸ்திரத்தைத் தொட்டுவிட்டு, பின்னர் அங்கிருந்து திரும்பி கூட்டத்திற்குள் எங்கோ ஓடி அமர்ந்து கொண்டாள். 217 அப்பொழுது இயேசு நின்று, “என்னைத் தொட்டது?” என்று கேட்டார். அவர் சுற்றும் முற்றும் பார்த்தார். பின்னர் அவர் அவளைப் பார்த்து, “உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது” என்றார். மேலும், “உங்கள் இருதயங்களில் நீங்கள் சிந்திக்கிறதென்ன?” என்று கேட்டார். கிணற்றண்டையிலிருந்த ஸ்திரீ. அவர் அதை எண்ணியிருந்ததுபோல…அப்பொழுது அவர்கள் கூறினதோ… 218 பிலிப்பு அவரண்டை வந்தபோது, அவர்…அவருடைய முதலாம் ஊழியம். இயேசுவானவர் வியாதியஸ்தருக்காக ஜெபிக்க ஒரு ஜெப வரிசையில் நின்று கொண்டிருந்தார். 219 இதோ நேற்றைய இயேசு இருக்கிறார். இன்றைக்கும் இது இயேசுவாகவே இருக்கும், ஏனென்றால் அவர் மாறாதவராய் இருக்கிறார். அந்த வெளிச்சம் அங்கே காலையில் இருந்தது. இது இங்கே சாயங்காலத்தில் அதே மாறாத இயேசுவாய், நேற்றும் இன்றும், பாருங்கள், என்றும் மாறாததாய் உள்ளது. 220 இயேசு அங்கே நின்றுகொண்டிருந்தபோது, இரட்சிக்கப்பட்ட ஒரு மனிதன் இருந்தான். அவன் நாத்தான்வேல் என்று அழைக்கப்பட்டத் தன்னுடைய நண்பனிடத்திற்கு ஓடினான். அவன் சென்று நாத்தான்வேலைக் கண்டான். பிலிப்பு சென்று, நாத்தான்வேலைக் கண்டான். நாத்தான்வேல் ஒரு மரத்தின் கீழ் ஜெபித்துக்கொண்டிருந்ததை அவன் கண்டான். 221 அவன் இவனைத் திரும்ப அழைத்த வந்தபோது…இயேசு அங்கே வந்திருந்தார். கூட்டத்தில் நின்றுகொண்டிருந்தான், அங்கே எங்கோ அவன் இருந்தான். இயேசுவோ அங்கே ஜனங்களுக்காக ஜெபித்துக்கொண்டிருந்தார். 222 அப்பொழுது அவர் நோக்கிப் பார்த்து, “இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன்” என்றார். 223 “ஏன்” அவனோ “ரபீ, நீர் என்னை எப்படி அறிவீர்?” என்று கேட்டான், அல்லது “போதகரே, சங்கை” என்ற ஒரு பட்டம். 224 அப்பொழுது அவர், “பிலிப்பு உன்னை அழைக்கிறதற்கு முன்னே, நீ அத்திமரத்தின் கீழிருக்கும்போது உன்னைக் கண்டேன்” என்றார். 225 “ஏன்” பரிசேயரோ, “நீங்கள் பாருங்கள், அவர் ஒரு குறி சொல்பவர். அவர் ஒரு பிசாசு. அவர் பெயெல்செபூல்” என்று கூறினர். 226 ஆனால் பிலிப்பு என்னக் கூறினான்? நாத்தான்வேல் என்னக் கூறினான்? அவன் ஓடிப்போய் பாதத்தில் விழுந்து, “நீர் தேவனுடைய குமாரன். நீர் இஸ்ரவேலின் இராஜா” என்றான். 227 அப்பொழுது அவர், “நான் உனக்கு இதைச் சொன்னக் காரணத்தால் நீ விசுவாசிக்கிறாயா? நீ இதைப்பார்க்கிலும் பெரிதானவைகளைக் காண்பாய், ஏனென்றால் நீ ஒரு விசுவாசி. புரிகிறதா? நீ இதைப் பார்க்கிலும் பெரிதானவைகளைக் காண்பாய்” என்றார். புரிகிறதா? 228 இப்பொழுது அதே இயேசு இன்றைக்கு மாறாதவராய் இருக்கிறார். இப்பொழுது நாம் வியாதியுள்ள ஜனங்களை வரிசைப்படுத்தி மேலே கொண்டுவந்து, அவர்களுக்காக ஜெபிக்கத் துவங்குவோம். 229 இப்பொழுது நீங்கள் ஜெப அட்டைகளே இல்லாமல், அங்கே வெளியே கூட்டத்தில் இருக்கிறீர்கள். நீங்கள் உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அப்பொழுது தேவன் உங்களை சுகப்படுத்துவார், உங்கள் இருக்கைகளிலேயே அமர்ந்திருங்கள். அவர் தம்முடைய ஊழியக்காரர்களைத் திரும்பிப் பார்த்து, அப்பொழுது அவர் கூறின அதேக் காரியத்தை இப்பொழுதும் கூற முடியும். நீங்கள் அதை விசுவாசிக்கவில்லையா? [சபையோர், “ஆமென்” என்று கூறுகின்றார்கள்—ஆசி.] சரி. 230 இப்பொழுது நீங்கள் என்னச் செய்ய வேண்டும் என்பதை நான் கூறுவேன். ஜெப அட்டை எண் ஒன்றை வைத்திருப்பது யார்? நாம் பார்ப்போம். உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். ஜெப அட்டை எண் ஒன்று, எண் ஒன்று, எண் இரண்டு… 231 இங்கு வந்து வரிசையில் நில்லுங்கள். இப்பொழுது, நான் அவர்களுக்காக ஒரு நேரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும், ஏனென்றால் நமக்கு…இல்லையே…அவர்கள் எல்லோரையும் நிற்க வைக்க நமக்கு போதிய இட வசதி இல்லை. 232 எண் இரண்டு, ஜெப அட்டை எண் இரண்டை வைத்திருக்கிறது யார்? நீங்கள் உங்களுடையக் கரத்தை உயர்த்துவீர்களா? ஜெப அட்டை…இந்தப் பெண்மணி இங்கே இருக்கிறாள். எண் மூன்று…பெண்மணியே, இந்தப் பக்கமாக இங்கே வாருங்கள். எண் நான்கு என்ற இந்த ஜெப அட்டையை வைத்திருக்கிறது யார்… 233 ஜெப அட்டை எண் மூன்றை வைத்திருக்கிறது யார்? அந்த ஒன்றை நான் வைத்திருக்கவில்லை என்று நான் நினைக்கிறேன். ஜெப அட்டை எண் மூன்று. ஜெப அட்டை எண் நான்கு. 234 ஜெப அட்டை எண் ஐந்து, ஜெப அட்டை எண் ஐந்தை வைத்திருக்கிறது யார்? அங்கே பின்னால் உள்ள ஒரு பெண்மணி. சரி. ஜெப அட்டை எண் ஆறு. எண் ஏழு. 235 நீங்கள் சரியாக இங்கே, இந்தப் பக்கத்திற்கு வாருங்கள். இப்பொழுது நான்கு, ஐந்து, ஆறு, ஏழு வரட்டும். எப்படி…அவர்களை இந்த ஒரு வழியில் சுற்றிக்கொண்டு…மேடையில் மேல் இங்கே வரவழைப்பது என்பதை ஒருவேளை நான் அறியாமலிருக்கலாம். சரி. உங்களால் முடிந்தளவு துரிதமாக வாருங்கள். இசைப் பேழையை இசைப்பவரே, நீங்கள் விரும்பினால் நம்பிடுவாய் என்ற பாடலை வாசியுங்கள். எனக்கு யார், எங்கே, எப்படி, எப்பொழுது, யார் என்பதை அறிந்துகொள்ள வழியே கிடையாது. 236 இப்பொழுது நம்மால் எத்தனை பேரை எழும்பி நிற்க வைக்க முடியும் என்று நாம் பார்ப்போம். இப்பொழுது நீங்கள் வருவீர்களா? அந்த ஜெப அட்டை எண் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு. எண் எட்டை, ஜெப அட்டை எண் எட்டை வைத்திருப்பது யார்? மகனே, அங்கே போ. 237 ஜெப அட்டை ஒன்பது. ஜெப அட்டை எண் ஒன்பதை வைத்திருக்கிற நீங்கள் உங்களுடையக் கரத்தை உயர்த்துங்கள். 238 ஒருகால் யாராவது கேட்க முடியாமல் செவிடாய் இருக்கலாம். உங்களுக்குப் பக்கத்தில் அமர்ந்துள்ளவர்களுடைய அட்டையை நீங்கள் நோக்கிப் பாருங்கள். ஜெப அட்டை எண் ஒன்பது, ஒன்பது என்ற எண்ணை வைத்துள்ள நீங்கள் உங்களுடையக் கரத்தை உயர்த்துவீர்களா? 239 எழும்ப முடியாதவர்கள் வேறு எவரேனும் இருக்கிறார்களா? நீங்கள் முடமானவர்களாயிருந்து, எழும்பி நிற்க முடியாமலிருந்தால், அவர்கள் உங்களை சுமந்து வருவார்கள். ஜெப அட்டை ஒன்பது, அவர்கள் ஒருகால் வந்துவிட்டிருக்கலாம். ஜெப அட்டை பத்து. சரி, பெண்மணியே இங்கே வாருங்கள். ஜெப அட்டை பதினொன்று. ஐயா, அந்தப் பக்கமாக வாருங்கள். ஜெப அட்டை பன்னிரண்டு, ஐயா, இங்கே வாருங்கள். ஜெப அட்டை பதிமூன்று. சரி பெண்மணியே இங்கே வாருங்கள். ஜெப அட்டை பதினான்கு. நீங்கள் பதினான்கை வைத்துள்ளீர்களா? பதினைந்து. பெண்மணியே நீங்கள் விரும்பினால், இங்கே வாருங்கள். 240 அது அருமையாயுள்ளது, வாருங்கள். உங்களால் முடிந்தால் நீங்கள் சுற்றிக்கொண்டு, அங்குள்ள அந்த நடைப் பிரகாரத்தில் நிற்கும்படிக்கு ஒருகால் செல்லலாம் என்று நான் யூகிக்கிறேன். பில், அங்கிருந்து வாருங்கள். சற்று இங்கே வந்து நடைப்பிரகாரத்தின் மத்தியில் நில்லுங்கள். அது சரி. அது சரியே. அவர்களை அங்கே வரிசைப்படுத்துங்கள். பெண்மணியே, இங்கே கீழே வாருங்கள். பெண்மணியே, அன்பான சகோதரியே, அங்கே போய் நில்லுங்கள். வரிசையினூடாகச் சரியாகக் செல்லுங்கள். 241 எத்தனை பேரை நாம் வரிசைப்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்பதை நாம் பார்ப்போமாக, நாம் இவைகளின் பேரில் ஒரு நிமிடம், அப்படியே ஒரு நிமிடம் காத்திருப்போமாக. [சகோதரன் பிரான்ஹாம் பேசாமல் நிறுத்துகிறார்—ஆசி.] 242 இப்பொழுது உண்மையான பயபக்தியோடிருங்கள். தொடர்ந்து அமர்ந்திருங்கள், அமைதியாய், பேசாமல் அமர்ந்திருங்கள். இப்பொழுது இது ஒரு தேவனுடைய வீடாய் இருக்கிறது. சரி. அந்த ஜெபத்தை…ஏறெடுக்கும்போது… 243 [யாரோ ஒருவர் சகோதரன் பிரான்ஹாமிடத்தில் பேசுகிறார்—ஆசி.] என்ன கூறுகிறீர்? என்ன சொல்லுகிறீர்? சரி, நம்மால் இன்னும் ஒரு சிலரை சேர்த்து நிறுத்த முடியுமா? சரி. ஜெப அட்டை… 244 நான் எந்த எண்ணில் விட்டுவிட்டேன்? ஆம். ஐயா, உங்களுடைய ஜெப அட்டை எண் என்ன? [சகோதரன், “பதினான்கு” என்று கூறுகிறார்.—ஆசி.] பதினான்கு. சரி. 245 ஜெப அட்டை எண் பதினைந்து, பதினாறு, பதினேழு, பதினெட்டு, பத்தொன்பது, இருபது. 246 பெண்மணியே இந்த வழியே வாருங்கள். மேலே அந்த வழியாக, அந்த வழியாய், அந்த வழியாய் செல்லுங்கள். சரி நம்மால் எத்தனை பேரை நிற்க வைக்க முடியுமோ, ஏறக்குறைய அத்தனை பேரை நிற்க வைப்போம். பெண்மணியே அந்த வழியாகச் செல்லுங்கள். நீங்கள் செல்வீர்களேயானால், அவர்கள் உங்களைப் பார்த்துக் கொள்வார்கள். சரி. 247 [யாரோ ஒருவர் சகோதரன் பிரான்ஹாமிடத்தில் பேசுகிறார்—ஆசி.] என்ன சொல்லுகிறீர்கள்? நல்லது. அது சரியே. நம்மால் அதைப்போன்று நிற்க முடிந்தபடியால், அதுவே போதுமானதாயிருக்கும். 248 என்ன? சகோதரியே, மூக்கில் இரத்தம் வடிந்து கொண்டிருக்கிற குட்டிப் பெண் இவள் தானா? நாம் ஒரு சில நிமிடங்கள் நிறுத்துவோம். நீங்கள் ஒரு நிமிடம் உங்களுடையத் தலைகளைத் தாழ்த்துவீர்களா? [சகோதரன் பிரான்ஹாம் பிரசங்கபீடத்தில் உள்ள ஒலிப்பெருக்கியை விட்டு குழந்தையிடம் செல்கிறார்—ஆசி.] 249 பிதாவே, உம்முடைய நேசப்பிள்ளையாகிய கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில், தேவனே நீர் இந்தக் குழந்தையைத் தொட வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். இரத்தத்தை நிறுத்தும். அது இப்பொழுதுதே வடிவதைவிட்டு நின்று போவதாக. உம்முடைய நாமம் மகிமைப்படுவதாக. நாங்கள் தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இந்த இரத்தம் வடிதலைக் கடிந்துகொள்கிறோம். 250 [சகோதரன் பிரான்ஹாம் யாரோ ஒருவரிடத்தில் மென்மையாய்ப்பேசி, பின்னர் பிரசங்க பீடத்திற்குத் திரும்புகிறார்—ஆசி.] சரி, நாம் இப்பொழுது ஒரு நிமிடம் நம்முடையத் தலைகளைத் தாழ்த்தியேயிருப்போமாக. 251 கர்த்தராகிய இயேசுவே, இன்றைக்கு கூட்டத்தில் நின்று கொண்டிருக்கிற அநேகர் காத்துக்கொண்டிருக்கின்றனர். உம்முடைய சுகமளிக்கும் வல்லமைக்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். நாங்கள் கேட்டுக்கொண்டுள்ள காரியங்களை நீர் அருள வேண்டும் என்று எங்கள் முழு இருதயத்தோடு நாங்கள் வேண்டிக்கொள்கிறோம். அதைத் தேவனுடைய மகிமைக்காகவேச் செய்யும். நாங்கள் இயேசுவின் நாமத்தினூடாக ஜெபிக்கிறோம். ஆமென். 252 சரி, இப்பொழுது நம்மால் முடிந்தளவு நாம் பயபக்தியாய் இருப்போமாக. நினைவில் கொள்ளுங்கள், எனக்குத் தெரியாது. இது முழுவதும் தேவனுக்குள் அசைவாடுதலாய் உள்ளது. 253 இப்பொழுது, எனக்குத் தெரிந்த ஜனங்கள் அங்கே ஜெபவரிசையில் இருக்கின்றனர். சகோதரன் உட்ஸ் அங்கே நிற்கிறார். நான் அவரை அறிவேன். நான் அந்த இரண்டாம், மூன்றாம் நபரையும், அதற்கு பின்னால் உள்ள ஒருவரையும் அறிவேன். நான் அவர்களை அறிவேன். இங்கு அமர்ந்துகொண்டிருக்கும் இந்தப் பெண்மணியை, இந்த முதல் பெண்மணியை நான் அறிவேன். அவளோடுள்ள கோளாறூ என்னவென்பதை நான் அறியேன். ஆனால் அங்குள்ள அவளை எனக்கு தெரியும். ஜெப வரிசையில் ஏறக்குறையை எனக்குத் தெரிந்தவர்கள் அவ்வளவுதான் என்று நான் யூகிக்கிறேன். 254 எனக்குத் தெரியாத அநேகர் இங்கே வெளியே இருக்கிறார்கள். நான் உங்களை அறியேன் என்று இந்தக் காரியங்களைக் குறித்து நீங்களே உங்களுக்கு சாட்சிகளாய் இருக்கிறீர்கள். ஆனால் இயேசு கிறிஸ்து உங்களை அறிந்திருக்கிறார். அவர் அறிந்திருக்கிறாரல்லவா? [சபையோர், “ஆமென்” என்கிறார்கள்.—ஆசி.] 255 இப்பொழுது அங்கே வெளிய எத்தனை பேர் ஜெப அட்டை இல்லாமலிருந்தும், எப்படியாயினும் நீங்கள் சுகமாக்கப்பட வேண்டுமென்று விரும்பிகிறீர்கள்? உங்களுடையக் கரங்களை உயர்த்துங்கள், மேலே உயர்த்துங்கள், மேலே உயர்த்துங்கள். அது அருமையாயுள்ளது. சரி, ஜெப அட்டை இல்லாமலிருக்கிற உங்களை தேவன் ஆசீவதிப்பாராக. இப்பொழுது நீங்கள் இதைச் செய்யும்படி நான் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். பரிசுத்த ஆவியானவர் வந்து அபிஷேகிப்பாரேயானால், அப்பொழுது நீங்கள் இந்தவிதமாய் நோக்கிப் பார்த்து, உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசியுங்கள். அப்பொழுது நீங்கள் நோக்கிப் பார்த்து, “கர்த்தாவே, நான் என்னுடைய முழு இருதயத்தோடு உண்மையாய் விசுவாசிக்கிறேன்” என்று கூறுங்கள். நீங்கள் அதைச் செய்வீர்களேயானால், அப்பொழுது தேவன் உங்களுக்கு உங்களுடைய சுகமளித்தலை அருளுவார். “நான் அதை என்னுடைய முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறேன்.” இப்பொழுது, சுற்றும் முற்றும் அசைய வேண்டாம். உண்மையானப் பயபக்தியோடிருங்கள். உங்களால் இருக்க முடிந்தளவு பயபக்தியாயிருங்கள். இப்பொழுது நாம் மீண்டும் ஜெபம் செய்வோமாக. 256 இப்பொழுது நீங்கள் உங்களுடையத் தலைகளை வணங்கியிருப்பதோடு, அப்படியே இருக்க வேண்டும் என்று நான் உங்களை கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். இயேசுவானவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்துவிட்டாரென்றால்…இப்பொழுது இது உங்களை சுகப்படுத்த அல்ல. இது அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்திருக்கிறார் என்ற ஒரு ரூபகாரப்படுத்துதலாய் மாத்திரமே உள்ளது. இயேசு கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்துவிட்டாரென்றால், அப்பொழுது இரட்சிப்பைப் போன்றே சுகமளித்தலையும் அவர் ஏற்கனவே கல்வாரியில் சம்பாதித்துவிட்டார். அது சரிதானே? அப்படியானால், “ஆமென்” என்று கூறுங்கள். [சபையோர், “ஆமென்” என்கிறார்கள்.—ஆசி.] அவர் இனிமேல் செய்யக்கூடியது ஒன்றுமேயில்லை; அவர் செய்யக் கூடிய ஒரே காரியம் ஒரு அடையாளம் அல்லது ஒரு அதிசயத்தைக் காட்டும் வழி மட்டுமேயாகும். அதுவே அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்துவிட்டார் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளும்படிச் செய்யும். அவர் இங்க பூமியின் மேல் இருந்தபோது செய்த அதேக் காரியங்களையே அவர் ஒருமுறை செய்வாரானால், அப்பொழுது நீங்கள் அவரை ஏற்றுக் கொள்ள வேண்டும். அது சரிதானே? [“ஆமென்”] நீங்கள் அதைச் செய்வீர்களா? நீங்கள் அப்படி ஏற்றுக் கொள்வீர்களென்றால், உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள். அவர் இங்கே பூமியின் மேலிருந்தபோது செய்த ஒரு காரியத்தையே அவர் நிகழ்த்துவாரானால், நீங்கள் அதை ஏற்றுக்கொள்வீர்களா? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நூறு சதவீதம். 257 இப்பொழுது பிதாவே, நீர் இரக்கமாயிருக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். இப்பொழுதும் நீர் மரித்தோரிலிருந்து எழுந்துவிட்டீர் என்றும், அது என்றென்றைக்குமான தீர்வையாயிருக்கும்படிக்கு உம்முடைய மகிமைக்காக, கர்த்தாவே இந்தக் கூடாரத்தில் இன்றைக்கு இங்கே நீர் அதை அருள வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். இப்பொழுது நான் இந்த ஆசீர்வாதங்களைத் தேவனுடைய மகிமைக்காக இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறேன். ஆமென். 258 இப்பொழுது தேவனுடைய மகிமைக்காக, அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமைக்காக, சர்வ வல்லமையுள்ள தேவனுடைய மகிமைக்காக இங்குள்ள ஒவ்வொரு ஆவியையும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என்னுடையக் கட்டுப்பாட்டின் கீழ் எடுத்துக் கொள்கிறேன். ஆகையால் உங்களுக்கு சொல்லப்பட்டிருக்கிறபடியே செய்யுங்கள். 259 இப்பொழுது அந்தப் பெண்மணி இங்கே சரியாக அந்த ஒலிப்பெருக்கியின் அருகே நிற்கும்படி வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எனக்கு அந்தப் பெண்மணியைத் தெரியும். அவளுடைய பெயர் சட்டன் (Sutton) என்று நான்—நான் நினைக்கிறேன். நான் தவறாகக் கூறவில்லை…[அந்த சகோதரி, “இல்லை, காப், இப்பொழுது” என்று கூறுகிறார்—ஆசி.] ஓ, காப், என்னை மன்னிக்கவும். நான் அதற்கு முன்பு அந்த ஸ்திரீயைப் பார்த்திருக்கிறேன், ஏனென்றால் அவள் எப்பொழுதாவது ஒருமுறை கூடாரத்திற்கு வருவாள். இப்பொழுது ஆனால், அவளோடுள்ளக் கோளாறு என்ன என்பதைக் குறித்து நான் ஒன்றுமே அறியேன். ஆனால் இப்பொழுது அவளோடுள்ளக் கோளாறு என்னவென்பதைக் குறித்து அறிந்துகொள்ளக்கூடிய ஒரேவழி, ஏதோ ஒரு வழியில் தேவன் அதைக் குறித்து என்னிடத்தில் கூறினால் மாத்திரமேயாகும். அது சரிதானே, திருமதி…[“ஆம், அப்படித்தான்.”] காப்? [“அது சரி.”] காப்? சரி. இப்பொழுது உங்களுடையப் பெயர் காப் என்பதாய் உள்ளதா? [“ஆம்.”] சரி. சரி. 260 திருமதி. காப் அவர்களே, உங்களோடுள்ளக் கோளாறு என்னவென்பதை அறிந்துகொள்ளக்கூடிய ஒரே வழி தேவன் அதை எனக்கு வெளிப்படுத்தித் தருவதன் மூலமேயாகும். [அந்தச் சகோதரியோ, “ஆம்” என்று கூறுகிறார்.—ஆசி.] அப்படியானால் அவர் அதைச் செய்வாரானால், அப்பொழுது அது மானிட வர்க்கத்திற்குச் சொந்தமாயிராத இயற்கைக்கு மேம்பட்ட ஒரு வல்லமையினூடாக மட்டுமே வர வேண்டியதாயிருக்கும். அது தெய்வீக வல்லமையிலிருந்து வர வேண்டியதாயிருக்கும். அது சரிதானே? [“அது உண்மை.”] அப்படியானால் அது அவ்வாறு வருமானால், அப்பொழுது நான் அவருடைய உயிர்த்தெழுதலைக் குறித்த சத்தியத்தை உங்களிடம் கூறினேன் என்பதை நீங்கள் விசுவாசிக்கும்படிக்குச் செய்யுமா? [“ஆம்.”] புரிகிறதா? 261 நண்பனே, அது உங்களை விசுவாசிக்கச் செய்யுமா? [சபையோர், “ஆமென்” என்று கூறுகிறார்கள்.—ஆசி.] 262 இப்பொழுது இயேசு எனக்களித்த இந்த ஆடையான மேற்சட்டையை (Suit) அவரே இங்கே அணிந்து நின்றுகொண்டிருந்தால் எப்படியிருக்கும்? [அந்த சகோதரியோ, “கர்த்தருக்கு ஸ்தோத்திரம்” என்று கூறுகிறாள்.—ஆசி.] புரிகிறதா? அவர் இங்கே நின்றுகொண்டிருந்து, இவ்வாறிருந்தால்… 263 இப்பொழுது அந்த ஸ்திரீ ஒருகால் பணத் தொல்லையை உடையவளாயிருக்கலாம். அவள் குடும்பத் தொல்லையை உடையவளாயிருக்கலாம். அவள் சுகவீனத்தொல்லைகளை உடையவளாயிருக்கலாம். எனக்குத் தெரியாது. தேவன் அதை அறிந்திருக்கிறார். எனக்குத் தெரியாது. என்னால் அதை உங்களுக்கு கூற முடியாது. ஒருகால் அவள் தன்னுடைய வாழ்க்கையில் ஏதோ ஒரு காரியத்தைச் செய்திருக்கலாம், அதுவே அவள் மீது வருகிற தொல்லைக்குக் காரணமாயிருக்கலாம். எனக்குத் தெரியாது. தேவன் அதை அறிந்திருக்கிறார். எனக்குத் தெரியாது. 264 ஆனால் அவரால் அதை எனக்குக் கூற முடியும். பாருங்கள், அதுதான் இது. இயேசு, “பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்.” என்றார். எனவே அது அதனூடாகவே வர வேண்டியதாயிருக்கிறது. 265 இப்பொழுது, நான் இங்கே இந்த ஸ்திரீயினிடத்தில் செய்துகொண்டிருக்கிறது என்னவென்றால், மனோதத்துவத்தினால் அவளுடைய சிந்தையைப் படிப்பதல்ல. இல்லை, ஐயா. அப்படியல்லவே. அது தவறானது என்பதை தேவன் அறிந்திருக்கிறார். இது அவ்வாறானது அல்லவே. அதுவல்ல இது என்பதை அறிந்திருக்கிற பரலோகத்தின் தேவன் என்னுடைய நியாயாதிபதியாயிருக்கிறார். அது தவறாகும், பாருங்கள். மனோதத்துவத்தினால் அவளுடைய சிந்தையிலுள்ளதைப் படிப்பதல்ல. 266 ஆனால் இதுவோ உயிர்த்தெழுதலின் வல்லமையின் மூலமாக உண்டானதாயிருக்கும், இயேசு கிறிஸ்து தம்முடைய சபையில் இருக்கிறார். பேதுருவையும், மற்றவர்களையும் நோக்கிப் பாருங்கள், அவர்கள் அங்கே நின்று, ஜனங்களை நோக்கிப் பார்த்தனர். எப்படி பவுலும், இன்னும் பல்வேறுபட்டவர்களும் ஜனங்களை நோக்கிப் பார்த்தனர். அப்பொழுது குறிப்பிட்டக் காரியங்கள் தவறாயிருந்தன என்பதை அவர்கள் அறிந்துகொண்டனர். 267 இயேசு கிணற்றண்டையிலிருந்த ஸ்திரீயினிடத்தில் பேசிக்கொண்டிருந்தார். அவர் தொடர்ந்து அவளோடு ஓர் உரையாடலை நிகழ்த்தினார். இப்பொழுது அது பரிசுத்த யோவான் 4-ம் அதிகாரத்தில் உள்ளது என்பதை நாம் யாவரும் அறிவோம். அவர் கிணற்றண்டையிலிருந்த ஸ்திரீயினிடத்தில் பேசினார். அவர் கிணற்றண்டையிலிருந்த ஸ்திரீயினிடத்தில் பேசிக்கொண்டிருக்கையிலே, அவர் வெறுமனே அவளுடைய ஆவியைப் பகுத்தறிந்து கொண்டிருந்தார். 268 பிதாவானவர் சமாரியாவின் வழியாக அவரைப் போகும்படி அவரிடத்தில் கூறியிருந்தார். அவர் போய்க்கொண்டிருந்த இடம் எரிகோவாயிருந்தது. அது எருசலேமிலிருந்து இதைப்போன்று நேராய் கீழ்நோக்கியிருந்தது. ஆனால் அவர் சுற்றிக்கொண்டு செல்லும் வழியாய் சமாரியாவிற்குச் சென்றார், ஏனென்றால் கர்த்தர் அங்கே போகும்படி அவரிடத்தில் கூறியிருந்தார். 269 அப்பொழுது அவர் அங்கே கிணற்றண்டையிலே அமர்ந்துகொண்டு, சீஷர்களையோ தூரமாய் அனுப்பியிருந்தார். அந்த ஸ்திரீ வந்துகொண்டிருந்ததை அவர் அறிந்திருந்தார். அவள் தன்னுடையத் தண்ணீர் மொள்ளும் குடத்தோடு வந்தபோது, அவரோ, “தாகத்துக்குத் தா” என்றார். அப்பொழுது அவள், “நீர் என்னிடத்தில் இப்படிக் கேட்டது வழக்கமல்லவே” என்றாள். 270 அதற்கு அவர், “நீ யாரிடத்தில் பேசிக்கொண்டிருக்கிறாய் என்பதை அறிந்திருந்தாயானால், அப்பொழுது நீயே என்னிடத்தில் தண்ணீருக்காகக் கேட்டிருப்பாய். அப்பொழுது நீ இங்கு வந்து மொண்டிராத தண்ணீரை நான் உனக்குக் கொடுத்திருப்பேன்” என்றார். 271 அது சரிதானே? [அந்த சகோதரியோ, “ஆம்” என்று கூறுகிறாள்.—ஆசி.] அதன்பின்பு உரையாடல் சற்று நேரம் நிகழ்ந்தப் பிறகு, அவர் முடிவிலே அவளுடையக் கோளாறு என்னவாயிருந்தது என்பதைச் சரியாகக் கண்டுபிடித்தார். [“ஆம்.”] அப்பொழுது அவர், “போய் உன் புருஷனை அழைத்துக்கொண்டு வா” என்றார். [“ஆம்.”] அதற்கு அவளோ, “எனக்குப் புருஷனில்லையே” என்றாள். 272 அப்பொழுது அவர், “அது உண்மை. அது சரியே” என்றார். மேலும் அவர் தொடர்ந்து, “உனக்கு ஐந்து புருஷர் இருந்தார்கள். இப்பொழுது உனக்கிருக்கிறவன் உனக்குப் புருஷனல்ல” என்றார். 273 அதற்கு அவள், “நீர் தீர்க்கதரிசி என்று நான் காண்கிறேன். மேசியா வரும்போது, அவர் இதைச் செய்வார் என்றும், அவர் எங்களுக்கு எல்லாவற்றையும் அறிவிப்பார் என்பதையும் நான் அறிவேன்” என்றாள். [அந்த சகோதரி, “தேவனே நன்றி” என்று கூறுகிறாள்.—ஆசி.] “ஆனால் நீர் யார்?” என்றாள். அதற்கு அவர், “உன்னுடனே பேசுகிற நானே அவர்” என்றார். 274 [சகோதரியே, “ஆமென்” என்கிறார்.—ஆசி.] இப்பொழுது அது நேற்றைய இயேசுவாயிருந்தது. [“கர்த்தாவே நன்றி.”] அது இன்றைய இயேசுவாயும் உள்ளது. [“அவருடைய நாமத்திற்கே ஸ்தோத்திரம்.”] இப்பொழுது முறைப்படி… 275 பெண்மணியே உங்களைக் குறித்து நான் அறிந்துகொள்ளக் கூடிய ஒரே வழி, உங்களுக்கும் எனக்குமிடையே தேவனோடு ஏதோ ஒரு விதமான தொடர்பு இருக்க வேண்டும், அதுவே அதை வெளிப்படுத்தும். [அந்தச் சகோதரி, “ஆம்” என்றாள்.—ஆசி.] 276 எனக்கு அருகில் நின்றுகொண்டிருக்கிற கர்த்தருடைய தூதனை, அந்த ஒளியைக் குறித்து அவர்கள் எடுத்துள்ள அந்தப் புகைப்படத்தை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? உங்களுக்கு அது தெரியுமா? [அந்த சகோதரி, “ஆம், நான் அதை வைத்திருக்கிறேன்” என்கிறாள்.—ஆசி.] நீங்கள், அவைகளில் ஒன்றை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? [“நான் அதைப் பார்த்திருக்கிறேன். நான் அதை வைத்திருக்கிறேன்.”] 277 சபையானது எப்போதாவது…ஓ, உண்மையாகவே நீங்கள் அதை இங்கே சபையில் கண்டிருக்கிறீர்கள். [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] 278 இப்பொழுது அதைத்தான் நான் நமக்கு அருகில் கொண்டுவர முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். இப்பொழுது அந்த ஒளி இஸ்ரவேல் புத்திரரை வழிநடத்தின அதே அக்கினி ஸ்தம்பமாயிருக்கிறது. அது இயேசு கிறிஸ்துவாய், உடன்படிக்கையின் தூதனாய் இருந்தது, அது உண்மையே. அப்பொழுது அவர் இயற்கைக்கு மேம்பட்ட ஒளியின் ரூபத்தில் இருந்தார். 279 அவர் இறங்கி வந்து மாம்சத்திலிருந்தார். பின்னர் அவர், “நான் தேவனிடத்திலிருந்து வந்தேன், நான் தேவனிடத்திற்குத் திரும்பிப் போகிறேன்” என்றார். 280 “இன்னும் கொஞ்சக்காலத்திலே உலகம் என்னைக் காணாது, நீங்களோ என்னைக் காண்பீர்கள்.” “உலகம் என்பது ‘அவிசுவாசி’ என்பதாய் உள்ளது.” “நீங்கள் என்னைக் காண்பீர்கள், ஏனென்றால் உலகத்தின் முடிவுபரியந்தம் நான் உங்களுடனேகூட இருப்பேன்.” 281 [சகோதரியோ, “ஓ, தேவனுக்கு ஸ்தோத்திரம். ஆம், கர்த்தருக்கு ஸ்தோத்திரம்” என்கிறாள்.—ஆசி.] இப்பொழுது, கர்த்தர் ஸ்தோத்தரிக்கப்படுவாராக! என்னை நீங்கள் அறிவீர்கள். நான்…ஏதோக் காரியம் சம்பவித்துக் கொண்டிருக்கிறது. 282 இப்பொழுது கூட்டத்தாரே, நீங்கள் பயபக்தியாய் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால் இப்பொழுது அந்த அதே வெளிச்சம் இங்கே என்னுடைய வலபக்கத்திற்கு வந்துகொண்டிருக்கிறது, தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக. அது எனக்கும் அந்த ஸ்திரீக்குமிடையே அசைவாடிக்கொண்டிருக்கிறது. இப்பொழுது அவளுடைய வாழ்க்கை மறைக்கப்பட முடியாது. 283 இப்பொழுது என் சகோதரியே, உங்கள் மீது இப்பொழுது உள்ள அந்த ஒளி உன்னை எந்தவிதத்திலும் புண்படுத்தப் போகிறதில்லை. [அந்த சகோதரியோ, கதறி அழுகிறாள்.—ஆசி.] அது உனக்கு உதவி செய்யவே உள்ளது. அது மாத்திரமே இரட்சிப்பின் வழியாகும். [“ஆம். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.”] நீங்கள், நீங்கள் இங்கே இருப்பது… 284 இல்லை, நீங்கள் இங்கே இந்தப் பட்டிணத்தில் வசிக்கவில்லை. நீங்கள் நியூ ஆல்பனியில் வசிக்கிறீர்கள். [அந்த சகோதரி, “ஆம்” என்று கூறுகிறாள்.—ஆசி.] நீங்கள் நியூ ஆல்பனியில் வசிக்கிறீர்கள். [“தேவனுக்கு ஸ்தோத்திரம்.”] நீங்கள்—நீங்கள் ஒரு மருத்துவரின் கவனிப்பீன்கீழ் இருக்கிறீர்கள். மருத்துவர் உங்களிடத்தில் உங்களுக்கு ஏதோ ஒருவிதமான காரியம் உள்ளது என்றும், அது தொண்டையில் உள்ள ஒரு காரியம் என்றும் கூறியிருக்கிறார். சில…அது உங்களுடைய தொண்டையில் உள்ள ஒரு காற்றுக் குழாய் சார்ந்த நிலையாகும். [சகோதரியே கதறி அழுகிறாள்.] நீங்கள் இந்தத் தேசத்தை விட்டு இங்கிருந்து தூரமாகச் செல்ல வேண்டும் என்றும், அது மாத்திரமே நீங்கள் சுகமடையக் கூடியதற்கான வழியாய் இருக்கும் என்றும் மருத்துவர் உங்களுக்கு ஆலோசனையும் கூறியுள்ளார். [“ஆம். அது உண்மை.”] கர்த்தராகிய இயேசுவால் இதைக் குணப்படுத்த முடியும் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நாம் நம்முடையத் தலைகளை வணங்குவோமாக. 285 எங்களுடையப் பரலோகப் பிதாவே, பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தின்கீழ் இருக்கையில், இந்த ஸ்திரீயின் மீது கரங்களை வைத்து, இந்தக் கோளாறை நான் கடிந்துகொள்கிறேன். நீர் கல்வாரியில் அவளை சுகப்படுத்தியிருக்கிறீர். எனவே அவள் விடுதலையடைந்து செல்லும்படியாக நான் வேண்டிக்கொள்கிறேன். நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென். 286 [அந்த சகோதரி சகோதரன் பிரான்ஹாமினுடைய ஜெப முழுவதிற்குமே கதறி அழுது, பின்னர், “கர்த்தாவே நன்றி” என்று கூறினாள்.—ஆசி.] 287 என் சகோதரியே, சமாதானமாய்ச் செல்லுங்கள், தேவன் உங்களை அசீர்வதித்து, உங்களோடு இருப்பார் என்பதே என்னுடைய ஜெபமாயிருக்கிறது. [அந்தச் சகோதரியோ திரும்பி தன்னுடைய இருக்கைக்கு செல்லும்போதும் தொடர்ந்து அழுகிறாள்—ஆசி.] 288 இப்பொழுது கர்த்தருக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக! இப்பொழுது பயபக்தியாயிருங்கள். கவனியுங்கள். தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள். சந்தேகப்படாதீர்கள். 289 பெண்மணியே, நீங்கள் இந்தவிதமாக நோக்கிப்பார்க்க நான் விரும்புகிறேன். இப்பொழுது அந்த ஒருவராகிய…நாம் அவருடையப் பிரசன்னத்தில் இருக்கிறோம். அவர் எல்லாக் காரியங்களையும் அறிந்திருக்கிறார். துவக்கத்திலி௫ந்தே உங்களை அறிந்தி௫க்கிறார், நீங்கள் புசித்திருக்கிற ஒவ்வொரு ஆகாரத் துணுக்கையும் அவரே உங்களுக்குப் போஷித்திருக்கிறார். உங்களைக் குறித்த எல்லாவற்றையும் அவர் அறிந்திருக்கிறார். நான் உங்களை அறியாமலிருக்கலாம், ஆனால் தேவன் உங்களை அறிந்திருக்கிறார். நீங்கள் யாராயிருக்கிறீர்கள் என்றும், நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்றும், உங்களைக் குறித்த எல்லாவற்றையும், உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் செய்திருக்கிறது என்ன என்பதையும் அவர் அறிந்திருக்கிறார். அவர் ஒருவர் மாத்திரமே உங்களை சுகப்படுத்த முடியும் அல்லது நீங்கள் என்ன செய்யப்பட வேண்டும் என்று வாஞ்சித்துக்கொண்டிருக்கிறீர்களோ, அதை உங்களுக்காக செய்ய முடியும். எனக்கு அது தெரியாது என்பதை நீங்கள் அறிவீர்கள். தேவன் மட்டுமே அதை வெளிப்படுத்தித் தர வேண்டும். [அந்த சகோதரியோ, “அது உண்மை” என்று கூறுகிறாள்.—ஆசி.] அதுதானே உண்மை? அது உண்மையானால் உங்களுடையக் கரத்தை உயர்த்துங்கள். [“அது உண்மையாயிருக்கிறது.”] சரி, நீங்கள் ஒரு நிமிடம் இந்த விதமாக நோக்கிப் பாருங்கள். 290 [சகோதரன் பிரான்ஹாம் பேசாமல் நிறுத்துகிறார்—ஆசி.] அப்படியே ஒரு நிமிடம் அமைதியாயிருங்கள். இப்பொழுது ஒவ்வொருவரும் பயபக்தியாயிருங்கள். 291 இதோ கர்த்தருடைய தூதன் இங்கே நின்று கொண்டிருக்கிறார், அப்படியே…அது மேலே ஒரு சிறு…அது இங்கே உட்கார்ந்துகொண்டிருக்கிற இந்தக் குட்டிப் பெண் மீது உள்ளது. இந்தக் குட்டிப்பெண் தன்னுடைய அன்பார்ந்தவர்களோடு அங்கே இருக்கிறாள். அந்தக் குழந்தைத் தன்னுடையத் தொண்டையில் உள்ள ஏதோ ஒருவிதமான கோளாறினால் அவதியுறுகிறது. அது ஒரு தொண்டைக் கோளாறு, தொண்டையில் உள்ள உள்நாக்குச் சதை வளர்ச்சியாயுள்ளது. அது உண்மை. ஐயா, அப்படித்தானே? உங்களுடையக் கரத்தை அவள் மீது வையுங்கள். கர்த்தராகிய தேவனே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் சாத்தான் வெளிப்படுத்தப்பட்டான். 292 அந்தக் குட்டிப் பெண்ணைப் பிடித்துக்கொண்டிருக்கிற அந்தப் பிசாசை நான் கடிந்துகொள்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அவளைவிட்டு வெளியே வா. ஆமென். 293 சகோதரனே, இந்தக் குழந்தையைக் கொண்டு வருவதற்காக, நீங்கள் நீண்ட தூரத்திலிருந்து வந்திருக்கிறீர்கள். ஆனால் கவலைப்படாதீர்கள், நீங்கள் அவளை சுகமடைந்தவளாய் வீட்டிற்கு அழைத்துக்கொண்டு செல்லுகிறீர்கள். உங்களுடைய விசுவாசம் உங்களை இரட்சித்தது. தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள். [சகோதரன் பிரான்ஹாம் பேசாமல் நிறுத்துகிறார்—ஆசி.] 294 நீங்கள் ஜெபர்ஸன்வில்லிலிருந்தும் வரவில்லை. நீங்கள் ஜெபர்ஸன்வில்லிலிருந்தும் தூரமாய் வந்திருக்கிறீர்கள். [அந்தச் சகோதரியோ, “அது உண்மை” என்கிறாள்.—ஆசி.] நீங்கள் இங்கு வரும்போது, நீங்கள் கிழக்கிலிருந்து, மேற்கே வந்திருக்கிறீர்கள். [“நான் எடின்பர்க் என்ற இடத்திலிருந்து வருகிறேன்.”] நீங்கள் வருவது…ஒரு காரைபோடபட்ட சாலையில், அந்த சாலையில் வருகிறீர்கள். அந்தச் சாலையின் வலப்பக்கத்தில் ஒருவிதமாய் அமைந்துள்ள ஒரு பட்டிணத்திலிருந்து வருகிறீர்கள். அதைச் சுற்றிலும் அங்கே ஒருவிதமான ஓர் அரசாங்க அலுவலகம் உள்ளது. அது இந்தியானாவில் உள்ள எடின்பர்க். [“அது உண்மை.”] நீங்கள் இந்தியானாவில் உள்ள எடின்பர்க்கிலிருந்து வருகிறீர்கள். [“அது உண்மை.”] உங்களுடையப் பெயர் டென்ட்டன் என்று அதன்மேல் இருப்பதை நான் காண்கிறேன். [“அது சரியே.”] உங்களுடையப் பெயர் டென்ட்டன் என்பதாகும். [“கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.”] நீங்கள் இருதயக் கோளாறினால் அவதியுற்றுக்கொண்டிருக்கிறீர்கள். [“ஆம்.”] சுகமாய் வீட்டிற்குத் திரும்பிச் செல்லுங்கள். உங்களுடைய விசுவாசம் உங்களை குணப்படுத்தி, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களை ஆரோக்கியமாக்குகிறது. நீங்கள் சென்று சுகமடைவீர்களாக. ஆமென். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. [“கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.”] 295 தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள். உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசியுங்கள். இப்பொழுது ஜனங்களே, விசுவாசமாயிருங்கள். சந்தேகப்படாதீர்கள். இப்பொழுது விசுவாசியுங்கள். நீங்கள் அவரை விசுவாசிக்கிறீர்களா? [சபையோர், “ஆமென்” என்று கூறுகின்றனர்.—ஆசி.] ஒ, என்னே! இது நானல்ல; அவரே, அவர் உயிர்த்தெழுந்த இயேசுவாயிருக்கிறார். அந்த ஒருவரே இங்கிருந்துகொண்டு, காரியங்களை செய்துகொண்டிருக்கிறார். இது அவர் செய்த அதேக் காரியங்கள், அது உண்மை, அவர் செய்த அதேக் காரியங்களாகும். 296 இப்பொழுது, பெண்மணியே, நீங்களும் நானும் இக்காலையிலே இங்கே சந்தித்துக்கொண்டிருக்கிறோம். நம்மிருவரையுமே தேவன் அறிந்திருக்கிறார். நான் உங்களைக் குறித்து ஒன்றுமே அறியேன். நீங்கள் அதைக் குறித்து உணர்வுடையவராய் இருக்கிறீர். ஆனால் தேவன் உங்களை அறிந்திருக்கிறார். அவர் என்னை அறிந்திருக்கிறார். அவருடைய ஆவியானது இங்கே நமக்கிடையே உள்ளது. 297 இந்தக் கூடாரத்தினர் அறிந்துகொள்ளும்படியான ஒரு காரியத்தை நான் உங்களிடத்தில் கேட்க வேண்டுமென்று விரும்புகிறேன். உங்களுடைய ஜீவியம் முழுவதிலுமே இப்பொழுது நீங்கள் உணருகின்ற விதமாய் இதற்கு முன்பு ஒருபோதும் நீங்கள் உணர்ந்ததேயில்லை, அது உண்மை, ஏனென்றால் நீங்கள் சர்வ வல்லமையுள்ள அவருடையப் பிரசன்னத்தில் இருக்கிறீர்கள். அந்த ஒளியின் புகைப்படத்தை நீங்கள் எப்பொழுதாவது பார்த்திருக்கிறீர்களா? அதுவே உங்களைச் சரியாக அந்தவிதமாக உணரச் செய்து கொண்டிருக்கிறது. நான் இந்த நேரத்தில் மற்றொரு உலகத்தில் இருந்துகொண்டிருக்கிறேன். என்னால் உங்களைக் காண முடிகிறது, எனக்கு முன்பாக யாரோ ஒருவர் நின்றுகொண்டிருக்கிறதாய் உள்ளது. அது ஓர் அன்பான, இனிமையான, தாழ்மையான உணர்வாயுள்ளது. அது மரித்தோரிலிருந்து எழுந்த கர்த்தராகிய இயேசுவாகும். அவர் ஜீவ ஆவியாய், தேவனாய் திரும்பினார். இப்பொழுது அவர் இங்கே நம்மோடு இருக்கிறார். உலகத்தின் முடிவுபரியந்தம் அவர் நம்மோடு இருப்பார். 298 நீங்கள் ஒரு கிறிஸ்தவர். நீங்கள் ஒரு விசுவாசி. [அந்தச் சகோதரியோ, “அது உண்மை” என்கிறாள்.—ஆசி.] நீங்கள் இங்கே உங்களுக்காக நின்றுகொண்டிருக்கவில்லை. நீங்கள் இங்கே ஒரு மனிதனுக்காக நின்றுகொண்டிருக்கிறீர்கள். அந்த மனிதன் உங்களுடையக் கணவர். அந்த மனிதனுக்கு குடற்சரிவு உள்ளது. நான் அவனை மற்றொரு காரியத்தில் காண்கிறேன். அவன் ஒரு மது அருந்தும் இடத்தில் குடித்துக்கொண்டிருக்கிறான். அவன் ஒரு மட்டுமீறிய குடிகாரன். அவன், அவன் குடிக்கிறான். அந்த மனிதனுடைய விடுதலைக்காகவே நீங்கள் வந்திருக்கிறீர்கள். அது சரிதானே? இப்பொழுது பெண்மணியே, அந்தக் காரியங்கள் எந்த மானிட சிந்தனைக்கும் அப்பாற்பட்டது என்பதை நீங்கள் அறிவீர்கள். அது உண்மையாயிருக்கவில்லையா? [“அது உண்மையே.”] அது தேவனால் வெளிப்படுத்தப்பட வேண்டும். இப்பொழுது நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? [“நான் விசுவாசிக்கிறேன்.”] 299 சர்வ வல்லமையுள்ள தேவனே, இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவரே, நாங்கள் இன்றைக்கு இங்கே உயிர்த்தெழுதலின் ஆசீர்வாதங்களை அனுபவித்து மகிழ்ந்து கொண்டிருக்கிறோம். நான் இந்த உம்முடைய ஊழியக்காரியை ஆசீர்வதிக்கிறேன். அவள் கேட்டுக்கொண்டதைப் பெற்றுக் கொள்வாளாக. நான் இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென். 300 என் சகோதரியே, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. நீங்கள் வேண்டிக்கொண்டது எதுவோ அதைப் போய்ப் பெற்றுக் கொள்ளுங்கள். தேவனே அதை அருளும். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] 301 சரி, ஐயா, என்னை நோக்கிப் பாருங்கள். நான் பொருட்படுத்திக் கூறுவது பார்ப்பதற்கல்ல…பேதுருவும் யோவானும் அலங்கார வாசல் என்றழைக்கப்பட்ட வாசலினூடாகக் கடந்து சென்றபோது, அவர்கள், “எங்களை நோக்கிப் பார்” என்று கூறினதுபோலவே, நானும் பொருட்படுத்திக் கூறுகிறேன். நாம் ஒருவருக்கொருவர் அந்நியர்களாயிருக்கிறோம் என்றே நான் யூகிக்கிறேன். நாம் ஒருவரையொருவர் அறியோம்; ஒருவேளை இதுவே நாம் முதன்முறையாக ஒருவருக்கொருவர் பார்ப்பதாயிருக்கலாம். நாம் ஒருவரையொருவர் காணும்படியான நம்முடைய முதல் முறையான சந்திப்பு இது தானா? [அந்த சகோதரன் “ஆம்” என்று கூறுகிறார்.—ஆசி.] சரி. அப்படியானால் நாம் முற்றிலும் அந்நியர்களாயிருக்கிறோம். [“அது உண்மையே.”] நான் உங்களை ஒருபோதும் கண்டதில்லை. நீங்களும் என்னை ஒருபோதும் கண்டதில்லை. இதோ நாம் இங்கே இரண்டு மனிதர்களாய் வாழ்க்கையில் முதன்முதலாய் சந்திக்கிறோம். தேவன் நம்மிருவரையும் அறிந்திருக்கிறார். ஐயா அவர் அறிந்திருக்கிறாரல்லவா? [“அவர் அறிந்திருக்கிறார்.”] அவர் நிச்சயமாகவே அறிந்திருக்கிறார். இப்பொழுது உங்களைக் குறித்த ஏதாவது காரியம் இருக்குமாயின்… 302 [சகோதரன் பிரான்ஹாம் பேசுவதை நிறுத்துகிறார்.] ஏதோ ஒரு காரியம் சம்பவித்துள்ளது. இப்பொழுது ஒவ்வொருவரும் பயபக்தியாய் இருங்கள். [சகோதரன் பிரான்ஹாம் பேசுவதை நிறுத்துகிறார்.—ஆசி.] 303 இங்கே ஒரு பெண்மணி பின்னால் அமர்ந்து ஜெபித்துக்கொண்டிருக்கிறாள். அவள் மலச்சிக்கலினால் அவதியுற்றிருக்கிறாள். பெண்மணியே, ஒரு நிமிடம் நில்லுங்கள். அது உண்மை, அது உண்மையில்லையா? [அந்தச் சகோதரி, “ஆம்” என்கிறாள்.—ஆசி.] நீ உன்னுடைய இருதயத்தில் ஒரு படபடப்புத் தன்மையை உடையவளாயிருக்கிறாய். அது மலச்சிக்கலினாலேயன்றி வேறொன்றுமானாலுமல்ல, ஏனென்றால் நீ நரம்புத்தளர்வுற்று நிலைகுலைந்துபோயிருக்கிறாய். ஆனால் நீ வீட்டிற்குப் போய் சுகமடையப்போகிறாய். [“இயேசுவே, உமக்கு நன்றி.”] உன்னைச் சுற்றிலும் இருந்த இருளானது இப்பொழுது வெளிச்சமாக மாறிக்கொண்டிருக்கிறதை நான் காண்கிறேன். [“இயேசுவே, உமக்கு நன்றி.”] பயப்படாதீர்கள். அப்படியே… 304 பாருங்கள், உங்களுக்கு ஒரு ஜெப அட்டைத் தேவையில்லை. உங்களுக்குத் தேவைப்படுகிற ஒரே காரியம் விசுவாசமேயாகும். தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள். 305 [அந்தச் சகோதரி, இயேசுவே, கர்த்தாவே, உமக்கு நன்றி என்று கூறுகிறாள்.—ஆசி.] பெண்மணியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. [“இயேசுவே, உமக்கு நன்றி.”] உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசியுங்கள். [“இயேசுவே, உமக்கு நன்றி.”] 306 இப்பொழுது இங்குள்ள இந்தப் பகுதியினூடாகப் பொல்லாத ஆவி அசைவாடத் துவங்குகிறது. யாரோ ஒருவர் கூப்பிட்டுக்கொண்டேயிருக்கிறார். ஜெபம் ஏறெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. நான் ஒரு கருத்த ஒழுங்கற்ற கோடு ஒரு ஸ்திரீயினிடத்திலிருந்து ஒரு மனிதனிடத்திற்குத் அசைந்து செல்வதைக் காண்கிறேன். அது ஒரு பொல்லாத ஆவி. அது சரியாக விலாவெலும்பிற்குக் கீழே உள்ளது. நான் ஒரு பரிசோதனையைக் காண்கிறேன். ஓ, அது இங்கே ஒரு மனிதன் உட்கார்ந்து ஜெபித்துக்கொண்டே, தன்னுடையக் கண்களை துடைத்துக் கொண்டிருக்கிறார். சகோதரனே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. விசுவாசமாயிருங்கள். நீங்கள் என்னைத் தேவனுடையத் தீர்க்கதரிசியென்று விசுவாசிக்கின்றீர்களா? நீங்கள் என்னை அதேவிதமாக ஏற்றுக்கொள்வீர்களா? இப்பொழுது உங்களோடு உள்ள அதேக் கோளாறுதான் அங்கே தூரமாய் ஒரு சிறு தொப்பியை அணிந்தவராய் அமர்ந்து, வரிசையின் கடைசியிலிருந்து என்னையே நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கிற அந்த ஸ்திரீக்கும் உள்ளது. அது ஒரு ஒழுங்கற்ற கறுத்த கோடாய் உள்ளது. அந்தப் பெண்மணி குறுக்கே உள்ள இந்தப் பெண்மணியினுடையத் தலையை நோக்கிப்பார்த்துவிட்டு, தன்னுடையக் கரத்தை உயர்த்தியிருப்பதோடு என்னையே இங்கே உற்று நோக்குகிறாள். அதுதான் இந்தப் பெண்மணி. அது உண்மை. இதோ அது ஒருவரிடத்திலிருந்து மற்றொருவருக்கு வந்துகொண்டிருக்கிறது. அது பொல்லாத சக்தியாய், இழுக்கிறதாய், ஒரு ஒழுங்கற்ற கோடாய் உள்ளது. நீங்கள் தொல்லைக்குள்ளாகி இருக்கிறீர்கள். அது சரியாக இங்கே உங்களுடையப் பக்கவாட்டின் கீழ் உள்ளது. அது ஒரு பித்தப்பை கோளாறு நிலையாகும். அங்குள்ள அந்தப் பெண்மணியும் அதை உடையவளாயிருக்கிறாள். நீங்கள் இருவருமே குணமாக்கப்பட்டுவிட்டீர்கள். இயேசு கிறிஸ்து உங்களை சுகப்படுத்துகிறார். அந்தப் பொல்லாத சக்தி உங்களைவிட்டுப் போய்விடும், நீங்கள் விடுதலையடையப் போகின்றீர்கள். ஆமென். 307 [சகோதரன் பிரான்ஹாம் பேசாமல் நிறுத்துகிறார்.] விசுவாசமாயிருங்கள். [சகோதரன் பிரான்ஹாம் மீண்டும் பேசாமல் நிறுத்துகிறார். சபையார் மிகவும் சத்தமாக ஜெபித்துக்கொண்டிருக்கிறார்கள்—ஆசி.] இப்பொழுது ஒரு நிமிடம். பரிசுத்த ஆவியானவர் கூட்டத்தில் இருந்துகொண்டு, அங்குள்ள ஜனங்களோடு கிரியை செய்துகொண்டிருக்கிறார். 308 அந்தப் பெண்மணி தன்னுடையக் கரங்களை மேலே உயர்த்தியிருப்பதோடிருக்க, அவளுக்கு பக்கத்தில் ஒரு பெண்மணி உட்கார்ந்துகொண்டிருக்கிறாள். நான் அவளுடைய பரிசோதனையைக் காண்கிறேன். அவளுக்கு குடல் பதியில் ஏதோக் கோளாறு உள்ளது. பெண்மணியே, அது உண்மை. தேவன் உங்களை குணப்படுத்துவார் என்று நீங்கள் விசுவாசிக்கின்றீர்களா? உங்களுக்கு குடலில் கோளாறு உள்ளது. அது உண்மை. எனவே நீங்கள் உங்களுடையக் கரத்தை உயர்த்துங்கள். நீங்கள் இயேசுவை இப்பொழுதே உங்களுடைய சுகமளிப்பவராக ஏற்றுக்கொள்கிறீர்களா? இங்கிருந்து அதை வெளிப்படுத்தின தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், உங்களுடைய சுகமளித்தலை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் பெற்றுக்கொள்ளுங்கள். 309 ஒரு பெண்மணி தன்னுடையத் தலையைச் சுற்றிலும் ஏதோ ஒரு காரியத்தோடு இருப்பதை நான் காண்கிறேன். அது…ஒருவிதமாக காணப்படுகிறது…ஓ, அது சரியாக அவளுக்குப் பின்னால் அமர்ந்துள்ள பெண்மணியாய் உள்ளது, அதாவது அங்கே அமர்ந்துள்ள இரண்டாம் பெண்மணி. அவள் ஒருவிதமான தலைவலி உடையவளாயிருக்கிறாள். எப்போதுமே தலைவலி இருந்துகொண்டேயிருக்கிறது. என்னையே நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். அங்கு அமர்ந்துள்ள பெண்மணியே, நரைத்த தலையுடைய ஸ்திரீயே, தேவன் உங்களை குணப்படுத்துவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறீர்களா? [அந்த சகோதரி, “ஆம்” என்று கூறுகிறாள்.—ஆசி.] அது உண்மை. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அது முற்றுபெற்றுவிட்டது. நீங்கள் இப்பொழுது வீட்டிற்குச் செல்லலாம். அது அப்பொழுதே உங்களைவிட்டுப் போய்விட்டது. அது உண்மையானால் உங்களுடையக் கரத்தை உயர்த்துங்கள். அது உண்மையானால், உங்களுடையக் கரத்தை உயர்த்தி அசைத்துக் காட்டுங்கள். அது உங்களிடத்திலிருந்து போய்விட்டது. நீங்கள் சுகமடைந்துவிட்டீர்கள். 310 ஓ, கர்த்தராகிய இயேசுவின் நாமம் ஸ்தோத்தரிக்கப்படுவதாக! வாருங்கள், விசுவாசியுங்கள். பரிசுத்த ஆவியானவர் வரிசையில் அசைவாடிக்கொண்டிருக்கிறார். ஓ, எவ்வளவு அற்புதமானது! நீங்கள் அவரை விசுவாசிக்கிறீர்களா? [சபையோர் களிகூருகின்றனர்—ஆசி.] அவர் என்ன செய்துள்ளார் என்பதை நோக்கிப் பாருங்களேன்! இந்த உணர்வு என்னவாயுள்ளது என்றும், அது எப்படிப்பட்டது என்றும், மற்றொரு உலகத்தில் இருப்பது எப்படிப்பட்டது என்பதையும் என்னுடைய சபைக்கு என்னால் விளக்கிக் கூற முடிந்தால் நலமாயிருக்கும். அப்பொழுது நீங்கள் உண்மையாகவே கூடாரத்தில் இருக்கிறீர்களா அல்லது இல்லையா என்பதைக் குறித்து நீங்கள் வியப்படைவீர்கள். பயபக்தியாயிருங்கள். பயபக்தியாயிருங்கள். 311 யாரோ ஒருவர் மிகவும் தூரத்திலிருந்து வருகிறதை நான் காண்கிறேன். அது ஓர் இடத்திலிருந்து வருகிறது. அது ஒரு மனிதனாயுள்ளது. அவர் ஏராளமான மரங்கள் இருக்கின்ற ஒரு தேசத்திலிருந்து வருகிறார். அது வெர்ஜினியா. அவர் மூட்டுவீக்கத்தினால் அவதியுறுகிறார். தேவன் உங்களை குணப்படுத்துகிறார் என்றும், அவர் உங்களை சொஸ்தமாக்குகிறார் என்றும் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் அதை ஏற்றுக் கொள்வீர்களா? நீங்கள் ஏற்றுக்கொள்ளுகிறீர்களா? நீங்கள் மூட்டு வீக்கத்திலிருந்து சுகமடைய வேண்டும் என்று வெர்ஜினியாவிலிருந்து இங்கே வந்திருக்கிறீர்கள். அது சரியல்லவா? வழிநெடுக…ஆம் ஐயா. நீங்கள் இப்பொழுது குணமடைந்துவிட்டீர்கள். நீங்கள் திரும்பிப் போகலாம். உங்களுடைய இருதயக் கோளாறு உங்களைவிட்டுப் போய்விட்டது. எனவே வரிசையைவிட்டு, விலகி, திரும்பிச் செல்லுங்கள். நீங்கள் சுகமாயிருக்கிறீர்கள். தேவன் உங்களை சுகமாக்குகிறார். உங்களுடைய விசுவாசம் உங்களை இரட்சித்தது. 312 கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மேல் விசுவாசமாயிருங்கள். அவர் மரித்தோரிலிருந்து எழுந்துள்ளார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? [சபையோர், “ஆமென்” என்கிறார்கள்.—ஆசி.] அவருடைய உயிர்த்தெழுதலின் பிழையற்ற நிரூபணங்களாயிற்றே! [சகோதரன் பிரான்ஹாம் பேசாமல் நிறுத்துகிறார்.] விசுவாசமாயிருங்கள். 313 இப்பொழுது, ஐயா, என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். நான் உங்களை நீண்ட நேரம் பிடித்து வைத்திருப்பதற்காக வருந்துகிறேன். இது என்னுடையக் கட்டுப்பாட்டில் இல்லை. ஆனால் அது என்னை கட்டுப்படுத்துகிறது, நான் அதைக் கட்டுப்படுத்தவில்லை. அது என்னைக் கட்டுப்படுத்துகிறது. நான் பயங்கரமாகப் பலவீனமடைந்து கொண்டிருக்கிறேன் என்பதை என்னால் கூற முடியும். ஆனால் நான் யாரோ ஒருவருக்கு அருகில், ஒரு நரைத்த தலைமுடி கொண்ட மனிதனுக்கு அருகில் இருக்கிறேன் என்பதை நான் அறிவேன். நாங்கள்…நீங்கள் மூக்குக்கண்ணாடி அணிந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன். அது உங்களோடுள்ள ஏதோ ஒரு கோளாறாயிருக்கும். அது உங்களுடையக் கண்களில் இருக்கலாம். ஆனால் ஐயா, தேவன் உங்களைக் குறித்த எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார். அது உண்மையே. நீங்கள் குணமாக்கப்படுவதற்காகவே இங்கிருக்கிறீர்கள்…நீங்கள் நரம்புத்தளர்வுள்ள நிலையில் உண்மையாகவே நிலைகுலைந்து போயிருக்கிறீர்கள். அது உங்களுக்கு முற்றிலும் சோர்வுற்ற நிலை உண்டாகக் காரணமாயிருந்தது. உங்களுக்கு பிருக்கக் கோளாறு உள்ளது. அது உண்மையானால், உங்களுடையக் கரத்தை உயர்த்துங்கள். உங்களுக்கு இருதயக்கோளாறும்கூட உண்டு. அது உண்மை. உங்களுக்குத் தெரியும். பாருங்கள், நான் உங்களுடைய…காண்கிறேன், நான் உங்களை என்னுடைய ஜீவியத்தில் ஒருபோதும் கண்டதேயில்லை. ஆனால் உங்களுடையப் பெயரின் முதல் எழுத்துக்களில் A.A. மில்லர் என்று உள்ளது. சரி, நீங்கள் மௌன்ட் வேலி என்ற இடத்தில் இருக்கிறீர்கள். நீங்கள் சுகமடைந்து வீட்டிற்குச் செல்ல, உங்களுடைய சாலையில் இருக்கிறீர்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. களிகூர்ந்துகொண்டே சென்று விசுவாசியுங்கள். 314 திரு.மில்ஸ் அவர்களே, இது உங்களுக்கு எளிதானதாய் உள்ளது. இப்பொழுது நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடு விசுவாசித்துக்கொண்டே செல்ல வேண்டும். நான் உங்களுக்கு ஓர் அந்நியனாயிருக்கிறேன், உங்களை அறியேன், ஆனால் தேவன் அறிவார். அது சரிதானே? எல்லாக் காரியமும் போய்விட்டது என்று நீங்கள் உணருகிறீர்கள், இப்பொழுது சரிதானே? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. வீட்டிற்குப்போய், சுகமாயிருங்கள். நீங்கள் ஒவ்வொருவருமே! 315 இருதய நீர்க்கோவை வியாதி தேவனுக்கு எம்மாத்திரம்? அவரால் எந்த நேரத்திலும் அதை சுகப்படுத்த முடியும். நீங்கள் எப்போதும் ஓர் ஆரோக்கியமான ஸ்திரீயாக இருந்த கேம்ப்பெல்ஸ்பேர்க் என்ற இடத்திற்கே அவரால் உங்களை திரும்ப அனுப்ப முடியும். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? நான் உங்களை அறியேன். என்னுடைய ஜீவியத்தில் நான் உங்களை ஒருபோதும் கண்டதேயில்லை. நான் உங்களுக்கு ஓர் அந்நியனாய் இருக்கிறேன். ஆனால் அவர் உங்களை அறிந்திருக்கிறார், அதாவது நீங்கள் யாராயிருக்கிறீர்கள் என்றும், நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்பதையும் அறிந்திருக்கிறார். அது சரிதானே? அவர் அதை உங்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். அது சரி தானே? பாருங்கள், இந்த அபிஷேகம் இப்பொழுது என் மீது உள்ளது என்றும், அது உங்களையும், உங்களைக் குறித்த ஒவ்வொரு காரியத்தையும் தெரிவிக்கிறது என்றும் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? (நான் உங்களை இதற்கு முன்பும் ஒருபோதும் கண்டதேயில்லை), எனவே நான் என்னுடையக் கரங்களை உங்கள் மீது வைத்தால், நீங்கள் சுகம் பெறுவீர்களா? [அந்த சகோதரியோ, “ஆம்” என்கிறார்.—ஆசி.] 316 நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அந்தப் பிசாசைக் கடிந்துகொள்கிறேன். சாத்தானே, நீ வெளிப்படுத்தப்பட்டிருக்கிறாய். நீ இந்த ஜனங்களை நீண்ட காலமாகச் சாக்கடைகளினூடாக இழுத்து வைத்திருக்கிறாய். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இந்த ஸ்திரீயை விட்டு வெளியே வா. ஆமென். சந்தோஷமாய் உங்களுடையச் சாலையில் செல்லுங்கள். 317 உங்களுடைய முதுகில் உங்களுக்குத் தொல்லை உள்ளது. ஆனால் தேவனால் உங்களை குணப்படுத்த முடியும். அவரால் சுகப்படுத்த முடியாதா? அவரால் உங்களைக் குணப்படுத்த முடியுமே! அவர் அதை செய்திருக்கிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் அதை உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசித்தால் நலமாயிருக்கும். நான் தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இந்த சுகவீனத்தைக் கடிந்து கொள்கிறேன். நீங்கள் சென்று சுகமாயிருக்கலாம். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. போய், உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசியுங்கள். 318 நீங்கள் வாருங்கள். நீங்கள் உங்களுடைய முழு இருதயத்தோடு இப்பொழுது விசுவாசிக்கிறீர்களா? [அந்த சகோதரி, “ஆம்” என்று கூறுகிறாள்.—ஆசி.] நான் உங்களுக்கு ஓர் அந்நியனாய் இருக்கிறேன். நான் உங்களை அறியேன், உங்களைக் குறித்து ஒன்றுமே தெரியாது. எனக்குத் தெரிந்தமட்டில் நான் என்னுடைய ஜீவியத்தில் உங்களை ஒருபோதும் கண்டேதேக் கிடையாது. ஆனால் சர்வ வல்லமையுள்ள தேவன் உங்களை அறிந்திருக்கிறார். அவர் அறிந்திருக்கிறாரல்லவா? அவர் உங்களைக் குறித்த எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார். அவர் நீங்கள் யாராயிருக்கிறீர்கள் என்பதையும் உங்களைக் குறித்த ஒவ்வொரு காரியத்தையும் அறிந்திருக்கிறார். எனக்குத் தெரியாது, நான் அதை அறிந்துகொள்ள வழியேக் கிடையாது, ஆனால் அவர் அறிந்திருக்கிறார். ஆனால் நீங்கள் அவருடைய பிரசன்னத்தில் நின்றுகொண்டிருக்கிறீர்கள் என்றும், உங்களுடைய சகோதரனுடையப் பிரசன்னத்தில் அல்லவென்றும், அந்த ஸ்திரீயை நோக்கிப் பார்த்து, அவளுடையத் தொல்லை என்னவாயிருந்தது என்பதை அவளிடத்தில் கூறின அவருடையப் பிரசன்னத்தில் நின்றுகொண்டிருக்கிறீர்கள் என்றும் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? [“ஆம்.”] நான் உங்களுக்கும் எனக்குமிடையே ஒரு மேஜை வருகிறதைக் காண்கிறேன், நீங்கள் அதிலிருந்து பின்னோக்கிச் சென்றுகொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு வயிற்றுக் கோளாறு உள்ளது. அதுவே உங்களுக்கு வயிற்றில் செமிப்பதற்கு உதவியான இரைப்பையில் சீழுடன் கூடிய இரணப்புண் உண்டாகக் காரணமாயிருந்தது. இப்பொழுது நீங்கள் போய் உங்களுடையப் பிரதான பகல் விருந்தினைப் புசியுங்கள். இயேசு கிறிஸ்து உங்களை குணமாக்குகிறார். போய், உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசியுங்கள். [“கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!”] 319 வாலிப நபரே, வாருங்கள். நீங்கள் என்னை அவருடைய தீர்க்கதரிசியென்று விசுவாசிக்கிறீர்களா? [அந்த சகோதரன், “நான் விசுவாசிக்கிறேன்” என்று கூறுகிறார்.—ஆசி.] உங்களுடைய முழு ஆத்துமாவோடு நீங்கள் அதை ஏற்றுக்கொள்ளுகிறீர்களா? நான் உங்களுக்கு ஓர் அந்நியனாயிருக்கிறேன். ஆனால் தேவன் உங்களை அறிந்திருக்கிறார். அது சரியல்லவா? [“ஆம். அது சரியே.”] நீங்கள் இருதயக் கோளாறு நீங்கி சுகமடைய வேண்டும் என்று விரும்புகிறீர்களா? [“நான் விரும்புகிறேன்.”] சரி, களிகூர்ந்துகொண்டே உங்களுடையச் சாலையில் செல்லுங்கள். [“அல்லேலூயா.”] உங்களுடைய விசுவாசம் உங்களை முழுமையாய் சொஸ்தமாக்குகிறது, உங்களை குணப்படுத்தி உங்களை ஆரோக்கியமுடையவராக்குகிறது. 320 பெண்மணியே. நீங்கள் வருவீகளா? உங்களுக்கும் கூட வயிற்றுக் கோளாறு இருந்தது. ஒரு சில நிமிடங்களுக்கு முன்னால் வயிற்றுக் கோளாரோடிருந்த அந்தப் பெண்மணி குணமாக்கப்பட்ட போது, உண்மையாகவே ஒரு விநோதமான உணர்வு உங்கள் மீது உண்டானது, அவ்வாறு உண்டாகவில்லையா? அதே நேரத்தில் நீங்களும் சுகமாக்கப்பட்டீர்கள். உங்களுடைய சாலையிலே போய், உங்களுடையப் பிரதான பகல் விருந்தினை புசித்து, சுகமடையுங்கள். 321 என் சகோதரனே, நான் ஒரு காரியத்தைக் கூற விரும்புகிறேன். தேவன் உங்களை அறிந்திருக்கிறார். உங்களுக்கும் எனக்குமிடையே ஒரு கருத்த நிழல் நிற்கிறது. அது மற்றெந்த வியாதியும் ஜனங்களைக் கொல்லுவதைக் காட்டிலும் ஜனங்களை அதிகமாகக் கொல்லுகிற வியாதியாய் உள்ளது. அது இ௫தயக் கோளாறாய் உள்ளது. உங்களுக்கு உங்களுடைய இ௫தயத்தில் ஒ௫ கசிவு உள்ளது நீங்கள் அதிலிருந்து சுகம்பெற முடியாது என்று அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிறார்கள். ஆனால் நீங்கள் சுகம் பெற முடியும் என்பதை தேவன் அறிந்தி௫க்கிறார். தேவன் இப்பொழுதே உங்களை சுகப்படுத்துவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? [அந்த சகோதரன், “ஆம்” என்று கூறுகிறார்.—ஆசி.] இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுடைய சுகமளித்தலை ஏற்றுக்கொண்டு, இந்த மேடையிலிருந்து ஓர் ஆரோக்கியமான மனிதராகச் செல்லுங்கள். போய், துதி செலுத்துங்கள், தேவனுக்கே மகிமை! [“என் ஆண்டவரே, உமக்கு நன்றி.”] 322 உங்களோடிருந்த கோளாறும் அதேக் காரியம்தான். இந்த உங்களுடைய நிலைமையே அஞ்சி நடுங்குகிற ஓர் இருதயக் கோளாறு உண்டாகக் காரணமாயிருந்தது. அது உண்மை. இப்பொழுது நீங்கள் சுகமடைந்துவிட்டீர்கள் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால் களிகூர்ந்துகொண்டே உங்களுடைய வீட்டிற்குத் திரும்பிச் சென்று, தேவனுடைய மகிமைக்காக சுகமாயிருங்கள். 323 பெண்மணியே, இங்கே நோக்கிப் பாருங்கள். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அப்படிய ஒரு நிமிடம். [சகோதரன் பிரான்ஹாம் பேசாமல் நிறுத்துகிறார்—ஆசி.] நாம் ஒருவருக்கொருவர் அந்நியர்களாயிருக்கிறோம். நாம் ஒருவரையொருவர் அறியோம். 324 ஆனால் மேடையிலிருந்து…இல்லை அந்தப் பெண்மணி இங்கே நடந்து வந்தபோது, ஜனங்களிடத்திலிருந்து ஒரு பயங்கரமான அதிர்ச்சி உண்டானது. ஓ, அது முழு கூட்டத்தார் மீதும் உள்ளது. 325 ஒரு நிமிடம், இந்த விதமாய் நோக்கிப் பாருங்கள். பெண்மணியே, என்னுடைய ஜீவியத்தில் உங்களை நான் ஒருபோதும் கண்டதேயில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். எனக்கு உங்களைக் குறித்து ஒன்றுமேத் தெரியாது. தேவன் மாத்திரமே உங்களை அறிந்திருக்கிறார். ஆனால் நான் உங்களைக் காண்கிறேன், நீங்கள்—நீங்கள் முற்றிலும் நிலைகுலைந்துபோயிருக்கிறீர்கள். அது நரம்புத் தளர்ச்சியாயுள்ளது. நீங்கள் ஒரு மனநிலை பாதிப்புக்குள்ளாகியிருக்கிறீர்கள். நீங்கள் எல்லா நேரத்திலுமே பொருட்களைக் கீழே விழும்படி தவறவிடுகிறீர்கள். நீங்கள் உணவு உண்ணும் பாத்திரங்களையும் மற்றப் பொருட்களையும் கீழே தவறவிடுவதை நான் காண்கிறேன். நீங்கள் இங்கே வருவதற்கு முன்னர் அந்த இடத்திற்கு அருகில் இருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்து ஜெபித்துக்கொண்டிருந்தீர்கள். நீங்கள் இங்கு வரமுடிந்து, அப்பொழுது நான் உங்கள் மேல் கரங்களை வைத்தால், நீங்கள் சுகமடைவீர்கள் என்றே தேவனிடம் வேண்டிக்கொண்டீர்கள். அது உண்மை. அது உண்மையாயிருக்கவில்லையா? உங்களுடையக் கரங்களை உயர்த்துங்கள். அது உண்மை. அது ஓர் ஆவியாயுள்ளது. அந்தக் காரியம் கூட்டத்தாரின் மேல் உள்ளது. 326 அங்கே அமர்ந்துள்ள அந்தப் பெண்மணி, ஒரு வேதாகம ஆசிரியை, அதேக் காரியத்தினால் அங்கே அமர்ந்து அவதியுற்றுக்கொண்டிருக்கிறாள். பெண்மணியே, பிசாசு உங்களிடத்தில் பொய்யுரைத்துக் கொண்டிருக்கிறான். நீங்கள் விடுவிக்கப்பட ஆயத்தமாயிருக்கிறீர்கள். 327 கட்டிடம் முழுவதும், இங்கும், எங்கும் அங்கே நோக்கிப் பாருங்கள். இதோ மற்றொருவர் இங்கே அமர்ந்திருக்கிறார். அப்பால் ஒருவர் இருக்கிறார். இதோ இங்கே ஒருவர் இருக்கிறார். ஓ! 328 நரம்புத் தளர்வு கோளாரோடு உள்ள நீங்கள் ஒவ்வொருவரும் அப்படியே ஒரு நிமிடம் எழும்பி நில்லுங்கள். நீங்கள் விரும்பினால், எழும்பி நில்லுங்கள். இப்பொழுது ஒவ்வொருவரும் உங்களுடையத் தலையை வணங்கியேயிருங்கள். 329 ஓ, சாத்தானே, நீ பொல்லாத ஆவியாயிற்றே! நீ வெளிப்படுத்தப்பட்டிருக்கிறாய். இந்த ஜனங்களை விட்டு வெளியே வா. நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உன்னை கடிந்துகொள்கிறேன். இந்த ஜனங்களை விட்டுப் போ, வெளியே வா. 330 பெண்மணியே, இப்பொழுது இங்கே நோக்கிப் பாருங்கள். அப்படியே ஒரு நிமிடம். இப்பொழுது நீங்கள் விடுதலையாயிருக்கிறீர்கள். அது முழுமையாய் உங்களை விட்டுப் போய்விட்டது. நான் கேட்டுக்கொள்ள…விரும்புகிறேன்…நீங்கள் ஒவ்வொருவரும் சுகமடைந்திருக்கிறீர்கள். உங்களுடைய முழு குழுவுமே குணமடைந்துள்ளது. அந்தப் பொல்லாங்கு உங்களை விட்டு நீங்கிவிட்டது. இப்பொழுது நீங்கள் உண்மையாகவே அமைதியை உணருகிறீர்கள். [அந்த சகோதரியோ, “ஆம்” என்று கூறுகிறாள்.—ஆசி.] நீங்கள் இப்பொழுது சரியாயிருக்கிறீர்கள். இப்பொழுது உங்களுடைய சாலையில் நீங்கள் மகிழ்ச்சியாய் களிகூர்ந்து கொண்டே சென்று, அதற்காக தேவனுக்கு நன்றி கூறுங்கள். சரி. 331 ஐயா, வாருங்கள். நீங்களும் நானும் ஒருவருக்கொருவர் அந்நியர்களாயிருக்கிறோம். நாம் ஒருவரையொருவர் அறியோம். நான் என்னுடைய ஜீவியத்தில் உங்களை ஒருபோதும் கண்டதேயில்லை. தேவன் உங்களை அறிந்திருக்கிறார். [சகோதரன் பிரான்ஹாம் பேசாமல் நிறுத்துகிறார்.—ஆசி.] ஐயா, இங்கே நோக்கிப் பாருங்கள். ஒரு நிமிடம் அப்படியே என்னை நோக்கிப் பாருங்கள். 332 இப்பொழுது கூட்டத்தாரே, இதோ ஓர் அந்நியர் இருக்கிறார். நான் அந்த மனிதனை ஒருபோதும் கண்டதேயில்லை. நான் அவரை அறியேன், அவரை ஒருபோதும் கண்டதுமில்லை. தேவன் அதை அறிந்திருக்கிறார். நான் அறிந்தமட்டில் என்னுடைய ஜீவியத்தில் நான் அவரை ஒருபோதும் கண்டதேயில்லை. 333 ஆனால் இயேசு மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்து விட்டார் என்று நான் வலியுறுத்திக் கூறுகிறேன். அதாவது நீங்கள் காணக்கூடிய ஒரு சரீரத்தில் இயேசுவானவர் இங்கே இருந்தபோது செய்த அதேக் காரியங்களையே இன்றைக்கு அவர் இங்கே செய்துகொண்டிருக்கிறார். அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறார். கர்த்தராகிய இயேசுவின் மேல் விசுவாசமாயிருந்து, இந்தக் காரியங்களைக் காண்கிற உங்களுடையக் கண்கள் பாக்கியமுள்ளவைகளே! 334 இந்த மனிதன் ஓர் அந்நியனாயிருக்கிறார். நான் அவரை ஒருபோதும் கண்டதேயில்லை, ஒருவேளை அவரும் என்னை ஒருபோதும் காணாதவராயிருக்கலாம். நான்…நான் எப்போதாவது அவரைப் பார்த்திருப்பேனேயானால், அது எனக்கு ஞாபகமில்லை என்பதை தேவன் அறிந்திருக்கிறார். அவர் எனக்கு ஓர் அந்நியனாய் இருந்தார் என்று அவரே கூறினார். ஆனால் தேவன் அவரை அறிந்திருக்கிறார். எனக்கு முற்றிலும் அந்நியனாக இங்கே நின்றுகொண்டிருக்கிற அந்த மனிதனைக் குறித்தும், அவரோடுள்ள கோளாறு என்னவென்றும், அதைக் குறித்த எல்லாவற்றையும், அவரோடுள்ள கோளாறு என்ன என்பதைக் குறித்தும், அது என்னவாயிருந்தாலும் தேவன் அதை என்னிடத்தில் வெளிப்படுத்திக் கூறுவாரேயானால், அப்பொழுது அதைக் குறித்து எனக்கு ஒன்றுமே தெரியாது என்பதை அவர் அறிந்திருக்கிறார். அப்பொழுது நீங்கள் ஒவ்வொருவரும் கிறிஸ்துவை உங்களுடைய சுகமளிப்பவராக ஏற்றுக்கொள்வீர்களாக? [சபையோர், “ஆமென்” என்று கூறுகின்றனர்.—ஆசி.] 335 கட்டிடமோ மங்கலாகி, பின்னர் தெளிவாக தெரியத் துவங்குகிறது. நண்பர்களே, நான் உங்களிடத்தில் பேசிகொண்டிருக்கிறக் காரணத்தை நீங்கள் தெளிவாக அறிந்திருந்தால் நலமாயிருக்குமே! நீங்கள் வேறொரு உலகத்திற்குள் செல்கிறீர்கள். நீங்கள் ஒரு வித்தியானமான இடத்தில் இருக்கிறீர்கள். நீங்கள் யாரோ ஒருவருடைய வாழ்க்கையின் கடந்த காலத்திற்குள் இருக்கிறீர்கள். அவர்கள் யாரென்றும், அவர்கள் எங்கேயிருக்கிறார்கள் என்பதையும் நான் பார்க்கிறேன், நான் அவர்களைப் பார்க்கிறேன். நீங்கள் அதை தெளிவாக அறிந்துகொள்ளவில்லை. நான் அதை தெளிவாகக் காண இயலவில்லை, அது இங்கே பரிபூரணமாகக் காணப்படவில்லை, ஏனென்றால் அது ஒரு வீடாய் உள்ளது. அது உண்மை. ஆனால் அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்துவிட்டார் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளுகிறீர்கள். நான் உங்களுக்கு சத்தியத்தைக் கூறியிருக்கிறேன் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுகிறீர்கள். 336 இப்பொழுது ஐயா, நீங்களும் நானும் கர்த்தராகிய இயேசுவோடு தொடர்புகொள்ளும்படியாக அப்படியே ஒரு நிமிடம் என்னை நோக்கிப் பாருங்கள். நான் அவருடைய ஊழியக்காரனாயிருந்தால், இயேசு, “நான் செய்கிற கிரியைகளை நீங்களும் கூட செய்வீர்கள்” என்றார். 337 “இன்னும் கொஞ்சகாலத்திலே உலகம் என்னைக் காணாது,” அது அவிசுவாசி. அவர்கள் பந்து விளையாட்டுக்கள், நீச்சல் குளங்கள் போன்றவற்றிற்கு சென்றுவிடுவார்கள். அவர்கள் அவரை ஒருபோதும் காணமாட்டார்கள். 338 “ஆனால் நீங்கள் என்னைக் காண்பீர்கள், ஏனென்றால் உலகத்தின் முடிவுபரியந்தம் நான் உங்களோடும், உங்களுக்குள்ளும் இருப்பேன்.” 339 அப்படியானால் அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்திருக்கிறாரென்றால், அவர் இங்கே இந்தக் காலையில் நின்றுகொண்டிருப்பாரேயானால், இப்பொழுது நான் பெற்றுள்ள இந்த அபிஷேகம் என்னுடையதாயிருக்கவில்லை, ஆனால் அதுவோ அவருடையதாயிருக்கிறது. அப்படியானால் நீங்கள் கொண்டிருந்த உங்களுடைய வாழ்க்கையை உங்களால் மறைக்க முடியாது, ஏனென்றால் நாம் ஒருவருக்கொருவர் ஆவியானவரால் தொடர்பு கொண்டுள்ளோம். நீங்கள் எதற்காக இங்கே நின்றுகொண்டிருக்கிறீர்கள் என்பதை தேவனால் எனக்கு வெளிப்படுத்தக் கூடுமானால், அப்பொழுது நீங்கள் உங்களுடைய முழு இருதயத்தோடு அதை ஏற்றுக்கொள்ளுவீர்களா? [அந்த சகோதரன், “ஆம், ஐயா” என்கிறார்.—ஆசி.] நீங்கள் அதை ஏற்றுக் கொள்வீர்களா? [“ஆம், ஐயா”.] 340 நீங்கள் ஒரு வயிற்றுக் கோளாறினால் அவதியுற்றுக் கொண்டிருக்கிறீர்கள். [அந்த சகோதரன், “அது உண்மையே” என்று கூறுகிறார்.—ஆசி.] அது முற்றிலும் உண்மை. அதற்குக் காரணமென்னவென்றால் நீங்கள் ஒரு…அது ஒரு நரம்புத்தளர்ச்சி நிலையிலிருந்தே இது உண்டாகக் காரணமாயிற்று. அது ஒரு நரம்புத் தளர்ச்சி அல்ல, வெளிப்புறத்தில் நடுக்கங்கொள்ளும் நரம்புத்தளர்வு. நீங்கள் ஆழ்ந்து சிந்திக்கும் ஒருவர் என்பதை நான் காண்கிறேன். நீங்கள் ஏதோ ஒரு காரியத்தை எப்பொழுதுமே திட்டமிட்டுக் கொண்டிருக்கிறீர்கள், நீங்கள் பாலங்களை கடப்பதற்கு முன்பு அவைகளைக் குறித்து சிந்திக்கிறீர்கள். நீங்கள் ஒருபோதும் நிறைவேறாத காரியங்களையே வலிந்து செய்ய விரும்புகிறீர்கள். அது உங்களுக்கு முன்னமே கூறப்பட்டுள்ளது. அது உண்மை. ஆனால் அவைகளைக் குறித்து கூறுவது உங்களுக்கு எந்த நன்மையும் செய்கிறதில்லை, ஏனென்றால்…ஆனால் இப்பொழுதோ அது கிரியை செய்யும், ஏனென்றால் நீங்கள் சுகமடைந்திருக்கிறீர்கள். நீங்கள் ஓர் ஆரோக்கியமுள்ள மனிதனாக வீட்டிற்கு போய்க்கொண்டிருக்கிறீர்கள். இயேசு கிறிஸ்து உங்களை முழுமையாய் சொஸ்தமாக்கியிருக்கிறார். 341 நான் தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இந்த மனிதனை அடிக்கடி அலைக்கழித்து வந்த ஒவ்வொரு பொல்லாத ஆவியையும் கடிந்துகொள்ளுகிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தின் மூலமாக அவர் சமாதானமாய்ச் செல்வாராக. ஆமென். 342 [அந்த சகோதரன், “சகோதரனே, உங்களுக்கு நன்றி. நானும் கூட உங்களை நினைவுகூறுவேன்” என்கிறார்.—ஆசி.] தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 343 நீங்கள் விசுவாசித்துக்கொண்டிருக்கிறீர்களா? [சபையோர், “ஆமென்” என்று கூறுகின்றனர்.—ஆசி.] உங்களுடைய முழு இருதயத்தோடா? [“ஆமென்”] இயேசு கிறிஸ்து ஈஸ்டரிலே உயிர்த்தெழுந்தார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? [“ஆமென்”] இப்பொழுது அவருடையப் பிரசன்னம் இங்கே உள்ளது என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? [“ஆமென்”] நான் அவருடையத் தீர்க்கதரிசியாயிருக்கிறபடியால், நீங்கள் எனக்கு கீழ்ப்படிவீர்களா? [“ஆமென்”] நீங்கள் அவ்வாறு கீழ்ப்படிவீர்களேயானால், அவ்வண்ணமாயிருக்கிற காரணத்தால், நீங்கள் ஒவ்வொருவரும் இப்பொழுதே சுகமடையக் கூடும். இங்குள்ள ஒவ்வொரு நபரும் குணமடையக்கூடும். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? [“ஆமென்”] அப்படியானால் உங்களுடையத் தலையைத் தாழ்த்துங்கள். 344 சர்வ வல்லமையுள்ள தேவனே, ஜீவனின் ஆக்கியோனே, ஒவ்வொரு நன்மையான ஈவையும் தருபவரே, உம்முடைய தெய்வீக ஆசீர்வாதங்களை இந்தக் கூட்டத்தாரின் மீது அனுப்பும். இப்பொழுது உம்முடைய ஆவி அசைவாடுகின்றபடியால், இங்கே இந்தக் கூட்டத்தில் இந்தக் கட்டுப்பாட்டில் இங்கு உள்ள ஒவ்வொரு அசுத்த ஆவியையும், வியாதியாயுள்ள ஜனங்களை கட்டி வைத்திருக்கிற ஒவ்வொரு பிசாசையும் நான் கடிந்துகொள்கிறேன். கிறிஸ்து இங்கே இருக்கிறார், அவரே வாசல்களைத் திறந்து, சிறைப்பட்டோரை விடுதலையாக்கினார். இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தக் காரணத்தால், அவர் தம்மை இன்றைக்கு இங்கே நிரூபிக்கிற காரணத்தால், அவர்கள் ஒவ்வொருவரும் விடுதலையாயிருக்கிறார்கள். சாத்தானே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இந்த ஜனங்களை விட்டு வெளியே வா. 345 இப்பொழுது விசுவாசிக்கிற ஒவ்வொருவரும்…என்ன நிலைமையில் இருந்தாலும் எனக்குக் கவலையில்லை. அங்கே கக்கத்தண்டங்களில் உள்ள நீங்கள் எழும்பி நில்லுங்கள். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஒவ்வொரு நபரும் எழும்பி நின்று ஆரோக்கியமடைந்து குணமடைவார்களாக.